ஊழல் பணம் எல்லாம் ஒரே குடும்பத்துக்கு போகிறது.. திருச்சியில் திமுகவை அட்டாக் செய்த மோடி!
திருச்சி: திருச்சி பஞ்சப்பூரில் பேசிய பிரதமர் மோடி தமிழகத்தில் உள்ள ஊழல் பணம் எல்லாம் எப்படி ஆறுகள் எல்லாம் கடைசியில் கடலில் சேர்கிறதோ அப்படி ஊழல் பணம் எல்லாம் கடைசியில் ஒரே குடும்பத்திடம் சென்று சேர்வதாக கூறினார்.
தமிழகத்திற்கு இந்த ஆண்டில் இரண்டாவது முறையாக வருகை தந்துள்ளார் பிரதமர் மோடி. இன்று திருச்சி வந்த அவர் தமிழகத்தில் ரூ.5,655 கோடிக்கும் அதிகமான வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்துள்ளார். ராமேஸ்வரம் - மங்களூர் விரைவு ரயில் உட்பட 5 ரயில் சேவைகளையும் மோடி இன்று தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து திருச்சி என்.டி.ஏ பொதுக்கூட்டத்தில் மோடி பங்கேற்றார். அப்போது அவர், அனைவருக்கும் வணக்கம் என்று கூறி உரையை தொடங்கினார். மோடி பேசியதாவது:-திருச்சியில் உங்கள் முன்பு நான் இருப்பது மிகவும் அற்புதமான தருணம். வீரத்துக்கும் பெருமைக்கும் சொந்தமான மண் திருச்சி.. மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புகிறார்கள்.. திமுக அரசை தூக்கி எறிய மக்கள் விரும்புகிறார்கள்.. என்.டி.ஏவால் மட்டுமே மாற்றத்தை கொண்டு வர முடியும் என மக்கள் நம்புகிறார்கள்.
கடந்த முறை தமிழகம் வந்த போது திருச்சி ஸ்ரீரங்கத்தில் அழகு கொஞ்சும் தமிழில் கம்பராமாயணத்தை கேட்டு மகிழ்ந்தேன்.. தமிழ்நாட்டின் புதல்வர் சிபி ராதாகிருஷ்ணன் துணை குடியரசு தலைவர் ஆகியிருக்கிறார்..
2021 ஆம் ஆண்டில் திமுக அரசு அமைந்தது. திமுக ஆட்சியில் ஒரு குடும்பத்தில் இருந்து தொடங்கி ஒரே குடும்பத்தோடு முடிகின்றது. அமைச்சர்கள் மாறலாம்.. சட்டசபை மாறலாம். ஆனால் அதிகாரம் என்னவோ ஒரே குடும்பத்திடம் மட்டுமே இருக்கும். விஞ்ஞான ரீதியான ஊழல். இந்த மாதிரிக்கு பெயர் போனது தான் திமுக. இந்த மாதிரி தான் ஒரே ஒரு குடும்பத்தின் ஏடிஎம்-ஆக மாற்றியிருக்கிறது.
திருச்சியில் உள்ள ஒரு தலைவர் வேலைவாங்கி தருவதாக பெரிய மோசடியில் சிக்கியிருக்கிறார். வேலை பணத்திற்காக விற்கப்படும் போது ஒரு ஏழை மாணவரின் வாழ்க்கை கனவாக போகின்றது. இந்த பணம் எல்லாம் எங்கே போகிறது.. எப்படி அனைத்து ஆறுகளும் கடலில் சென்று சேர்கிறதோ அதேபோல தமிழத்தின் ஊழல் பணம் எல்லாம் ஒரு குடும்பத்தை சென்று சேர்கிறது. அதன் குடும்ப சொத்தாக ஆகின்றது. இவ்வாறு அவர் கூறினார்.
-
திருச்சி நர்சிங் மாணவி உயிரிழப்புக்கு தரமற்ற மருந்தே காரணம்.. ஆய்வறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல் -
திருச்சியில் கார் ஓட்டுநரால் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. மது கொடுத்து பாலியல் தொல்லை! -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
இந்தியாவில் வீடுகளில் தேங்கி கிடக்கும் 32,000 டன் தங்கம்.. மறுசுழற்சி செய்ய விரும்பும் மோடி! ஏன்? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications