திமுக அரசு மலை..மோடி அரசு மடு! பாஜக அண்ணாமலை தமிழக அரசை விமர்சனம் செய்வது ஏன் தெரியுமா? வைகோ பேட்டி
Subscribe to Oneindia Tamil
திருச்சி: திமுகவின் ஓராண்டு ஆட்சி மலை என்று சொன்னால், 8 ஆண்டு பாஜக ஆட்சி மடு என்றுதான் கூறவேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிப் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இதனையொட்டி அக்கட்சியினர் திராவிட மாடல் ஆட்சி என்று கடந்த ஓராண்டு செய்த சாதனைகளை பட்டியலிட்டு வருகின்றனர்.
அதேபோல் மத்தியில் பாஜக அரசு ஆட்சிப் பொறுப்பேற்று 8 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இந்த 8 ஆண்டுகளில் மக்களுக்கு செய்த மின்சாரம், தண்ணீர், கேஸ் சிலிண்டர், தூய்மை இந்தியா திட்டம் உள்ளிட்ட சாதனைகளை பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் மக்கள் மத்தியில் பேசி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications