தேர்தல் நடத்தும் அலுவலருடன் அமைச்சர் ரகசிய சந்திப்பு... திமுக வேட்பாளர் இனிகோ பரபரப்பு புகார்..!
திருச்சி: திருச்சி கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் ரகசியமாக சந்தித்து பேசியதாக திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் பரபரப்பு புகார் கூறியிருக்கிறார்.
இது தொடர்பாக திருச்சி மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினியை நேரில் சந்தித்து புகார் மனு அளித்த இனிகோ இருதயராஜ், கடந்த 26-ம் தேதி தேர்தல் நடத்தும் அலுவலருடன் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் ரகசிய சந்திப்பு நடத்தியதாக தெரிவித்துள்ளார்.

தேர்தல் நடத்தும் அலுவலர் அறைக்குள் தபால் வாக்குகள் உள்ள நிலையில் இந்தச் சந்திப்பை எப்படி நடத்தலாம் என அவர் வினவியுள்ளார். அரைமணி நேரம் நடைபெற்ற இந்தச் சந்திப்பின் போது அலுவலக ஊழியர்கள் யாரையும் அந்த அறைக்குள் அனுமதிக்க மறுத்ததன் பின்னணி என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
திமுக வேட்பாளரின் கிடுக்கிப்பிடி கேள்விகளால் அதற்கு பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு மாவட்ட நிர்வாகத்திற்கு ஏற்பட்டுள்ளது. இந்தச் சந்திப்பு பலத்த சந்தேகத்தை எழுப்புவதாக கூறியுள்ள திருச்சி கிழக்குத் தொகுதி திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ், இது தொடர்பாக தேர்தல் ஆணையம் முறையாக விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
முன்னதாக மாவட்ட ஆட்சியர் தனது புகார் மனு மீது நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை தனக்கு உள்ளதாக கூறியிருக்கிறார். வாக்கு எண்ணிக்கை, உள்ளிட்ட தேர்தல் தொடர்புடைய எந்த அறிவிப்பாக இருந்தாலும் அனைத்து வேட்பாளர்களையும் அழைத்து பேச வேண்டியது தான் தேர்தல் நடத்தும் அதிகாரியின் கடமை.
அப்படியிருக்கும் போது இந்தச் சந்திப்பு எதற்காக நடைபெற்றது என்ற கேள்வியை இயல்பாகவே எழுப்புகிறது.
-
இடியாப்ப சிக்கலில் மாட்டிக்கொண்ட விஜய்.. ஆளே இல்லாத கடையில் டீ ஆற்றுகிறது அரசு - திமுக கேள்வி -
வைத்திலிங்கத்துக்கு மீண்டும் சிக்கல்.. லஞ்ச ஒழிப்புத்துறை முடித்து வைத்த வழக்கை ஓபன் செய்த தவெக அரசு -
“கூட்டணி கட்சிகள் இல்லைனா திமுக 10 தொகுதிகளில் கூட வெற்றி பெற்றிருக்காது”.. ஆதவ் அர்ஜுனா தாக்கு! -
ஆரம்பமே இடிக்குதே.. திமுக லிஸ்ட்டில் வந்து சேர்ந்த தவெக.. அமித் ஷா சொன்னதை கேட்டீங்களா -
மாட்டிவிட்ட மகளிர் உரிமைத் தொகை..பெண்களின் ஓட்டை கோட்டைவிட்ட திமுக! ஆய்வுக் குழுவின் அதிர்ச்சி தகவல் -
திமுகவை உதறும் துரை வைகோ.. மதிமுக பொதுக்குழு அதிரடி முடிவு? 2 எம்எல்ஏகள் ராஜினாமா? -
Delimitation: கழன்றுக்கொண்ட திமுக.. காணாமல் போகும் இந்தியா கூட்டணி? பாஜக போடும் பலே பிளான்! -
இதுக்கு பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்! ஸ்டாலின் தந்த ரியாக்சன்! அப்செட்டான திமுக தலைகள் -
முரசொலி நிலம் வழக்கு: “புகார் அளித்தவர் பட்டியலினத்தவர் இல்லை”- ஐகோர்ட்டில் திமுக தரப்பு வைத்த வாதம் -
காவிரி நீரை கொண்டு வருவாரா விஜய்.. தண்ணீருக்கு வழியில்லாமல் குறுவை தொகுப்பா.. திமுக சரமாரி கேள்வி -
ஸ்லீப்லெஸ் நைட் யாருக்குனு தெரியுமா.. மின்வெட்டு பரிதாபங்கள்.. தவெகவை வெளுக்கும் மீம்ஸ்! -
"முதுகு குத்து வரலாறுல அஜித் குமாருக்கு டஃப் கொடுப்போம் போலயே" புலம்பும் திமுகவினரின் மீம்ஸ்!












Click it and Unblock the Notifications