திமுக கதை முடிய போகிறது.. ஸ்டாலினுக்கு வாய்ப்பூட்டு போடும் நேரம் வந்து விட்டது.. ராமதாஸ் அட்டாக்
திருச்சி கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை டாக்டர் ராமதாஸ் தாக்கி பேசினார்.
Recommended Video

திருச்சி: நீநீநீண்ட நாள் கழித்து... அதுவும் ஒற்றை வரியில் முக ஸ்டாலினை நேரடியாக அட்டாக் செய்துள்ளார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்!
வெட்கம், மானம் இல்லையா என்று திமுக தலைவர் கேட்டபோதே, டாக்டர் ராமதாசிடம் இருந்து ஏதாவது அதிரடி பதில் வரும் என எதிர்பார்க்கப்பட்டது!
ஆனால் வேட்பாளர் பட்டியல், தொகுதி ஒதுக்கீடுகள் விஷயத்தில் பிஸியாக இருந்த ராமதாஸ் இது சம்பந்தமான எந்த விமர்சனத்தையும் முன் வைக்கவில்லை.

சிதம்பரம் தொகுதி
இப்போது தீவிர பிரச்சாரத்தில் இறங்கி உள்ளார். எங்கு சென்று பிரச்சாரம் செய்தாலும் அங்கே தனக்கான முத்திரை பேச்சை பேசிவிட்டு வந்து கொண்டிருக்கிறார் டாக்டர்! இப்படித்தான் 2 நாளைக்கு முன்னாடி சிதம்பரம் சென்றார். அங்கே திருமாவளவனை பேசிவிட்டு வந்ததிலிருந்தே இன்னும் அந்த சமாச்சாரம் முடிவுக்கு வராமல் காரசார விவாதமாகி கொண்டிருக்கிறது.

தம்பிதுரை
இந்நிலையில், நேற்று திருச்சிக்கு சென்ற ராமதாஸ், முக ஸ்டாலினை நேரடியாக போட்டு தாக்கி பேசி உள்ளார். வாக்கு சேகரித்தது தம்பிதுரைக்கு! ஆனால் வறுத்தெடுத்தது முக ஸ்டாலினை! அப்போது ராமதாஸ் பேசியதாவது:

சாத்தியம் இல்லை
கறை படியாத கைக்கு சொந்தக்காரர் தம்பிதுரை. நேரு காலத்திலிருந்து ராகுல்காந்தி காலம் வரை வறுமையை ஒழிப்பதாக காங்கிரஸார் கூறுகின்றனர். ஆனால் வறுமையை ஒழித்தபாடு இல்லை. இப்போது குடும்பத்துக்கு ஆண்டுக்கு ரூ. 72 ஆயிரம் கொடுப்போம் எனக் கூறுவது சாத்தியமில்லை.

பூட்டு
இந்தத் தேர்தலுடன் திமுகவின் அத்தியாயம் முடிய போகிறது. முதலில் ஸ்டாலின் வாய்க்கு பூட்டுப் போட வேண்டும்" என்றார்.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications