Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விஜய் ஊழல்வாதி என நீதிமன்றம் கூறிவிட்டது.. கட்சி ஆபிசையே மூடிட்டு போயிட்டாங்க.. எடப்பாடி அட்டாக்!

Subscribe to Oneindia Tamil

திருச்சி: தவெக தலைவர் விஜய் ஊழல்வாதி என்று நீதிமன்றம் தீர்ப்பு அளித்துவிட்டது என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். கரூர் சம்பவத்திற்கு பின் 15 நாட்களுக்கு பனையூர் தலைமை அலுவலகத்தையே மூடிவிட்டு போய்விட்டதாக கூறிய எடப்பாடி பழனிசாமி, 72 நாட்களுக்கு வீட்டில் இருந்தே விஜய் வெளி வரவில்லை என்று கூறியுள்ளார்.

மதுராந்தகத்தில் என்டிஏ பொதுக்கூட்டம் நடந்த பின், அதிமுக நிர்வாகிகள் தொடர்ச்சியாக தவெக தலைவர் விஜய்யை கடுமையாக அட்டாக் செய்து வருகின்றனர். தவெக செயல் வீரர்கள் கூட்டத்தில் விஜய் அதிமுகவை அடிமைவாத ஊழல் கட்சி என்று விமர்சித்திருந்தார். தொடர்ந்து தவெக 3வது ஆண்டு தொடக்க விழாவில் பாஜக தலைமையிலான கூட்டணி என்று சாடி இருந்தார்.

Edappadi Palaniswami

இதனால் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியே நேரடியாக விஜய்யை விமர்சித்தார். கரூர் சம்பவம் நடந்த 72 நாட்கள் வீட்டிற்குள் இருந்தவர் என்று சாடினார். இதனால் சோசியல் மீடியாவில் தவெக மற்றும் அதிமுக இடையில் காரசார வாதம் நடந்து வருகிறது. இந்த நிலையில் விஜய் வரி ஏய்ப்பு செய்தது உறுதியாகி உள்ளது.

இதனால் தூயசக்தி என்று சொல்லி வந்த விஜய்யின் அரசியல் வாழ்க்கைக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து எடப்பாடி பழனிசாமி பேசுகையில், விஜய் ஊழல்வாதி என்பதற்கு அவர் வரி ஏய்ப்பு செய்ததே சாட்சி. நீதிமன்றமே தீர்ப்பு கொடுத்துவிட்டது. அவர் இதுவரை எதற்கு வெளி வந்திருக்கிறார். ஏதோ ஒரு கட்சி தொடங்கினார்.

அவ்வளவுதான்.. பின்னர் ஒரு சம்பவம் நடந்துவிட்டது.. நடக்கக் கூடாத சம்பவம் நடந்துவிட்டது.. அந்த சம்பவத்திற்கு பின் விஜய் 72 நாட்கள் வீட்டை விட்டு வெளியில் வரவில்லை.. இதுவரை எத்தனையோ அரசியல் கட்சிகள் வந்திருக்கிறது.. ஆனால் ஒரு சம்பவம் நடந்தால், அதனை துணிவுடன் எதிர்த்து நின்று அதற்கு உண்டான தீர்வை காண்பதே அரசியல் கட்சித் தலைவரின் கடமையாக இருக்க வேண்டும்.

ஆனால் கட்சி தொடங்கி துயரம் நிகழ்ந்த போது, 72 நாட்களில் வெளிவரவில்லை. கட்சி அலுவலகத்தையே 15 நாட்கள் மூடிவிட்டார்கள்.. யாருமே கிடையாது.. கட்சி இருக்கிறதா என்ற நிலைமை ஏற்பட்டுவிட்டது.. இதுதான் தமிழ்நாட்டின் நிலை.. அவரின் கட்சியின் நிலையும் அதுதான் என்று தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து அட்டாக் செய்து வருவதால் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை வைத்து தவெகவினர் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+