அமைச்சர் கே என் நேரு வீட்டில் நடந்த அமலாக்கத்துறை சோதனை நிறைவு.. ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதா?
திருச்சி: அதிகாலை முதல், அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர்கள், சகோதரிகள் மற்றும் மகன் வீடுகளில் அமலாக்கத்துறையினர் அதிரடி ரெய்டு மேற்கொண்டிருந்தனர். இந்த ரெய்டை தொடர்ந்து அமைச்சர் நேருவின் வீட்டிலும் ரெய்டு நடத்தப்பட்டது. 10 மணி நேரமாக நடந்த சோதனை தற்போது நிறைவடைந்துள்ளது. வீட்டில் இருந்து சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
கேரளா மற்றும் மதுரையில் இருந்து வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் திருச்சி தில்லை நகரில் உள்ள நேருவின் வீட்டில் ரெய்டை மேற்கொண்டனர். வங்கி மோசடி வழக்கு ஒன்றில் விசாரணையை அமலாக்கத்துறை தீவிரப்படுத்தியிருக்கிறது. இதில் இன்று காலை முதல் ரெய்டை மேற்கொண்டு வருகிறது.

காலை முதல் நேருவின் சகோதர, சகோதரிகள் மற்றும் மகன் வீடுகளில் ரெய்டு மேற்கொள்ளப்பட்ட நிலையில், அடுத்ததாக திருச்சியில் உள்ள கே என் நேருவின் வீட்டிலும் ரெய்டு மேற்கொள்ளப்பட்டது. காலையில் இருந்து 10 மணி நேரமாக நடந்து வந்த சோதனை மாலை 5.30 மணியளவில் நிறைவடைந்தது. அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் கே என் நேருவின் வீட்டில் இருந்து சில ஆவணங்களை கைப்பற்றி சென்றதாக கூறப்படுகிறது.
வீட்டில் இருந்து கிளம்பும் போது அதிகாரிகள் கையில் ஒரு பெட்டியை வைத்திருந்தனர். கேஎன் நேரு வீட்டில் சோதனை நிறைவடைந்த நிலையில் அவரது உறவினர்கள், சகோதர சகோதரிகள் வீடுகளில் சோதனை இன்னும் நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
நடுக்கடலில் உயிரிழந்த தமிழக மாலுமி.. 3 நாட்களுக்கு பிறகு ஒரு வழியாக மீட்கப்பட்ட உடல்! என்ன நடந்தது? -
வெளியானது தமிழக நிதி நிலை வெள்ளை அறிக்கை! திமுக ஆட்சியில் கடன் 2 மடங்கானதாக குற்றச்சாட்டு! -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெண்கள் வாழ தகுதியற்ற தமிழ்நாடு..? நாங்க என்ன தப்பு செய்தோம்..? அறந்தாங்கி நிஷா ஆதங்கம் -
கரண்ட் கட் பற்றி நான் சொன்ன விஷயத்தில் பின்வாங்க மாட்டேன்.. ஏனென்றால்..? மாஸ்டர் மகேந்திரன் விளக்கம் -
சுழல்கள் நிறைந்த சாலக்குடி ஆற்றின் பாறை இடுக்கில் சிக்கிய தமிழக இளைஞர்! கயிறு கட்டி மீட்ட ராணுவ வீரர்! -
குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க என்ன நடவடிக்கை?.. தமிழக அரசுக்கு அண்ணாமலை சரமாரி கேள்வி -
Ration Cards: தமிழகத்தில் 46 ஆயிரம் புதிய ரேஷன் கார்டுகள் ரெடி! எப்போது கிடைக்கும்? -
அரசியல் என்ட்ரி? திருச்சி கிழக்கில் போட்டியிடுகிறாரா ராகவா லாரன்ஸ்! வெளியான முக்கிய அறிவிப்பு -
சென்னையில் சம்பவம் இருக்கு.. ஹை அலர்ட் கொடுத்த வானிலை மையம்! உஷார் மக்களே! -
Power cut: சென்னை உள்பட தமிழகத்தில் இரவு நேரத்தில் மின்வெட்டு ஏன்? ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் விளக்கம் -
ஓமன் அருகே கப்பலில் உயிரிழந்த தமிழக மாலுமி.. குளிர்ந்த நீரால் உடலை பாதுகாக்க போராடும் சக ஊழியர்கள்












Click it and Unblock the Notifications