ஏர்போர்ட் சுவரை இடித்துக்கொண்டு உள்ளே நுழைந்த தக்காளி லாரி.. ஷாக் ஆன அதிகாரிகள்.. அதிர்ச்சி சம்பவம்!

Subscribe to Oneindia Tamil

திருச்சி : திருச்சி விமான நிலைய சுற்றுச் சுவரை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்த தக்காளி லாரியால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஓசூரில் இருந்து அறந்தாங்கி நோக்கிச் சென்று கொண்டிருந்த காய்கறி லோடு லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, திருச்சி விமான நிலைய சுற்றுச்சுவரை இடித்துக்கொண்டு உள்ளே புகுந்தது.

இந்த விபத்தில் விமான நிலைய சிக்னல் கருவிகள் சேதமடைந்துள்ளன. அவற்றை சரி செய்யும் பணியில் அதிகாரிகள், ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

காய்கறி லாரி

காய்கறி லாரி

புதுக்கோட்டையைச் சேர்ந்த செந்தில் குமார் என்பவர் கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் இருந்து தக்காளி லோடு ஏற்றிக்கொண்டு புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நோக்கி லாரியை ஓட்டிக் கொண்டு வந்து கொண்டிருந்தார். திருச்சி விமான நிலையம் அருகே வந்த கொண்டிருந்த போது முன்னே சென்ற லாரி திடீரென இடது புறம் திரும்பியதால் அதன் மீது மோதாமல் இருப்பதற்காக டிரைவர் லாரியை வலது புறமாக விபத்து நேராமல் இருப்பதற்காக திருப்பியுள்ளார்.

காம்பவுண்ட் சுவரில்

காம்பவுண்ட் சுவரில்

அப்போது எதிர்பாராவிதமாக கட்டுப்பாட்டை இழந்த லாரி, திருச்சி விமான நிலைய சுற்றுச் சுவரை உடைத்துக்கொண்டு உள்ளே புகுந்தது. சுற்றுச் சுவர் இடிந்து சுவருக்கு அருகே இருந்த சிக்னல் மீது மோதியதில் அதன் கருவிகள் முழுவதுமாக சேதமடைந்தன. உடனடியாக இந்த விபத்து குறித்து ஏர்போர்ட் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

அதிர்ச்சியடைந்த போலீசார்

அதிர்ச்சியடைந்த போலீசார்

அதன்பேரில் விமான நிலைய மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்களும், ஏர்போர்ட் காவல் நிலைய காவலர்கள், போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து பொக்லைன் இயந்திரம் மூலம் லாரியை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் ஏர்போர்ட் பொறியாளர்கள் மற்றும் ஊழியர்கள், சேதமடைந்த சிக்னலை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

விசாரணை

விசாரணை

இந்த விபத்து குறித்து லாரி டிரைவரிடம் ஏர்போர்ட் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திடீரென லாரி ஒன்று விமான நிலைய சுற்றுச் சுவரை உடைத்து உள்ளே சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியது. திருச்சி ஏர்போர்ட் பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டதன் காரணமாக சில மணி நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+