நாளை தற்காலிக சந்தைகள் இயங்காது.. இன்று இரவே காய்கறி விற்பனை.. திருச்சி ஆட்சியர் அதிரடி!
திருச்சி நகரில் உள்ள10 தற்காலிக காய்கறி சந்தைகள் 17-ந்தேதி செயல்படாது
திருச்சி: கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக திருச்சி காந்தி மார்க்கெட் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதில் இருந்து மூடப்பட்டது. இதையடுத்து காய்கறிகள் மொத்த வியாபாரம் திருச்சி பொன்மலை ஜி கார்னர் மைதானத்தில் நடந்து வருகிறது.
திருச்சியில் மொத்தம் 67 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு 56 பேர் குணமடைந்து உள்ளனர். இன்னும் 11 பேர் அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த நிலையில் திருச்சியில் கொஞ்சம் கொஞ்சமாக தளர்வுகள் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த நிலையில் திருச்சி காந்தி மார்க்கெட் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதில் இருந்து மூடப்பட்டது. இதையடுத்து காய்கறிகள் மொத்த வியாபாரம் திருச்சி பொன்மலை ஜி கார்னர் மைதானத்தில் நடந்து வருகிறது.
பொதுமக்கள் காய்கறிகள் வாங்குவதற்காக 10 இடங்களிலும் தற்காலிக காய்கறி சந்தைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த தற்காலிக காய்கறி சந்தைகள் அனைத்தும் மே 17-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மொத்த காய்கறி வியாபாரிகள் சங்கத்தின் வேண்டுகோளை ஏற்று செயல்படாது.
மேலும் பொன்மலை ஜி கார்னர் பகுதியில் இயங்கி வரும் காய்கறி மொத்த வியாபார கடைகள் நாளை (சனிக்கிழமை) இரவு செயல்படாது என்று கலெக்டர் எஸ்.சிவராசு அறிவித்து உள்ளார்.மேலும் பொதுமக்களின் நலன் கருதி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு விடுத்த வேண்டுகோளை ஏற்று இன்று (வெள்ளிக்கிழமை) இரவு மொத்த மற்றும் சில்லரை வியாபாரத்தை நடத்திக்கொள்ள மாவட்ட கலெக்டர் அனுமதி அளித்து உள்ளார்.
ஆகவே காய்கறி மொத்தம் மற்றும் சில்லரை வியாபாரிகள் அரசு அறிவித்து உள்ள கட்டுப்பாடுகளை பின்பற்றி முககவசம் அணிந்து கொண்டும், போதிய சமூக இடைவெளியை கடைப்பிடித்தும் இன்று இரவு தங்கள் வணிகத்தை தொடரலாம்.
-
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications