ஒரு பக்கம் அர்ச்சகர்கள்.. இன்னொரு பக்கம் இஸ்லாமியர்கள்.. தேடி தேடி உதவிய திமுகவின் அன்பில் மகேஷ்!
திருச்சி மலைக்கோட்டை கோயில் அர்ச்சகர்களுக்கும் அரிசி, மளிகைப் பொருள்களை அன்பில் திமுக தெற்கு மாவட்ட செயலாளர் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார்.
திருச்சி: திருச்சி மலைக்கோட்டை கோயில் அர்ச்சகர்களுக்கும் அரிசி, மளிகைப் பொருள்களை அன்பில் திமுக தெற்கு மாவட்ட செயலாளர் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார்.
நாடெங்கும் கொரோனா பரவலைத் தடுக்க 4-ம் கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த 4-ம் கட்ட ஊரடங்கில் பெரும்பாலான தளர்வுகள் அறிவிக்கப்பட்டு பெரும்பாலான தொழிற்சாலைகள், மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் 50 சதவிகித பணியாளர்களுடன் இயங்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
சிறுகுறு வணிக நிறுவனங்களும் திறக்கப்பட்டுள்ளன. பொதுசேவையான பேருந்துகள், டாக்சிகள், ரயில்கள் இயக்கப்படவில்லை.இதனால், வேலையிழந்து வருமானமற்று, ஏழை எளிய மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அரசியல் கட்சியினரும், தன்னார்வலர்களும் உதவி வருகின்றனர்.

திமுக உதவி
அந்தவகையில், திமுக சார்பில் ஏழை, எளிய மக்களுக்கு நாள்தோறும் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. கொரோனா தடுப்பு பணிக்காக தமிழகம் முழுக்க திமுக தீவிரமாக உதவிகளை செய்து வருகிறது. இதற்காக திமுக உருவாக்கி இருக்கும் ஒன்றிணைவோம் வா பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. திமுகவின் இந்த உதவியை மக்கள் பாராட்ட தொடங்கி உள்ளனர்.

திருச்சியில் பல உதவி
அந்தந்த மாவட்ட செயலாளர்கள், வட்ட நிர்வாகிகள் என பலதரப்பினரும் ஆங்காங்கே கொரோனா நிவாரண களத்தில் முழுமூச்சாக இறங்கியுள்ளனர்.அதன்படி, திருச்சி மாவட்ட திமுக தெற்கு மாவட்ட பொறுப்பாளரும், திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி மற்றும் திருச்சி கிழக்கு சட்ட மன்ற தொகுதியில் உதவிகளை செய்து வருகிறார்கள்.

அன்பில் மகேஷ் பொய்யாமொழி களமிறங்கினார்
அங்கு உள்ள இஸ்லாமிய பெருமக்களுக்கு ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு நோன்பு கஞ்சி காய்ச்சுவதற்கு தேவையான அரிசி மூட்டைகளை வழங்கினார். அதேபோல் மலைக்கோட்டை கோயில் அர்ச்சகர்களுக்கும் அரிசி, மளிகைப் பொருள்கள் ஆகியவற்றை வழங்கினார். மலைக்கோட்டை தாயுமானவர் கோயில் அர்ச்சகர்களை மாவட்ட திமுக அலுவலகத்திற்கு வரவழைத்து, அரிசி, மளிகைப் பொருள்களை அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார்.

அர்ச்சகர்களுக்கு உதவி
இந்நிகழ்ச்சியில் திமுகவின் பகுதி செயலாளர் மதிவாணன் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்துக்கொண்டு நிவாரண பொருட்களை வழங்கினர். கடந்த சில நாட்களுக்கு முன்பு திமுக முதன்மை செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு வைணவ ஸ்தலமான ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயில் அர்ச்சகர்களுக்கு நிவாரணம் வழங்கியது குறிப்பிடத்தக்கது. இதேபோல் தமிழகம் முழுக்க திமுகவினர் தீவிரமாக உதவிகளை செய்து வருகிறார்கள்.
-
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
மணப்பாறை சிப்காட்: 650 பேருக்கு வேலை ரெடி! வேகமெடுக்கும் பெப்சி ரூ.880 கோடி மெகா தொழிற்சாலை திட்டம் -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த்












Click it and Unblock the Notifications