பேப்பர் பொறுக்கும் ஜப்பான் செல்வராஜ்.. கல்லை தூக்கி போட்டு கொன்ற காஜாமைதீன்.. திருச்சியில் அதிர்ச்சி
திருச்சியில் தொழிலாளி கல்லை தூக்கி போட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார்
திருச்சி: ஜப்பான் செல்வராஜுவுக்கு பேப்பர் பொறுக்குவதுதான் தொழில்.. சாலையோரம் தூங்கி கொண்டிருந்த இவரை காஜாமொய்தீன் என்ற இளைஞர் கல்லை தூக்கி போட்டு கொன்றுவிட்டார்.. கொலை செய்தவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது!
திருச்சி பெரிய கடை வீதியை சேர்ந்தவர் ஜப்பான் செல்வராஜ்.. 55 வயதாகிறது.. பழைய பாட்டில், பேப்பர்களை பொறுக்கி அவைகளை சேமித்து விற்பனை செய்து வந்தார்... இவருக்கு 2 பெண்கள், 2 ஆண் பிள்ளைகள் உள்ளனர்.

சில வருடங்களுக்கு முன் மனைவி இறந்துவிட்டார்.. மனைவி மீது ஜப்பான் செல்வராஜுக்கு பிரியம் அதிகம்.. அதுவரை சந்தோஷமாக வாழ்ந்து வந்த இவர், மனைவி இறந்த பிறகு அந்த வீட்டிற்கு செல்லவே விருப்பமில்லை.. அதனால் தன்னுடைய உறவினர்களிடம் தந்துதான் வளர்த்து வருகிறார்.
எப்போதாவது பிள்ளைகளை பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டால், அங்கு சென்று பார்த்து விட்டு வருவார்.
வழக்கமாக வேலையை முடித்ததும், கோட்டை போலீஸ் ஸ்டேஷன் பகுதியில் உள்ள கடை வாசலில் தான் ஜப்பான் செல்வராஜ் தூங்குவார்.. விடிகாலை எழுந்ததும் பரபரப்பான வேலையில் இறங்கி விடுவார்.. அப்படித்தான் நேற்றிரவும் தூங்கினார்.. விடிகாலை 4 மணி இருக்கும்.. யாரோ ஒருவர் ஜப்பான் செல்வராஜ் தலையில் கல்லால் அடித்து கொலை செய்தார்.
பக்கத்திலேயே போலீஸ் ஸ்டேஷன் உள்ளதால், போலீசாரும் விரைந்து வந்தனர்.. ரத்த வெள்ளத்தில் ஜப்பான் செல்வராஜ் இறந்து கிடந்தார். அவரது உடலை மீட்டு போஸ்ட் மார்ட்டம் செய்ய ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்ததுடன், வழக்கு பதிவு செய்து விசாரணையும் தொடங்கினர்
அப்போதுதான் கல்லால் அடித்து கொன்றவர் பெயர் காஜா மொய்தீன் என்பது தெரியவந்தது. இவர் எப்போதுமே அந்த பகுதியில் சுற்றி கொண்டே இருப்பாராம்.. மனநிலையும் சற்று பாதிக்கப்பட்டதாக சொல்கிறார்கள்.. கொலையை செய்துவிட்டு, ரத்தத்தை பார்த்து பயந்துபோய் காஜாமைதீன் ஒரு இடத்தில் தலைமறைவாக இருந்தார்.
அவரை கைது செய்த போலீசார் விசாரணை செய்கின்றனர். மேலும் கொலை செய்யப்பட்ட ஜப்பான் செல்வராஜ் குடும்பத்தினரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தேரடி பஜாரில் தூங்கிக் கொண்டிருந்தவரை கல்லால் அடித்து கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் தந்து வருகிறது.
-
காலையில் கஞ்சா பால்.. இட்லிக்கு கஞ்சா சட்னி.. பெட் ரூம் முழுக்க 70 கஞ்சா செடிகள்.. மிரண்ட போலீஸ் -
காதல் திருமணம் செய்துக்கொண்ட மகள்! பெட்ரோல் குண்டு வீசிய பாசக்கார தந்தை! நெல்லையில் ஷாக்! -
திருச்சியில் கார் ஓட்டுநரால் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. மது கொடுத்து பாலியல் தொல்லை! -
ரொம்ப அசால்ட்டா இருந்துருக்காங்க! விசாரணை அதிகாரியின் விசித்திர நடைமுறை! போலீஸை விளாசிய நீதிமன்றம் -
சூடம் ஏற்றி.. தீபாராதனை காட்டி.. விஜய்-க்கு சிலை வைத்து கும்பிடும் திருச்சி தொண்டரின் குடும்பம் - வீடியோ -
திருச்சியில் பட்டப்பகலில் கொடூரம்.. 17 வயது பெண்ணை காரில் கடத்தி பலாத்காரம்.. போலீஸ் தீவிர வலைவீச்சு -
திருச்சி நர்சிங் மாணவி உயிரிழப்புக்கு தரமற்ற மருந்தே காரணம்.. ஆய்வறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன?












Click it and Unblock the Notifications