அண்ணாத்த படம் ரிலீசையொட்டி... திருச்சி ஹோட்டலில் 1 ரூபாய்க்கு தோசை விற்பனை..!
திருச்சி: நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான அண்ணாத்த திரைப்படம் இன்று ரிலீசானதை ஒட்டி திருச்சி மாவட்டம் ராம்ஜிநகரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் 1 ரூபாய்க்கு தோசை விற்பனை செய்யப்படுகிறது.
திருச்சி மாவட்டம் கள்ளிக்குடியை சேர்ந்தவர் கர்ணன். நடிகர் ரஜினிகாந்தின் தீவிர ரசிகரான இவர் ராம்ஜி நகர் பகுதியில் அண்ணாமலை என்ற பெயரில் ஹோட்டல் நடத்தி வருகிறார். இந்நிலையில் தீபாவளி பண்டிகையை ஒட்டி இன்று அண்ணாத்த திரைப்படம் வெளியானதால் அது தொடர்பான கொண்டாட்டத்தில் அவர் ஈடுபட்டு வருகிறார்.

அந்த வகையில் தனது ஹோட்டல் முழுவதும் அண்ணாத்த பட போஸ்டர்களை ஒட்டி வாடிக்கயாளர்களுக்கு உணவு விலையில் சலுகைகள் அளித்திருக்கிறார். வழக்கமாக தனது கடையில் ரூ.20-க்கு விற்கப்படும் தோசையை இன்று ஒரு நாள் மட்டும் அவர் ரூ.1 க்கு விற்பனை செய்கிறார். இதுமட்டுமல்லாமல் ஆணியன் தோசை, ரவா தோசை , வரிசையில் அண்ணாத்த தோசை என்ற புதிய தோசை வகையையும் தனது ஹோட்டல் மெனுவில் சேர்த்துள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினியின் அண்ணாத்த படம் எப்படி இருக்கு ?

இது தொடர்பாக கூறும் அந்த ஹோட்டல் அதிபர் கர்ணன், தாம் 10-ம் வகுப்பு படிக்கும் போது ரஜினிகாந்த் நடித்த பாயும் புலி திரைப்படத்தை பார்த்ததாகவும் அன்று முதல் அவரது ரசிகராக மாறிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான அனைத்து படங்களையும் முதல் நாளே குடும்பத்துடன் பார்த்து வருவதாகவும் ரஜினிக்கு தாதா சாகேப் விருது கிடைப்பது அவரது நடிப்புக்கு கிடைத்த அங்கீகாரம் எனவும் பாராட்டியிருக்கிறார்.
சிறியளவில் ஹோட்டல் நடத்தில் அதன் மூலம் வருவாய் ஈட்டி வரும் கர்ணன், தோசையை இன்று ஒரு நாள் ரூ.1-க்கு விற்பதால் ஏற்படும் நஷ்டத்தை பொருட்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே தமிழகத்தின்பல்வேறு இடங்களில் திருச்சி கர்ணனை போலவே ரஜினிகாந்த் ரசிகர்கள் அண்ணாத்த பட ரிலீசை கொண்டாடி வருகின்றனர்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்












Click it and Unblock the Notifications