நிர்வாக திறமை சுத்தமாக இல்லை! மகத்தான தாலிக்கு தங்கம் திட்டத்தை நிறுத்திவிட்டனர்! ஜெயக்குமார் சாடல்
திருச்சி: திமுகவினர் பொய்யான வாக்குறுதிகளை அளித்த வெற்றி பெற்றதாகக் குற்றஞ்சாட்டி உள்ள ஜெயக்குமார், பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக திமுக அரசைக் கடுமையாகத் தாக்கி பேசினார்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் சமயத்தில் கள்ள ஓட்டுப் போட வந்ததாக திமுக பிரமுகர் ஒருவரை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டார். அதன் பின்னர், அனுமதி மீறி போராட்டம் நடத்தியது, நில மோசடி ஆகிய வழக்குகளிலும் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்குகளில் ஜாமீன் வழங்கக் கோரி ஜெயக்குமார் மனுத் தாக்கல் செய்திருந்தார். இதில் ஜெயக்குமாருக்கு பல்வேறு நிபந்தனைகள் உடன் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி இருந்தது.

ஜெயக்குமார்
சென்னையிலிருந்து நிபந்தனை ஜாமீன் கையெழுத்திட வந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், கடந்த வாரம் முதல் கண்டோண்ட்மெண்ட் காவல்நிலையத்தில் கையெழுத்திட்டு வருகிறார். இந்நிலையில், இன்று கடைசி நாளாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திருச்சி கண்டோண்ட்மெண்ட் காவல்நிலையத்தில் கையெழுத்திட்டார். அப்போது அவர் முதல்வரின் துபாய் பயணம், அமைச்சர் பிடிஆர் செயல்பாடுகள், தாலிக்குத் தங்கம் என பல்வேறு விஷயங்களில் திமுக அரசைத் தாக்கி பேசினார்.

போலீஸ் அராஜகம்
செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், "திருச்சியில் உள்ள கழகத் தொண்டர்கள், நிர்வாகிகள் காட்டிய அன்பு என்னைத் திக்குமுக்கு ஆடச் செய்தது. காலை ஒருவர் வீடு, மதியம் ஒருவர் வீடு, மாலை ஒருவர் வீடு என இதுவரை 300க்கும் அதிகமானோர் சேர்ந்து என்னை அன்புடன் கவனித்தார்கள். பத்திரிக்கையாளர்களை முறையாகப் பேட்டி எடுக்கக் கூட காவல்துறையினர் இங்கு அனுமதிக்கவில்லை. தொடர்ந்து பல அராஜகங்களை திமுகவினர் செய்து வருகின்றனர்.

சொந்த பயணமா
அதிமுக ஆட்சியில் இருந்த சமயத்தில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் வெளிநாடுகளுக்குச் சென்றபோது எவ்வளவு முதலீடுகள் ஈர்க்கப்பட்டது என்பது குறித்துத் தெளிவாக எடுத்துக் கூறினர். ஏற்கனவே விதைகள் போடப்பட்டது. ஆனால் தற்போது மு.க ஸ்டாலின் சென்றிருப்பது அவருடைய சொந்த பயணத்திற்காக அல்லது முதலீடுகளை ஈர்ப்பதற்காக என்று தெரியவில்லை. அவர் என்ன செய்யப் போகிறார் என்பதை பொறுத்துத்தான் பார்க்க வேண்டும்.

வாய் திமிருடன் பேசும் பிடிஆர்
நிதியமைச்சர் பழனிவேல் தியாகாராஜன் வாய் திமிருடன் பேசி வருகிறார். 2 கோடி 14 லட்சம் பேருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கொடுப்போம் என்று வாக்குறுதி அளித்தார்கள். 5 வருடத்திற்குக் கொடுக்க வேண்டும் என்றால் அவ்வளவு நிதி நம்மிடம் உள்ளதா? என்று கேள்வி எழுப்பினால், உடனே கல்விக் கடன் ரத்து விவசாயக் கடன் ரத்து என்று மக்களைத் திசைதிருப்பி ஏமாற்றி வாக்குகளை திமுகவினர் வெற்றி பெற்றார்கள்.












Click it and Unblock the Notifications