நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் ஊரில் நத்தை வேகத்தில் நடக்கும் பணிகள்! கண்டும் காணாமல் அதிகாரிகள்!
திருச்சி: நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேருவின் ஊரான திருச்சியில் நடைபெற்று வரும் மாநகராட்சி பணிகள் நத்தை வேகத்தில் நடந்து வருகின்றன.
குறிப்பாக திருச்சியின் நுழைவு வாயிலான கருமண்டபம் பகுதியிலிருந்து அரிஸ்டோ ரவுண்டானா பகுதிக்கு செல்வதற்குள் வாகன ஓட்டிகளுக்கு போதும் போதும் என்றாகி விடுகிறது. இதற்கு காரணம் ஒரு பக்கம் சாலை அமைக்கும் பணிகள், மற்றொரு பக்கம் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணிகள் நடந்து வருவதால் அப்பகுதியே புகைமண்டலமாக காட்சி அளிக்கிறது.

காலை மாலை பீக் ஹவர்களில் சொல்லவே தேவையில்லை. ஒவ்வொரு வாகனமும் திருச்சிக்குள் நுழைவதற்கும், திருச்சியிலிருந்து வெளியே செல்வதற்கும் குறைந்தது 45 நிமிடம் முதல் ஒரு மணி நேரம் ஆகிவிடுகிறது. ஒப்பந்தப் பணிகளை மேற்பார்வையிட்டு தொடர்ந்து கண்காணித்து துரிதப்படுத்த வேண்டிய உதவி செயற்பொறியாளர்களோ, நிர்வாக பொறியாளர்களோ கண்டும் காணாமல் இருந்து வருகின்றனர்.
இதற்கு காரணம் நாம் சொன்னால் ஒப்பந்ததாரர்கள் கேட்கவா போகிறார்கள் என்ற ஐயம் தான். கருமண்டபம் பகுதியில் ஒரு பக்கம் மட்டும் சாலை அமைக்கப்பட்டுள்ளது. அதுவும் குறுகிய அளவில் அமைக்கப்பட்டுள்ளது. பொதுவாக மாநகரப் பகுதிகளில் ஒப்பந்தப் பணிகள் எடுப்போர் இரவு பகலாக அதிக ஆட்களை பணிக்கு அமர்ந்தி வேலையை விரைந்து முடிப்பது தான் வழக்கம். அப்போது தான் போக்குவரத்துக்கு சிரமம் இருக்காது.
ஆனால் திருச்சி மாநகரில் அதற்கு தலைகீழாக நடந்து வருகிறது. இது குறித்து அதிகாரிகளும், அமைச்சர் கே.என்.நேருவும் கவனத்தில் கொண்டு பணிகளை விரைந்து முடித்து போக்குவரத்தை சீர் செய்வதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும் என்பது திருச்சி கருமண்டபம் பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.
-
திருச்சி நர்சிங் மாணவி உயிரிழப்புக்கு தரமற்ற மருந்தே காரணம்.. ஆய்வறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல் -
திருச்சியில் கார் ஓட்டுநரால் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. மது கொடுத்து பாலியல் தொல்லை! -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
திருச்சி மேடையில் அதை பேசியிருக்கனும்.. முதல்வர் விஜய்யின் உரை ஏமாற்றம்! ஆதங்கப்பட்ட அன்புமணி -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications