அர்ச்சகர் தடுத்தும் கேட்கலை.. அத்துமீறி சாமி கும்பிட்ட பெண் தொழிலதிபரும் தோழியும்.. சமயபுரம் சர்ச்சை
சமயபுரம் கோயிலுக்குள் பெண் தொழிலதிபர் நுழைந்ததாக புகார் எழுந்துள்ளது
திருச்சி: அர்ச்சர்கள் எவ்வளவோ தடுத்தும் கேட்கவில்லையாம்.. பெண் தொழிலதிபரும் அவரது தோழியும் சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்குள் நுழைந்து பூஜையிலும் கலந்து கொண்டதாக ஒரு புகார் எழுந்துள்ளது!!
கொரோனாவைரஸ் தாக்கம் தமிழகத்தில் பரவ தொடங்கும்போதே அனைத்து கோயில்களிலும் தரிசனம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. சமூக பரவலை தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, சமயபுரம் மாரியம்மன் கோயிலிலும் கடந்த 20-ம் தேதி முதல் தரிசனம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது... இதைதவிர, சிறப்பாக கொண்டாடப்படும் தேர் திருவிழாவும்கூட தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில், கடந்த 4-ம் தேதி சாயங்காலம் 5.30 மணிக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்துள்ளது.. இதில், மின்சாதனம் தொடர்புடைய பெண் தொழிலதிபர் ஒருவரும், திருக்கோவில் உதவி கண்காணிப்பாளர் பழனிவேல் என்பவரின் மனைவியும் இந்த பூஜைகளில் கலந்து கொண்டுள்ளதாக சொல்கிறார்கள். கோயிலில் இருந்த அர்ச்சர்கள் தடுத்தும் இவர்கள் உள்ளே நுழைந்துள்ளனர்.
அனைவரையும் பழனிவேல் மிரட்டி தகாத வார்த்தைகளால் பேசி, இவர்கள் 2 பேரையும் பின்வாசல் வழியாக அழைத்து சென்று தரிசனம் செய்ய வைத்தாகவும் கூறப்படுகிறது. சமயபுரம் சுறியுள்ள கிராமத்தினர் இதனால் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்துள்ளனர்.. எனவே கோயிலின் பின்புறம் உள்ள சிசிடிவி கேமிராவையும், கருவறை அருகே உள்ள கேமிராவையும் ஆராய்ந்தால் உண்மை தெரியும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழக அரசின் உத்தரவை மதிக்காமல் தனிநபரின் விருப்பத்தின் பேரில் ஆலய விதிகளை மீறி செயல்பட்ட சமயபுரம் மாரியம்மன் திருக்கோவில் உதவி கண்காணிப்பாளர் பழனிவேல் மீதும் துரித நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற கோரிக்கை வலுத்துள்ளது.
-
சூடம் ஏற்றி.. தீபாராதனை காட்டி.. விஜய்-க்கு சிலை வைத்து கும்பிடும் திருச்சி தொண்டரின் குடும்பம் - வீடியோ -
திருச்சி நர்சிங் மாணவி உயிரிழப்புக்கு தரமற்ற மருந்தே காரணம்.. ஆய்வறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications