கொதிக்கிற எண்ணெயில் அண்ணாமலை எவ்வளவு அழகாக முறுக்கு சுடுறாரு பாருங்க.. தொண்டர்கள் செஞ்சதுதான் ஹைலைட்
திருச்சி: திருச்சி மாவட்டம் மணப்பாறை சென்ற பாஜக மாநில தலைவர் அண்ணாமலை,அங்கு திடீரென்று கொதிக்கும் எண்ணெய்யில் சுடசுட முறுக்கு சுட்டார். அப்போது தொண்டர்கள் உணர்வுப்பூர்வமாக 'பாரத் மாதாகி ஜே' என்று உற்சாக குரல் எழுப்பினார்கள். தொடர்ந்து முறுக்குகளை சாப்பிட்டார்கள். இதனால் என் மண், என் மக்கள் பேரணி கலகலத்து போனது.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை 'என் மண் என் மக்கள்' என்ற பெயரில் ஒவ்வொரு ஊரிலும் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். ராமேஸ்வரத்தில் தொடங்கிய அண்ணாமலையின் இந்த நடைபயணம் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நடந்து முடிந்தது.

யாத்திரை செல்லும் ஊர்களில் மக்களின் குறைகளை கேட்கும் அண்ணாமலை, அங்கு தொண்டர்களை உற்சாகப்படுத்த பல்வேறு செயல்களை செய்து வருகிறார். நேற்று மாலை திருச்சி மாவட்டம் மணப்பாறையில் 'என் மண் என் மக்கள்' யாத்திரையை அண்ணாமலை மேற்கொண்டார். பொதுவாக தமிழ்நாட்டில் மணப்பாறை நகரம் முறுக்குக்கு மிகவும் பிரபலம் ஆனது. மணப்பாறை முறுக்கு தமிழகத்தின் பல்வேறு கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த மணப்பாறை முறுக்கின் ருசிதான் தனித்துவம் ஆகும்.
நேற்று மணப்பாறையில் வீதி வீதியாக சென்ற அண்ணாமலைக்கு பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது காமராஜர் சிலை அருகே தெருவோர முறுக்கு கடைக்கு சென்ற அண்ணாமலை, அங்கு முறுக்கு போட்டுக்கொண்டிருந்தவரிடம் பேசிக்கொண்டிருந்தார். தொடர்ந்து தொண்டர்கள் முறுக்கு போடுமாறு அண்ணாமலையிடம் வேண்டுகோள் வைத்தனர்.
தொண்டர்களின் வேண்டுகோள் ஏற்று முறுக்கு பிழியும் உலக்கை வாங்கி, கரண்டியின் மீது வைத்து முறுக்கு பிழிந்தார். பின்னர் அழகாக அப்படியே எடுத்து கொதிக்கும் எண்ணெய் சட்டியில் முறுக்கினை பக்குவமாக உள்ளே இறக்கினார். அப்போது தொண்டர்கள் பாரத் மாதாகி ஜே என்று குரல் எழுப்பினார்கள். தொடர்ந்து முறுக்கு அழகாக பிரிந்து மேலே வந்தது.
இதனிடையே அங்கிருந்த பாஜக தொண்டர்களுக்கும், மாநில தலைவர் அண்ணாமலைக்கும் முறுக்கு கடைக்கார் முறுக்கு கொடுத்தார். அதை அவர்கள் ரசித்து சாப்பிட்டனர். தொடர்ந்து முறுக்கு கடைகக்கார், இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கொடுக்குமாறு முறுக்குகளை பார்சல் கட்டி அண்ணாமலையிடம் கொடுத்தார். அப்போது பாஜக தொண்டர்கள் உற்சாகத்துடன் பாரத் மாதகி ஜே என்று குரல் எழுப்பியபடி இருந்தனர். இது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி உள்ளது. ஏற்கனவே அண்ணாமலை டீக்கடை, பரோட்டா கடை, ஓட்டல் என பல்வேறு இடங்களில் இதே பாணியில் பிரச்சாரம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது ஒருபுறம் எனில், அண்ணாமலை மணப்பாறை தொகுதி குறித்து ட்விட்டரில் சில தகவல்களை பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது: "மணப்பாறை தொகுதியில் தி.மு.க. சின்னத்தில் போட்டியிட்டு வென்ற மனிதநேய மக்கள் கட்சியை சேர்ந்தவர் எம்.எல்.ஏ.வாக இருக்கிறார்.
இந்த கட்சிக்கு தமிழகத்தில் இருக்கும் ஒரே வேலை பல உயிர்கள் பலியாக காரணமாக இருந்த 1998-ம் ஆண்டு கோவையில் நடந்த குண்டு வெடிப்பு தீவிரவாதிகளை சிறையில் இருந்து வெளியே கொண்டு வருவதுதான். இந்த கட்சியை மனிதநேய மற்ற கட்சி என்றுதான் அழைக்க வேண்டும்.
மணப்பாறையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்கப்படும் என்று அறிவித்து இருந்தார்கள். ஆனால் பணியின் போது கிடைக்கும் சரளை மண்ணுக்காக கல்லூரியை காலனி வாசல் பட்டிக்கு மாற்றிவிட்டார்கள். இது வரை கல்லூரி கட்டவில்லை. சொந்த கட்டிடம் இல்லாமல் பள்ளிக்கூட கட்டிடத்தில் கல்லூரி செயல்படுகிறது. எய்ம்ஸ் பற்றி பேச தி.மு.க. வுக்கு என்ன தகுதி இருக்கிறது?
விவசாயிகள் முதல் தொழிலாளர்கள் வரை அவர்களின் கஷ்டங்களை அறிந்தவர் நம் தலைவர் @annamalai_k , தலைவரின் மணப்பாறை முறுக்கு 🔥🔥#Annamalai #EnMannEnMakkal #Manapaarai pic.twitter.com/JmZ09j7YgE
— sankar s 🇮🇳 (@ssankar2634) November 5, 2023
புதிதாக டாஸ்மாக் கடைகளுக்கு வருபவர்களை கண்டுபிடித்து, அவர்களுக்கு குடிப்பழக்கம் கேடு விளைவிக்கும் என்று, டாஸ்மாக்கில் மது விற்பனை செய்பவர், அறிவுரை கூறுவார் என்றார் அமைச்சர் முத்துசாமி. மக்களை எப்படியெல்லாம் ஏமாற்றுகிறார்கள். சென்ற ஆண்டு டாஸ்மாக்கில் சராசரியாக மது குடிப்போர் எண்ணிக்கை 80 லட்சமாக இருந்தது, தற்போது 90 லட்சமாக உயர்ந்துள்ளது என்று ஒரு ஆய்வு அறிக்கை சொல்கிறது. இதுதான் தி.மு.க.வின் ஒப்பற்ற சாதனை.
தமிழ்நாட்டை முழுவதுமாக குடிகார மாநிலமாக மாற்றும் வரை அமைச்சர் முத்துசாமி ஓயமாட்டார். வரும் பாராளுமன்ற தேர்தலில், இத்தகைய மக்கள் விரோத தி.மு.க. கூட்டணியை முழுவதுமாகப் புறக்கணிக்க வேண்டும். தமிழக மக்களுக்காக எண்ணற்ற நலத்திட்டங்களை வழங்கியுள்ள பிரதமர் மோடி கரங்களை வலுப்படுத்த, தமிழகம் முழுவதும் பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்." இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.
-
பலே ஆளுங்க எடப்பாடி பழனிசாமி.. பாஜகவின் 27 தொகுதிகளில் இப்படி ஒரு ட்விஸ்டா! பாவம் ஜிகே வாசன்? -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்! -
14 அமைச்சர்களிடம் நேருக்கு நேர் மோதல் இல்லை.. பாஜக, அமமுகவை கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிசாமி! -
கோவை தெற்கு, அரவக்குறிச்சி, நெல்லை எங்கே? தொகுதி மாறும் நயினார் நாகேந்திரன், வானதி, அண்ணாமலை! -
அதிவேகத்தில் அதிமுக.. ஏரியா பிரித்த எடப்பாடி! அதிமுக கூட்டணியில் யார்? எங்கே போட்டி? உத்தேச லிஸ்ட்! -
"பிராமணர் + வன்னியர் + தேவர்" ஓட்டுக்கு வேட்டு! அதிமுக - பாஜக கூட்டணிக்கு டென்ஷன் ஏற்றும் மூவர் -
அதிமுக கூட்டணியில் தமாகவுக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு.. தாமரை சின்னத்தில் போட்டி.. தொகுதிகள் லிஸ்ட் -
நயினாரை விடவே கூடாது.. சாத்தூரில் வீழ்த்த ஸ்டாலின் ‘ஸ்கெட்ச்’.. இறங்கும் திமுகவின் ‘பெரிய தலை’ -
சேப்டி கேம் ஆடுகிறாரா எடப்பாடி? தென் மண்டலத்தை பாஜகவிற்கு தாரை வார்த்ததில் உள் அர்த்தம் இருக்கிறதா? -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி..40 கேட்ட பாஜகவுக்கு 27! ஒரே நாளில் முடிந்த டீலிங்..கெத்து அதிமுக! -
கடைசி நிமிடத்தில் மாறிய பாஜக எண்கள்! அதிமுக கோட்டையில் தாமரையின் அசத்தல்! முழு அதிரடி பலன்கள் இதோ -
Election Commission: தேர்தல் ஆணைய கடிதத்தில் பாஜகவின் முத்திரை.. கேரள அரசியல் கட்சிகள் அதிர்ச்சி.. நடந்தது என்ன?











Click it and Unblock the Notifications