மெட்ரோ ரயில் விவகாரம்.. முதல்வர் ஸ்டாலின் கவனம் செலுத்தவில்லை.. அண்ணாமலை குற்றச்சாட்டு!
திருச்சி: கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் கவனம் செலுத்தவில்லை என்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இந்த இரு மாவட்டங்களுக்கும் மெட்ரோ வரக் கூடாது என்ற எண்ணமே முதல்வர் ஸ்டாலினுக்கு உள்ளதாக கூறிய அண்ணாமலை, தமிழ்நாட்டிற்கான நிதிப் பகிர்வு அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டத்திற்கு ரூ.10,740 கோடியில் 34.8 கிமீ தொலைவுக்கும், மதுரையில் ரூ.11,368 கோடியில் 32 கிமீ தொலைவுக்கும் மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வருவதற்கு திட்டமிட்டப்பட்டது. மெட்ரோ ரயில் திட்டத்திற்கு பின்னணியில் இந்த இரு மாவட்டங்களின் எதிர்கால வளர்ச்சியும் கணக்கில் கொள்ளப்பட்டது. தொடர்ந்து மெட்ரோ திட்டத்திற்கான திட்ட அறிக்கை தயார் செய்த தமிழக அரசு மத்திய அரசிடம் ஒப்புதலுக்கு அனுப்பியது.

சுமார் ஓராண்டுக்கும் மேலாக திட்ட அறிக்கையை மத்திய அரசு நிலுவையில் வைத்திருந்த சூழலில், மத்திய அரசு நிராகரித்தது. இது தமிழக மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் பிரதமர் நரேந்திர மோடி கோவை வருவதற்கு ஒருநாள் முன்பு இந்த அறிவிப்பு வெளியாகியது பல்வேறு கட்சிகள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஆனால் மெட்ரோ திட்டம் நிராகரிக்கப்பட்டதற்கு தமிழக அரசு தயார் செய்த திட்ட அறிக்கையே காரணம் என்று அதிமுக மற்றும் பாஜக கட்சிகள் விமர்சித்து வருகின்றனர். அதேபோல் 2026ல் அதிமுக கூட்டணி ஆட்சி அமைந்த பின், கோவை மற்றும் மதுரைக்கு மெட்ரோ திட்டம் வரும் என்று பாஜக நிர்வாகிகள் கூறி வருகின்றனர்.
இதன் மூலமாக அதிமுக கூட்டணிக்கு வாக்களித்தால் மட்டுமே மெட்ரோ வரும் என்று மறைமுகமாக சொல்லப்படுவதாக விமர்சிக்கப்பட்டது. இந்த நிலையில் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து அண்ணாமலை பேசுகையில், பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாடு வரும் போது முதல்வர் ஸ்டாலின் சந்தித்திருக்கலாம். ஆனால் பிரதமர் மோடி வரும் போதெல்லாம் சந்திக்காமல் இருக்க முதல்வர் காரணம் சொல்கிறார்.
மெட்ரோ ரயில் விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் போதுமான கவனம் செலுத்தவில்லை. கோவை, மதுரை மாவட்டங்களுக்கு மெட்ரோ ரயில் வரக் கூடாது என்ற எண்ணமே முதல்வருக்கு உள்ளது. தமிழ்நாட்டிற்கான நிதிப் பகிர்வு 32 சதவிகிதத்தில் இருந்து 42 சதவிகிதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. எந்த மாநில மெட்ரோவிற்கும் வழங்காத நிதியை சென்னை மெட்ரோவிற்கு மத்திய அரசு அளித்துள்ளது.
எந்த ஆதாரத்தின் அடிப்படையில் தமிழ்நாட்டிற்கு நிதி வரவில்லை என்று கனிமொழி பேசுகிறார் என்று தெரியவில்லை. அதேபோல் நெல் மூட்டைகளை பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களுக்காக கொடுக்கப்பட்ட நிதியில் ரூ.360 கோடி ஊழல் நடைபெற்றுள்ளது. ஈரப்பதம் இல்லாமல் நெல்லை காப்பாற்ற திமுக தவறிவிட்டது. அதேபோல் SIR காரணமாக பீகாரில் 6.4 சதவிகித வாக்காளர்கள் நீக்கப்பட்டுவிட்டனர். தமிழ்நாட்டிலும் போலி வாக்காளர்கள் நீக்கப்படுவார்கள் என்று தெரிவித்தார்.
-
"மக்கள் சக்தி இயக்கம்".. அண்ணாமலை தொடங்கும் புதிய அரசியல் பாதை? அமித் ஷா தந்த ரியாக்சன் என்ன? -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
ஜூன் 15ஆம் தேதி புதிய கட்சி? பெருந்துறையில் அண்ணாமலை போட்டி? என்ன செய்ய போகிறது பாஜக? -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
Annamalai: பாஜகவிலிருந்து இன்று விலகுகிறாரா அண்ணாமலை? நிதின் நபினுடன் ஆலோசனை -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல்












Click it and Unblock the Notifications