திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வட கிழக்குப் பருவமழையை சந்திக்க நாங்க ரெடி.. அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார்

Google Oneindia Tamil News

Recommended Video

    வட கிழக்குப் பருவமழையை சந்திக்க நாங்க ரெடி-ஆர்.பி. உதயக்குமார்

    திருச்சி: வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக திருச்சி விமானநிலையத்தில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

    திருச்சி விமான நிலையத்தில், வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:

    Govt ready to face rain

    வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். இதுகுறித்து 32 வருவாய் மாவட்டங்களிலும் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டு, 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்கள் கண்டறியப்பட்டு இருக்கிறது.

    அந்த இடங்களில் அதிகப்படியான மழையோ, வெள்ளமோ ஏற்பட்டால், அதை எதிர்கொள்ள குழுக்கள் தயார் செய்யப்பட்டுள்ளன.

    [பரவும் பன்றிக்காய்ச்சல், மிரட்டும் டெங்கு.. தமிழகத்தில் சிறப்பு அதிகாரிகள் நியமனம்]

    முதல்வர் தலைமையில் நான்கு ஆய்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு இருக்கிறது. நிர்வாக காரணங்களுக்காக 'ரெட் அலர்ட்' போன்ற எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. அது தேவையில்லை என்றால் விலக்கி கொள்ளப்படும் என்றார் ஆர்.பி. உதயக்குமார்.

    தமிழகத்தில் இன்னும் வட கிழக்குப் பருவ மழை தொடங்கவில்லை. ஆனால் ரெட் அலர்ட் எல்லாம் விடப்பட்டு பின்னர் அது வாபஸ் பெறப்பட்டது என்பது நினைவிருக்கலாம்.

    English summary
    TN revenue minister R B Udayakumar has said that the govt has taken all the steps to face the North East Monsoon.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X