"செத்தாலும் சரி.. அவளுக்கு கெட்ட பேர் வந்துடகூடாது" முகம் தெரியாத காதலிக்காக தூக்கில் தொங்கிய இளைஞர்

திருச்சி இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்

Subscribe to Oneindia Tamil

திருச்சி: தான் செத்தாலும் சரி, காதலிக்கு எந்த கெட்ட பெயரும் வந்துவிடக்கூடாது என்று இளைஞர் ஒருவர் நினைத்துள்ளார்.. தன்னிடம் காதலி பேசவில்லை என்பதற்காக தற்கொலையும் செய்து கொண்டுள்ளார்.. இத்தனைக்கும் இது ஒரு "பார்க்காமலேயே காதல்"!

சேலம் மாவட்டம் அஸ்தம்பட்டியை சேர்ந்தவர் ஆனந்தகுமார்.. தனியார் ஏடிஎம்களில் பணம் நிரப்பும் வேலை பார்த்து வந்தார்.. இவரது மாமா வீடு திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ளது.. 2 மாசத்துக்கு முன்பு அங்கு சென்றவர் ஊரடங்கினால் அங்கேயே சிக்கி கொண்டார்.

 lockdown crime: youth hang himself after instagram girl friend blocked him

சொந்த ஊருக்கு போக முடியாமல், மாமா வீட்டிலேயே தங்கியிருந்தபோதுதான் இன்ஸ்டாகிராமில் மூழ்கினார்.. ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டது.. அந்த பெண்ணின் பெயரில் ஐடி மட்டுமே இருந்ததே தவிர, முகம் இல்லை.

வெறும் மெசேஜ் அனுப்பியே இவர்களின் நட்பு காதலாக மாறி உள்ளது.. யார் என்றே தெரியாத அந்த பெண்ணை ஆனந்தகுமார் உருகி உருகி காதலித்தார்.. இன்னும் சொல்ல போனால் அந்த ஐடியில் உள்ளது ஒரு பெண்தானா என்றுகூட அவருக்கு சரியாக தெரியாது. ஆனால் மனசார அந்த பெண்ணை விரும்பினார்.

என்னாச்சோ தெரியவில்லை, 2 நாளைக்கு முன்பு அந்த பெண் இன்ஸ்டாகிராமில் ஆனந்தகுமாரை பிளாக் செய்துள்ளதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த ஆனந்தகுமார் அந்த பெண்ணுக்கு மெசேஜ் அனுப்ப எந்தெந்த வழிகளிலோ முயற்சி செய்தும் நடக்கவில்லை.. இதனால் மன உளைச்சலிலேயே இருந்தார்.. இதை கவனித்த அவரது குடும்பத்தினர் ஆனந்தகுமாரை சமாதானப்படுத்தினர்.

அப்போதும் மனசு பூராவும் அந்த பெண்ணையே சுத்தி சுத்தி வந்தது.. ஒருகட்டத்தில் தாங்க முடியாத துக்கத்தில் ஆனந்தகுமார் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். தகவலறிந்து திருவெறும்பூர் போலீசாரும் விரைந்து வந்து அவசரது சடலத்தை மீட்டு, விசாரணையை ஆரம்பித்தனர். அப்போது அவரது செல்போனை ஆய்வு செய்தனர்.

அதில், தற்கொலைக்கு முன்பு, அந்த பெண் இதுவரை அனுப்பிய எல்லா மெசேஜ், வீடியோக்களையும் ஆனந்தகுமார் டெலிட் செய்துள்ளார்.. நாம் இறந்தாலும் தன் காதலிக்கு எந்த கெட்ட பெயரும் வந்துவிடக்கூடாது என்று நினைத்துள்ளார்.. ஒரே ஒரு ஆடியோ மட்டும் போலீசுக்கு சிக்கி உள்ளது.. அதில், தன்னுடன் பேசுமாறு காதலியிடம் கெஞ்சுகிறாராம்.. தொடர் விசாரணையும் நடந்து வருகிறது. பார்க்காமலேயே காதல் என்றாலும், பேசியது பெண்ணா, ஆணா என்றுகூட தெரியாமல் இறந்துவிட்டார் ஆனந்தகுமார்.

ஒருவேளை அது பெண்ணாகவே இருந்தாலும், அவருக்கு எந்த கெட்ட பெயரும் தன்னால் வந்துவிடக்கூடாது என்று நினைத்துள்ளது நெகிழ்ச்சியை தருகிறது.. இந்த காலத்தில் இந்த அளவுக்கு உணர்வுபூர்வமாக யோசிப்பார்களா என்று வியப்பாக இருந்தாலும், இன்னொரு பக்கம் ஆனந்தகுமாரின் செயல் முட்டாள்தனமாகவும் தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+