சுயநலத்திற்காக சொந்த ஜாதியினரை பலிகடாவாக்கியவர் நீங்கள்.. கிருஷ்ணசாமிக்கு கருணாஸ் கண்டனம்

Subscribe to Oneindia Tamil

திருச்சி: தற்சமயம் அரசியல் அனாதையாக இருக்கும் தாங்கள் மாஞ்சோலை தொழிலாளர்கள் சம்பவத்தை வைத்து அரசியல் செய்ததது போல் தேவர்மகன் 2 படத்தை வைத்து தங்களை சாதி தலைவராக காட்டவும், தங்கள் சுயலாபத்திற்காக நீங்கள் சார்ந்த சாதியினரை பலிகடாவாக்க நினைப்பதும் கடும் கண்டனத்துக்குரியது என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமிக்கு, முக்குலத்தோர் புலிப்படை தலைவர் நடிகர் கருணாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசன் தேவர்மகன் 2 படத்தை எடுக்கப் போவதாக அறிவித்துள்ளார். இதற்கு டாக்டர் கிருஷ்ணசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். படத்தின் பெயரை தேவேந்திரர் மகன் என்று வைக்க வேண்டும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

இதற்கு கருணாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

[ஏ.ஆர். முருகதாஸ் வீட்டிற்கு சென்ற போலீஸ்... நள்ளிரவில் தீயாய் பரவிய கைது செய்தி!]

முடிவெடுக்க நீங்கள் யார்

முடிவெடுக்க நீங்கள் யார்

புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, வெளியிட்ட அறிக்கையில் கமலஹாசன் தேவர் மகன் 2 படம் எடுக்கப்போவதாகவும், அப்படி எடுத்தால் அப்படம் முடங்கும் எனவும் தெரிவித்திருந்ததார். தமிழகத்தில் யார் என்ன படம் எடுக்கணும், என்ன பெயர் வைக்கணும் என்பதை கதாநாயகனும், தயாரிப்பாளரும் முடிவு செய்வார்கள் தவிர நீங்கள் இல்லை.

கமல் படிக்கத்தானே சொன்னார்

கமல் படிக்கத்தானே சொன்னார்

தேவர் மகன் படத்தால் தென் தமிழகத்தில் பெரிய கலவரம் ஏற்பட்டதாக கூறியிருந்தீர்களே...ஏதேனும் இரு சமூகத்திடையே கலவரம் வரும் மாதிரி எந்த ஒரு காட்சியாவது அப்படத்தில் இருக்கிறதா? தேவர் மகன் படம் என்பது கிராமத்தில் இரு குடும்பத்தினரிடம் உள்ள பகையை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட படம். அதில் கூட இறுதி காட்சியில் அனைவரும் பிள்ளைகளை படிக்க வைக்க சொல்லி அறிவுரையே வழங்கியிருப்பார் கமலஹாசன்.

வாய் பொத்தியிருந்தது ஏன்

வாய் பொத்தியிருந்தது ஏன்

மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அவர்கள் அளித்த பேட்டியில் கூட தன் சாதியினரை உயர்வாக படம் எடுக்கலாம் தவிர எந்த சாதியையும் குறைத்து படம் எடுக்க கூடாது என கூறியிருந்தார். அதன்படி பார்த்தால் சமீபகாலமாக சில டைரக்டர்கள் தேவர் சமுதாயத்தை இழிவு படுத்தும் விதமாகவே படம் எடுக்கின்றனர்.அச்சமயம் தங்களை போன்றவர்கள் வாயை பொத்திக்கொண்டு இருப்பது ஏன்?

பேச திராணி இருக்கே

பேச திராணி இருக்கே

தேவர் மகன் படத்தின் காரணமாக 25 ஆண்டுகளாக இரு சமூகத்தினரிடையே பகை தீராமல் இருப்பதாக பொய்யான கருத்தை விதைக்கும் நீங்கள் 1957ல் இருந்த காங்கிரஸ் அரசு இரு சமூகத்தினரிடையே தீராத பகையை ஏற்படுத்த காரணமாக இருந்ததை பற்றி பேச திராணி இருக்கிறதா? உங்களுக்கு.

வரலாறு இருந்தால் படம் எடுங்க

வரலாறு இருந்தால் படம் எடுங்க

புராணக் கதைகளில் உள்ள வீரபாகுத்தேவர், புலித்தேவன், வெள்ளையத்தேவன், ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி, வேலுநாச்சியார், மருது சகோதரர்கள், பசும்பொன் திருமகனார் உட்பட பல வரலாற்று பெருமைகளுக்கு சொந்தக்காரர்களான எங்களை பற்றி அக்காலம் முதல் இந்த யுகம் இருக்கும் வரை திரைப்படங்கள் வந்துகொண்டுதான் இருக்கும். உங்களுக்கு ஏதாவது வரலாறு இருந்தால் தாங்களும் படம் எடுக்கலாம். யாரும் தடுக்கப் போவதில்லை.

சுயலாபம் பார்ப்பவர் நீங்கள்

சுயலாபம் பார்ப்பவர் நீங்கள்

தற்சமயம் அரசியல் அனாதையாக இருக்கும் தாங்கள் மாஞ்சோலை தொழிலாளர்கள் சம்பவத்தை வைத்து அரசியல் செய்ததது போல் தேவர்மகன் 2 படத்தை வைத்து தங்களை சாதி தலைவராக காட்டவும், தங்கள் சுயலாபத்திற்காக நீங்கள் சார்ந்த சாதியினரை பலிகடாவாக்க நினைப்பதும் கடும் கண்டனத்துக்குரியது என்று கருணாஸ் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+