பிரசவகால இறப்புகள் தமிழகத்தில் குறைவு! கர்ப்பிணிகளை தாயை போல் கவனிக்கிறார் முதல்வர் -இனிகோ இருதயராஜ்
திருச்சி: கர்ப்பிணிகளை தாயை போல் முதலமைச்சர் ஸ்டாலின் கவனித்துக் கொள்வதாகவும் இதனால் மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழகத்தில் பிரசவ கால இறப்புகள் குறைந்திருப்பதாகவும் கூறியிருக்கிறார் கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கத் தலைவர் இனிகோ இருதயராஜ்.
எதிர்காலத்தில் தமிழ்நாடு 100% மகப்பேறு இறப்பற்ற மாநிலமாக உருவாகும் என்பது உறுதி என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள புள்ளிவிவர பதிவு வருமாறு;
உலக சுகாதார மையம் மற்றும் UNICEF அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், 2020- 21 ஆம் ஆண்டில் உலக அளவில் 45 லட்சம் பிரசவ கால இறப்புகள் நேரிட்டதாகவும் அதில் 7.5 லட்சம் இறப்புகள் இந்தியாவில் நிகழ்ந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையின் படி பார்த்தால் இந்தியாவே மகப்பேறு இறப்பில் முதல் இடத்தில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தத் தகவல் நமக்கு அதிர்ச்சியூட்டும் தகவலாகவே அமைந்துள்ளது.
ஆனாலும் தமிழ்நாட்டில் நிலை வேறு. முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் ஆட்சியில் தாயுள்ளத்துடன் கர்ப்பிணி பெண்கள் கவனிக்கப்படுகிறார்கள். கர்ப்ப காலத்தில் தொடங்கி பிரசவ காலம் வரையிலான திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.
கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான ஊட்டச்சத்து திட்டங்கள், மருத்துவ பராமரிப்புகள் மிக நேர்த்தியான முறையில் செய்யப்பட்டு வருகின்றன.
கர்ப்பிணிப் பெண்களின் விவகாரங்கள், சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட அரசு மருத்துவ மையங்களில் பதிவு செய்யப்பட்டுகின்றன.
பேறு கால மருத்துவம் எடுத்துக் கொள்ள வேண்டிய முறைகள், சத்தான உணவுகளை சாப்பிடுவது பற்றிய குறிப்புகள் வழங்கப்படுகின்றன.
மாதந்தோறும் சர்க்கரையின் அளவு, ரத்த அழுத்தம் போன்றவை பராமரிக்கப்பட்டு, கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படும் ரத்த சோகையை கட்டுப்படுத்த இரும்பு சத்து மாத்திரைகள், கொடுக்கப்பட்டு ஊசிகள் போடப்படுகின்றன.
ரண ஜன்னி , ஃபுளு காய்ச்சல், ஏற்பட்டாமல் இருக்க தடுப்பூசிகள் போடப்படுகின்றன. இந்த தருணத்தில் குறிப்பிட்டு சொல்ல வேண்டியது என்னவென்றால்,பணிக்குச் செல்லும் பெண்கள் பிரசவ காலத்தின் போது அதிகளவு சிரமத்தை எதிர்கொள்கிறார்கள்.
இதனை கருத்தில் கொண்டு அவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த பேறுகால விடுமுறையை 9-மாதத்தில் இருந்து 12- மாதங்களாக முதலமைச்சர் உயர்த்தி தந்துள்ளார்.
கர்ப்ப காலத்தின் போது பெண்களின் உடல்நிலையை கண்ணும் கருத்துமாக கவனித்து வரும் தமிழக அரசு அவர்களுக்கு பொருளாதார ரீதியாகவும் உதவி வருகிறது.
டாக்டர் முத்துலட்சுமி மகப்பேறு நிதி உதவி திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வந்த ரூ.12,000 ஆயிரம் ரூபாய் உதவித்தொகையை ரூ. 18,000 மாக உயர்த்தியுள்ளது.
பெண்களின் பேறு காலத்தின் போது , அவர்கள் நல்ல உடல் ஆரோக்கியத்தை பெற்று குழந்தையை பிரசவிக்கும் வகையில், ஒரு தாய் எந்த அளவிற்கு கவனம் செலுத்துவாரோ, அதேபோல் கவனம் செலுத்தி சிறப்பான திட்டங்களை முதலமைச்சர் நடைமுறைப்படுத்தி வருகிறார். இதன் மூலம் எதிர்காலத்தில் தமிழ்நாடு 100% மகப்பேறு இறப்பற்ற மாநிலமாக உருவாகும் என்பது உறுதி.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications