Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வந்துட்டாரு அய்யாக்கண்ணு! டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு திருச்சி மொபைல் டவரில் ஏறி ஆர்ப்பாட்டம்

Subscribe to Oneindia Tamil

திருச்சி: டெல்லி சலோ போராட்டத்தை கையில் எடுத்து இருக்கும் விவசாயிகளுக்கு ஆதரவாக திருச்சியில் அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் செல்போன் டவரில் ஏறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்க சட்டம் இயற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில் இன்று டெல்லி சலோ என்ற பெயரில் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கி இருக்கிறார்கள். 2 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற 3 வேளாண் சட்ட எதிர்ப்பு போராட்டத்தை போன்றே விவசாயிகள் பஞ்சாப், ராஜஸ்தான், ஹரியானா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து டிராக்டர்களில் டெல்லி பவானா மைதான போராட்டக் களத்துக்கு சென்றனர்.

Farmers led by Ayyakannu in Trichy in support of the farmers Delhi Chalo protest.

இவர்களை தடுக்க மத்திய அரசும், மாநிலங்களிலும் ஆளும் பாஜக அரசுகளும் சாலைகளில் ஆணி வேகத் தடைகள், சாலைத் தடுப்புகள் அமைத்து இருக்கிறார்கள். அதையும் மீறி உள்ளே செல்லும் விவசாயிகளை போலீசார் தடுத்து வருகின்றனர். இந்த நிலையில் திருச்சியில் அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் டெல்லியில் போராடி வரும் விவசாயிகளின் "டெல்லி சலோ" போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர். அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் திருச்சியைச் சேர்ந்த விவசாயிகள் மனித எலும்புக்கூடுகளைப் பிடித்துக் கொண்டு சாலையில் படுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சில விவசாயிகள் செல்போன் டவரில் ஏறி நின்று டெல்லி சலோ போராட்டத்துக்கு தங்களது ஆதரவைத் தெரிவித்தனர். இது குறித்து விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு பேசுகையில், "அரசியலமைப்பு சட்டப்படி, எங்கள் உரிமைகளுக்காக நாங்கள் நாட்டிற்குள் சுதந்திரமாக எங்கும் செல்ல முடியும், ஆனால் போலீசார் விவசாயிகள் டெல்லியில் போராட அனுமதி மறுக்கின்றனர். வரும் தேர்தலில் பிரதமர் மோடி தமிழ்நாட்டின் எந்த தொகுதியில் போட்டியிட்டால், அந்த தொகுதியிலிருந்து விவசாயிகள் அவரை எதிர்த்து வேட்புமனு தாக்கல் செய்வார்கள்," என்று அவர் மேலும் தெரிவித்தார்.

Farmers led by Ayyakannu in Trichy in support of the farmers Delhi Chalo protest.

இதற்கிடையே இன்று டெல்லி நோக்கி பேரணி சென்ற பல விவசாயிகளை அரியானா போலீசார் கைது செய்து உள்ளனர். எல்லைப் பகுதிகளின் பல இடங்களில் போலீசார் கான்கிரீட் கற்கள், இரும்பு ஆணிகள், தடுப்புகள் மற்றும் முள்வேலிகள் வைத்துள்ள நிலையில் போராட்டத்தில் ஈடுபட சென்ற விவசாயிகள் தங்கள் டிராக்டர்கள் மற்றும் கைத் தடிகளைப் பயன்படுத்தி தடுப்புகளை உடைக்க முயற்சித்ததாக குற்றம்சாட்டப்படுகிறது.

பதற்றமான சூழல் டெல்லியில் நிலவி வரும் நிலையில் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். மத்திய அரசு தங்களின் 12 கோரிக்கைகளை நிறைவேற்றித் தர வேண்டும் என்பது விவசாயிகளின் எதிர்பார்ப்பு. விவசாய சங்க தலைவர்கள் ஜகஜீத் சிங் டாலேவால் மற்றும் சர்வன் சிங் பாண்டர் ஆகியோர் தலைமையிலான சம்யுக்தா கிசான் மோர்ச்சா மற்றும் பஞ்சாப் கிசான் மஜ்தூர் சங்கர்ஷ் ஆகிய அமைப்பினர் முன்னெடுத்து இருக்கும் இந்த டெல்லி சலோ போராட்டத்துக்கு நாடு முழுவதும் உள்ள 200 க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் ஆதரவளித்து உள்ளது குறிப்பிட்டு உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+