திருச்சியை மறந்த விஜய்.. ஆப்பனன்டில் ஆளே இல்லை.. இறங்கி அடிக்கும் இனிகோ
திருச்சி: தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கு வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. தவெக தலைவர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் தனக்கு சம போட்டியாளராக யாருமே இல்லை என்று திமுக இனிகோ இருதயராஜ் கூறியுள்ளார்.
திருச்சி கிழக்கு திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், "இங்கு எங்களுக்கு சமமான போட்டியாளரே இல்லை. அதனால் அதைப்பற்றி பேசுவதே வீண். மக்கள் மத்தியில் மக்களோடு மக்களாக பயணிக்கும் வேட்பாளர் யார் இருக்கிறார். மக்களோடு மக்களாக பயணிக்கும் வேட்பாளரைத்தான் மக்கள் ஆதரிப்பார்கள். அதிமுக வேட்பாளர் ஒரு கல்லூரியின் உரிமையாளர். கந்து வட்டிக்கு விடுவதாகவும் ஒரு தகவல் உள்ளது.

விஜய்க்கு இனிகோ சவால்
அவரை மக்கள் ஏற்பார்களா. அவர் இந்த தொகுதியைச் சேர்ந்தவரும் கிடையாது. விஜய் நல்ல நடிகர். அதை இல்லையென்று சொல்லவில்லை. ஆனால் அவர் நல்ல தலைவர் இல்லை. தொண்டர்களை முறைப்படுத்தும் பணியை செய்வதில்லை. மக்களுக்காக ஏதாவது செய்தாரா. மக்களுடன் மக்களாக பயணித்தாரா. அமீர்கான், அமிதாபச்சன் என்று இவரை விட பெரிய நடிகர்கள் எவ்வளவோ பேர் இருக்கிறார்கள். அவர்கள் பொது விமானத்தில் தான் பயணிக்கிறார்கள்.
பொது மக்களுடன் பொது மக்களாக இருக்கிறார்கள். விஜய் தனி விமானத்தில் பயணிக்கிறார். மக்களுடன் தொடர்பில் இல்லை. நடிப்பின் மோகத்தை வைத்து வெற்றி பெற்றுவிடலாம் என்று நினைக்கிறார்கள். நான் இங்குள்ள ஒவ்வொரு பகுதிக்கும் 50 முறை சென்று மக்களை சந்தித்துள்ளேன். விஜயால் முடியவில்லை. தவெக மாவட்ட செயலாளரின் மகனுக்கு நான் தான் ஸ்கூலில் அட்மிஷன் வாங்கிக் கொடுத்தேன்.
ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில்
மக்களுடன் மக்களாக நிற்காமல் அவரை வஞ்சிப்பதாக கூறுகிறார். அவரால் அவர் கட்சியினரை கூட பார்க்க முடியவில்லை. நடிப்பு மோகத்தை வைத்து அவரால் வெற்றி பெற முடியாது. நடிப்பிற்கும், ஆட்சி அமைப்பதற்கும் வித்தியாசம் உள்ளது. மக்கள் பிரச்சனையை பார்த்தால் தான் மக்களுக்கான திட்டத்தை தீட்ட முடியும். ரேஷன் கடை எப்படி இயங்குவது என்று தெரியாமல் எதையோ உளறுகிறார். அவருக்கு எதைப்பற்றியும் புரிதல் இல்லை.
நடிப்பின் மோகத்தில் சில இளைஞர்கள் உள்ளனர். எல்லா மக்களும் அவரின் பின்னால் இல்லை. மே 5 ஆம் தேதிக்கு பிறகு திமுக திராவிட மாடல் 2 ஆட்சிக்கு வரப்போகிறது. மக்கள் தெளிவாக உள்ளனர். அப்படியிருக்கும்போது விஜய்க்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள். எங்களுக்கு தான் வாக்களிப்பார்கள். இங்கு நான் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்" என்றார்.
-
எங்கே போனார்கள் சிங்கப்பெண்கள்? ஒரே நாளில் 5 சிறுமிகளுக்கு நேர்ந்த கொடூரம்.. தமிழகத்தில் பேரதிர்ச்சி -
உதயநிதி வட்டத்தை காலி செய்யும் விஜய்.. ரெடியான மெகா பிளான்.. முதல் தூண்டிலே திமிங்கலத்திற்கு! -
நாய்க்கு பிரியாணி.. மக்களை இழிவுபடுத்திப் பேசிய ராகவா லாரன்ஸ்! எழுந்த கண்டனம்.. பறந்த விளக்கம்! -
“மக்களை நாய்கள் என்று சொல்லவில்லை.. நான் பேசியதை தவறாக பரப்புகின்றனர்” - ராகவா லாரன்ஸ் விளக்கம்! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
இழுத்து பிடித்த எடப்பாடி பழனிசாமி.. விட்டு விலகும் நிர்வாகிகள்! மதுராந்தகத்தில் சம்பவம் செய்யும் தவெக! -
விஜய்யை ஒருமையில் பேசிய சீமானுக்கு சிக்கல்? சென்னை போலீஸ் கமிஷனரிடம் தவெக வழக்கறிஞர் புகார் -
அடித்து தூக்கும் விஜய்.. நில ஒதுக்கீட்டில் ராக்கெட் வேகம்.. லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகள் உருவாகும் -
பொண்ணு கிடைச்சாலும்.. புதன் கிடைக்காது! அரசியல் என்ட்ரி கொடுக்கும் ராகவா லாரன்ஸ்! தவெகவில் ஐக்கியம்? -
தமிழ்நாட்டில் ஹையோசங் டிஎன்எஸ் புதிய தொழிற்சாலை.. ஏடிஎம் உற்பத்திக்கு திட்டம்! -
கோவையன்ஸ் ஓட்டு மட்டும் போதுமா? மதுரையை மறந்த விஜய்! கொந்தளிப்பில் ’சவுத்’ மக்கள்! என்னாச்சு? -
வந்துட்டாருய்யா.. வந்துட்டாரு! திருச்சி கிழக்கில் வடிவேலு? திமுகவில் வெடித்த கலகக் குரல்! என்னாச்சு?












Click it and Unblock the Notifications