மண்டைக்கு ஏறிய காமம்.. பிஞ்சிலே பழுத்த விபரீதம்.. மல்லிகை தோட்டத்தில் பெண் கொலை.. திகிலில் திருச்சி

9 வயது சிறுமியை கல்லால் அடித்தே கொன்றுள்ளான் 14 வயது சிறுவன்

Subscribe to Oneindia Tamil

திருச்சி: மல்லிகை தோட்டத்தில் பிணமாக கிடந்தாள் அந்த பெண்.. ஆசைக்கு இணங்க மறுத்த அவளை கல்லாலேயே அடித்து கொன்றுள்ள பயங்கரம் நடந்துள்ளது.. அந்த குழந்தைக்கு வயசு 9... கொலை செய்தவரின் வயசு 14.. இது நம் திருச்சி மாவட்டத்தில் நடந்துள்ளது!!

Recommended Video

    தந்தையின் செல்போனில் ஆபாச படங்களை பார்த்து கொலைகாரனான சிறுவன்!

    திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த சிறுமி அவர்.. 9 வயதாகிறது.. ஒரு அரசு பள்ளியில் 3-ம் கிளாஸ் படித்து வந்திருக்கிறாள். வீட்டின் பக்கத்தில் மல்லிகை தோட்டம் உள்ளது.

    அங்குதான் ரத்த காயத்துடன் நேற்று முன்தினம் குழந்தை துடித்து கொண்டிருந்தாள்.. தலையில் மட்டும் நிறைய காயங்கள் கிடந்தன. முனகல் சத்தம் கேட்டு கொண்டே இருந்தது.

    சிகிச்சை

    சிகிச்சை

    தோட்டடத்தில் உயிருக்கு சிறுமி போராடிக் கொண்டிருப்பதாக ஒரு சிறுவன் பதறியடித்து கொண்டு, அக்கம்பக்கத்தினருக்கு தகவல் சொல்லவும், அவர்கள் விரைந்து சென்று சிறுமியை திருச்சி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.. ஆனால் பலனின்றி இறந்துவிட்டாள். விஷயம் மணப்பாறை போலீசுக்கு எட்டியது.

     ரத்தக்கறை

    ரத்தக்கறை

    சம்பவம் நடந்த இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.. அங்கு ரத்தக்கறை படிந்த ஒரு ஷர்ட் இருந்தது.. இந்த சட்டைதான் அவர்களுக்கு கிடைத்த ஒரே க்ளூ.. சட்டை யாருடையது என்று விசாரிக்க தொடங்கியபோதுதான், சிறுவனின் சட்டை என தெரியவந்தது. இதனால் போலீசார் அதிர்ச்சி அடைந்து அத்ந சிறுவனை பிடித்து விசாரித்தால், அதற்கு மேல் அதிர்ச்சியாகிவிட்டனர்.. அந்த சிறுமியை கொன்றது சிறுவன்தான் என்பது தெரியவந்தது.

     ஆத்திரம்

    ஆத்திரம்

    சிறுமி மீது சிறுவனுக்கு ஆசையாம்.. தன் விருப்பத்துக்கு இணங்க சிறுமியை வற்புறுத்தி, அதற்கு சிறுமி மறுக்கவும் 14 வயது சிறுவனுக்கு ஆத்திரம் வந்துவிட்டதாம்.. அதனால் அங்கிருந்த கல்லால் அடித்து கொலை செய்தது அம்பலமானது... சிறுவன் மீது கொலை வழக்கு, போக்சோ சட்டத்தின் கீழ் மணப்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.. கைதும் செய்துள்ளனர்!!

     ஆபாச வீடியோ

    ஆபாச வீடியோ

    இதில் ஒரு பயங்கரம் என்னவென்றால், சிறுவனின் தந்தை ஏகப்பட்ட ஆபாச படம், நிர்வாண வீடியோக்களை பார்ப்பவராம்.. செல்போனில் இதே வேலையாக இருந்திருக்கிறார்.. அப்படித்தான் ஒருநாள் இந்த வீடியோவை பார்த்துவிட்டு, அப்படியே செல்போனையும் வைத்துவிட்டு சென்றுள்ளார்.. அதை சிறுவன் யாருக்கும் தெரியாமல் எடுத்து பார்த்துவிடவும், அதே பழக்கமாகி உள்ளது.

    முத்தம்

    முத்தம்

    மனசு பூராவும் விகாரமெடுக்க ஆரம்பித்தது. அந்த வீடியோவில் சிறுமி ஒருவருக்கு முத்தம் தரும் காட்சியும் இருந்துள்ளது.. அதை பார்த்தபிறகு விபரீதம் தலைதூக்கி உள்ளது. அதை எப்படியாவது செயல்படுத்த பிளான் செய்தபோதுதான், 3-ம்கிளாஸ் படிக்கும் சிறுமி மீது கவனம் விழுந்துள்ளது.. அந்த சிறுமி மல்லிகை தோட்டத்துக்கு தனியாக வருவதை கண்டதும், அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்த சிறுவன் பிளான் செய்தான்.

    வீடியோ

    வீடியோ

    சிறுமியை கட்டிப்பிடித்து முத்தம் தந்து தகாத முறையில் நடந்து கொள்ள முயன்றபோது சிறுமி கதறி அழுதிருக்கிறாள்.. அப்போதுதான் யாராவது வந்துவிடுவார்கள் என்று பயந்துபோன சிறுவன், கல்லை எடுத்து அடித்து கொன்றிருக்கிறான்.. இப்படி கல்லை எடுத்து கொலை செய்யும் மாடல்கூட ஒரு வீடியோவில் காட்டியதுதானாம்!!

     அதிர்ச்சி

    அதிர்ச்சி

    வளர்ப்பு சரியில்லை என்று சொல்வதா? பெற்றோர் கண்காணிக்க தவறிவிட்டனர் என்று சொல்வதா? செல்போனில் நிரம்பி வழியும் ஆபாசத்தை சொல்வதா? ஆபத்தை தரும் மித மிஞ்சிய அறிவியல் வளர்ச்சியை சொல்வதா? எதை சொல்ல? என்னத்த சொல்ல? ஆனால் அந்த பிஞ்சு குழந்தை இன்று நம்முடன் இல்லை!

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+