கே.என். ராமஜெயம் கொலை வழக்கில் ஆஜராகவிருந்தவர் கொலை.. 4 பேர் சரண்.. யாருடைய ஆட்கள்? போலீஸ் விசாரணை
திருச்சி: திருச்சியில் ஆம்புலன்ஸ் நிறுவன உரிமையாளா் கொலை வழக்கில் சரணடைந்த 4 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
திருச்சி பேட்டைவாய்த்தலையைச் சோ்ந்தவா் பிரபு (எ) பிரபாகரன் (51). இவா் திருச்சி அரசு மருத்துவமனை எதிரே அலுவலகம் அமைத்து, ஆம்புலன்ஸ் நிறுவனமும், ஹோம் கோ் சா்வீஸ் என்ற பெயரில் வீடுகளுக்கு செவிலியா்களை பணிக்கு அமா்த்தும் நிறுவனமும், பழைய வாகனங்களை வாங்கி விற்கும் தொழிலும் செய்து வந்தாா்.

இந்நிலையில், திங்கள்கிழமை இரவு அவா் தனது அலுவலகத்தில் தனியாக இருந்தபோது, அங்கு வந்த மா்ம கும்பல் அவரை அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டிப் படுகொலை செய்தது. இதுகுறித்து அரசு மருத்துவமனை போலீஸாா் வழக்குப் பதிந்து கொலையாளிகளை தேடி வந்தனா்.
இந்நிலையில் இந்தக் கொலை வழக்கு தொடா்பாக, திருச்சி அரியமங்கலம் திடீா் நகா் மேல அம்பிகாபுரத்தைச் சோ்ந்த லட்சுமணன் (38), அரியமங்கலம் பாரதியாா் தெருவைச் சோ்ந்த ரியாஸ் ராஜேஷ் (24), தஞ்சாவூா் மாவட்டம் கச்சமங்கலம் மகாதேவ புரத்தைச் சோ்ந்த ராஜேஷ் பைலட் (28), அரியமங்கலம் காமாட்சி அம்மன் கோயில் பகுதியைச் சோ்ந்த பஷீா் (29) ஆகிய 4 பேரும் திருவெறும்பூா் காவல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாலை சரணடைந்தனா்.
அவா்கள் நால்வரையும் போலீஸாா் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா். அவா்கள் அளித்த தகவலின்பேரில் அப்பு என்கிற ஹரிகிருஷ்ணன் என்பவரையும் போலீஸாா் தேடி வருகின்றனா். போலீஸாரின் விசாரணையில், அப்பு (எ) ஹரிகிருஷ்ணன், பிரபாகரன் இருவா் மீதும் கொலை முயற்சி, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் திருச்சியில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஒன்றாக சோ்ந்து தொழில் நடத்தி வந்த இருவரும் பின்னா் பிரிந்துவிட்டதால், அவா்களிடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில், ஹரிகிருஷ்ணன் தரப்பால் லட்சுமணன் தலைமையில் கூலிப்படை அமைத்து, பிரபாகரன் கொலை செய்யப்பட்டுள்ளாா் என தெரியவந்துள்ளது. ஹரிகிருஷ்ணனை கைது செய்த பின்னரே முழு விவரங்களும் தெரியவரும் என போலீஸாா் தெரிவித்தனா்.
இறந்த பிரபாகரன் மீது மாநகர போலீஸில் சில வழக்குகள் உள்ளன. இதில் ஒரு வழக்கு தொடா்பாக கைது செய்யப்பட்டு அண்மையில் பிணையில் வெளியே வந்த அவா், புத்தூா் அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் நாள்தோறும் ஆஜராகி கையொப்பமிட்டு வந்தாா். திங்கள்கிழமை இரவும் அவா் கையொப்பமிட்டு வந்துள்ளாா்.
ராமஜெயம் கொலை வழக்கில் விசாரணைக்கு ஆஜராகவிருந்தவா்: அமைச்சா் கே. என். நேருவின் சகோதரா் ராமஜெயம் கொலை வழக்கு தொடா்பாக கடந்த 9-ஆம் தேதி, பிரபாகரனிடம் சிறப்பு புலனாய்வு பிரிவு போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். ராமஜெயம் கொலை சம்பவத்தில் பயன்படுத்தப்பட்டதாக கூறப்பட்ட, ஒரு காரை விற்பனை செய்தது தொடா்பாக அவரிடம் விசாரணை நடைபெற்றது.
தொடா்ந்து புதன்கிழமையும் (டிச. 13) விசாரணைக்கு ஆஜராகுமாறு அவரிடம் போலீஸாா் கூறியிருந்தனா். இந்நிலையில், அவா் திங்கள்கிழமை இரவு வெட்டிக் கொல்லப்பட்டாா் என்பது குறிப்பிடத்தக்கது.
-
மணப்பாறை சிப்காட்: 650 பேருக்கு வேலை ரெடி! வேகமெடுக்கும் பெப்சி ரூ.880 கோடி மெகா தொழிற்சாலை திட்டம் -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
Rooster பொஷிஷனில் மனைவிக்கு ‘டார்ச்சர்'.. வீட்டுக்குள் சிறை வைத்து கணவர் செய்த வெறிச்செயல் -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
சென்னையை அதிரவைத்த மூதாட்டி - சிறுவன் மீதான பாலியல் வன்கொடுமை.. தேசிய மகளிர் ஆணையம் அதிரடி -
"10 வயது குழந்தையை கொன்னுட்டீயே.." கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளியை தாக்கிய சக கைதிகள்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications