முஸ்லீம் என்றாலே சமூக விரோதி என நிலவி வரும் கருத்தை ஏற்க முடியாது! உயர்நீதிமன்றம் வைத்த குட்டு!
திருச்சி: இஸ்லாமியர் என்றாலே சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் என்று நிலவி வரும் கருத்து ஏற்கக் கூடியது அல்ல என சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை தெரிவித்திருப்பதற்கு கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கத் தலைவர் இனிகோ இருதயராஜ் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
எந்த வழக்கை விசாரித்த போது சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை இந்தக் கருத்தை தெரிவித்தது என்பது பற்றியும் இனிகோ கூறியிருக்கிறார். அதன் விவரம் வருமாறு;

''சில ஆண்டுகளுக்கு முன்னர் டி.என்.பி.எஸ்.சி கிரேடு- 2 காவலர் நியமனத் தேர்வு நடத்தியது. இதில்,காவலராக பணிபுரிந்து வந்த காஜா ஷெரீப் என்பவர் பங்கேற்றார். தேர்வானோர் பட்டியலில் அவரது பெயர் இருந்தது. ஆனால், அவருக்கு கிரேடு 2 காவலர் பணி நியமனம் மட்டும் வழங்கப்பட வில்லை.
இதை எதிர்த்து அவர் உயர்நீதிமன்றத்தில் மனு செய்தார். விசாரணையின்போது, 'மனு தாரர் மனித நீதிப் பாசறை' என்ற அமைப்பின் உறுப்பினராக இருந்தார். அது தடைசெய்யப்பட்ட அமைப்பு என்பதால், மனுதாரருக்கு பணி நியமனம் வழங்கவில்லை என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி பட்டு தேவானந்த்,"எந்த மனிதனுக்கும் சாதி, இனம், நிறம், பிர தேசம் அல்லது மதம் போன்ற சமூக கலாச்சார அடையாளங்களின் அடிப்படையில் எந்த வகையிலும் பாகுபாடு காட்டக்கூடாது. பொறுப்புள்ள ஒவ்வொரு குடிமகனும் நாட்டிற்கு சேவையாற்றுவதில் எந்த தடையும் இல்லாமல் தங்கள் திறனை நிரூபிக்க போதுமான வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும்.

மனுதாரரான காவல்துறை, காஜா ஷெரீப் தனது பணிக்கால நேர்மை குறித்து எந்தப் பிரச்சனையையும் எழுப்பவில்லை. அரசுப் பணியில் சேர்ந்தவுடன், சட்டப்பூர்வ விதிகளின்படி அவர் தனது பேட்ச்மேட்களுடன் சேர்ந்து பதவி உயர்வுக்கான பரிசீலனைக்கு இயல்பாகவே தகுதியுடையவராக இருப்பார். இதைப் பறிப்பது சமத்துவம் மற்றும் இயற்கை நீதிக்கு எதிரானது.எனவே, பணி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு மறுத்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. பணி மூப்பு அடிப் படையில் பதவி உயர்வு, பணப் பலன்கள் வழங்க வேண்டும்" என உத்தரவிட்டார்.
மேலும், "காவலர் ஹாஜா ஷெரீப் அடைந்த மன வேதனையை இந்த நீதிமன்றத்தால் உணர முடிகிறது. இஸ்லாமியர் என்றாலே சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் என்று நிலவி வரும் கருத்து ஏற்கக் கூடியது அல்ல. காவலர் ஹாஜா ஷெரீப் சிறுபான்மை சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதால் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதை ஏற்க முடியாது.
இங்கு யாரும் உயர்ந்தவர்களோ, தாழ்ந்தவர்களோ இல்லை. 21-ஆம் நூற்றாண்டில் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களும், அதிகாரிகளும் தற்காலத்துக்கு ஏற்ப சிந்தனை, மனநிலையை மாற்றிக் கொள்ள வேண்டும். மனிதாபிமானம் இல்லை என்றால் இந்த உலகத்தில் யாருமே வாழ முடியாது" என்றும் நீதிபதி பட்டு தேவானந்த் குறிப்பிட்டுள்ளார்.
-
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications