ரவையே இல்லாமல் உப்புமா.. அரிசியே இல்லாமல் பிரியாணி.. அதிமுக, பாஜகவை கலாய்த்த லியோனி!
திருச்சி: ரவையே இல்லாமல் உப்புமா கிண்டுபவர் எடப்பாடி பழனிச்சாமி என்றும் அரிசியே இல்லாமல் பிரியாணி செய்ய முடியும் என்றால் அவர் பாஜக தலைவர் அண்ணாமலை என்றும் திண்டுக்கல் லியோனி கடுமையாக விமர்சனம் செய்தார்.
தமிழகத்தில் வரும் 19ம் தேதி நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை தொடர்ந்து தமிழகம் முழுவதும் திமுக, அதிமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் சுயேச்சைகள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
திமுக, அதிமுக கட்சியின் தலைவர்கள், பேச்சாளர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திருச்சியில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து தமிழக பாடநூல் கழக வாரியத் தலைவர் திண்டுக்கல் லியோனி வாக்கு சேகரித்தார்.

திமுக மாநாடு
அப்போது அவர் பேசுகையில் திமுக மாநாட்டில் முதன் முதலாக என்னை பேச வைத்தது தற்போதைய நகர்ப்புற அமைச்சர் கே.என்.நேரு. எனக்கும் திருச்சிக்கும் நிறைய நெருக்கம் உண்டு. பாரத பிரதமர் மோடி எந்த நாட்டிற்கு சென்றாலும் திருக்குறளை தான் சொல்வார். ரவையே இல்லாமல் உப்புமா கிண்ட முடியும் என்றால் அது எடப்பாடி பழனிச்சாமியால் மட்டுமே முடியும்.

அரிசியே இல்லாமல் பிரியாணி
அரிசியே இல்லாமல் பிரியாணி செய்ய முடியும் என்றால் அது பாஜக தலைவர் அண்ணாமலையால் மட்டுமே முடியும். இவர்கள் விடிய விடிய கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி கடைசியில் ஜீரோ தான். அதிமுகவும் பாஜகவும் ஒன்றாக போட்டியிட்டு இருந்தாலும் ஜீரோ தான். பெண்களுக்கு இலவச பஸ் திட்டத்தை வழங்கியவர் மு.க.ஸ்டாலின். பெண்ணுக்கு ஓட்டுரிமை பெற்றுத் தந்தவர் திமுகவின் தாய் கட்சியான நீதி கட்சி தான்.

ராகுல் காந்தி
பெண்களுக்கு சொத்துரிமை வாங்கிக் கொடுத்தவர் கருணாநிதிதான். 50% அரசியல் உரிமையை பெற்றுத் தந்தவர் மு.க.ஸ்டாலின். மதத்தால் நாட்டை பிரிக்கலாம் என நினைக்கிறது பாரதிய ஜனதா. இதை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பாராளுமன்றத்தில் சொல்லியிருக்கிறார்.

தமிழகத்தில் நுழைய முடியாது
இப்போதல்ல, எப்போதுமே பாரதிய ஜனதா தமிழகத்தில் நுழைய முடியாது எனவும் ராகுல் காந்தி கூறினார் என்றார் லியோனி. இதனை தொடர்ந்து வேட்பாளர்களை அறிமுகப்படுத்திய லியோனி பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
-
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா?












Click it and Unblock the Notifications