கடைக்கு லைசென்ஸ்.. நிலுவை சம்பளம்! தமிழக அரசு பெண் அதிகாரிகள் இப்படி இருந்தால் மக்கள் நிலை என்னாகும்
திருச்சி: அரசு அதிகாரிகள் தொடர்ந்து லஞ்சம் வாங்கி கைதாகி வருகிறார்கள்.. அதிலும் பெண் அதிகாரிகளும் லஞ்சம் வாங்கி பொதுவெளியிலேயே சிக்குவது மக்களுக்கு பெரும் அதிர்ச்சி, கவலை, அச்சத்தை உருவாக்குகிறது. இதோ இப்போதும் நேற்று ஒரே நாளில் 2 அதிகாரிகள் கைதாகி உள்ளனர்.. இதில் ஒரு பெண் அதிகாரியும் சேர்ந்து அசிங்கப்பட்டுள்ளார்.. அப்படி என்னதான் நடந்தது ராமநாதபுரம், திருச்சி மாவட்டத்தில்?
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் தாலுகாவில் ஒரு நபர், பூச்சிக்கொல்லி மருந்து கடையை வைத்து நடத்தி வருகிறார். இதற்காக புதிதாக லைசென்ஸ் பெற்றுள்ளார்..

லைசென்ஸ்
இந்நிலையில், கடந்த மாதம் வேளாண்மை உதவி இயக்குநர் கேசவராமன், அந்த நபரின் கடைக்கு வந்து "நான் உனக்கு லைசென்ஸ் கொடுத்த அதிகாரி.. அலுவலக செலவுக்கு ரூ.15 ஆயிரம் கொடுங்கள்" என்று கேட்டுள்ளார்..
பிறகு 2 நாளைக்கு முன்பு அதிகாரி கேசவராமன், மறுபடியும் கடைக்காரருக்கு போனை போட்டு அதே தொகையை கேட்டுள்ளார்.. அவ்வளவு தொகையை தன்னால் தர முடியாது என்று கடைக்காரர் சொல்லவும், அதிகாரி கேசவராமன் பேச ஆரம்பித்துள்ளார்.. இறுதியில் ரூ.8 ஆயிரம் கொடுக்கும்படி கேட்டார்..
8 ஆயிரம் லஞ்சம்
ஆனாலும், கடைக்காரருக்கு லஞ்சம் தர விருப்பமில்லை.. இதை ராமநாதபுரம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசில் புகார் செய்தார். போலீசாரின் அறிவுறுத்தலின் பேரில் கடைக்காரர் ரூ.8 ஆயிரத்தை வேளாண்மை அலுவலகத்தில் கேசவராமனுக்கு கொடுத்தபோது, மறைந்த போலீசார் கேசவராமனை கைது செய்தனர்.
லதா பேபி அதிகாரி
மற்றொரு சம்பவம் திருச்சி நகரில் நேற்று நடந்தது. திருச்சி நகர வட்டார கல்வி அலுவலர் லதா பேபி, கூடுதல் பொறுப்பாக வையம்பட்டி வட்டார கல்வி அலுவலராகவும் பணிபுரிந்து வருகிறார். இவருடைய கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளில் பணியாற்றிய ஆசிரியர்கள், சம்பள விஷயங்கள் தொடர்பாக சில சிக்கல்களை எதிர்கொண்டு வருவதாக தெரிகிறது.
அதில், மணப்பாறையை சேர்ந்த ஆசிரியை விமலா, கடந்த ஜூலை மாதம் பணிமாறுதலுக்கு பிறகு வேறு பள்ளிக்கு சென்று விட்டார். ஆனால் பழைய பள்ளியில் ஜூலை மாதத்தில் பணியாற்றிய 4 நாட்களின் ஊதியம் வழங்கப்படவில்லை.
கொடுபடா சான்றிதழ்
அதை பெற "கொடுபடா" சான்று கேட்டு, ஆசிரியை விமலா கல்வி அலுவலர் லதா பேபிவை அணுகியிருக்கிறார். கொடுபடா சான்றிதழ் (Non-Drawal Certificate) என்றால், அரசு ஊழியர்கள் சம்பளப் பட்டியல், செக் அல்லது ஓய்வூதியம் போன்றவற்றை தொலைத்துவிட்டால், புதிய பணம் பெறுவதற்காக அல்லது கணக்கீட்டிற்காக, "இந்த தொகை இதுவரை வழங்கப்படவில்லை" என்று தகுதிவாய்ந்த அலுவலரால் வழங்கப்படும் சான்றிதழாகும்.
இந்த கொடுபடா சான்றிதழை தருவதற்கு லதா பேபி ரூ.1,500 லஞ்சம் கேட்டுள்ளார்.. ஏற்கனவே 4 நாள் சம்பளம் வராமல் அதிருப்தியில் இருந்த ஆசிரியை விமலாவுக்கு, 1500 லதா பேபி லஞ்சம் கேட்கவும் அதிர்ச்சி அடைந்தார்.. உடனடியாக திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.
அசிங்கப்பட்ட பெண் அரசு அதிகாரி
போலீசாரின் ஆலோசனைப்படி 1,500 ரூபாயை ரசாயனம் தடவிய பணமாக ஆசிரியை விமலா லதா பேபிக்கு கொடுத்தபோது, மறைந்த போலீசார் கல்வி அலுவலரை கைது செய்தனர்.
இதுபோல ஆண், பெண் என பல அரசு அதிகாரிகள் பொதுமக்கள் நம்பிக்கையை குலைக்கும் வகையில் லஞ்சம் வாங்கி சிக்கிய சம்பவங்கள் தொடர்கின்றன. இது சமூகத்தில் பெரும் அதிர்ச்சி, அச்சம், கவலையை தந்து கொண்டிருக்கிறது..
மக்கள் அதிகாரிகளின் நேர்மையை குறித்து எச்சரிக்கை எடுக்க வேண்டிய அவசியம் இன்று ஏற்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு நம்பிக்கை மீண்டும் வழங்க அரசியல் மற்றும் சட்ட அமைப்புகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே நம் அனைவரின் ஆசையாகும்..!!!
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications