திருச்சி 2வது தலைநகர் என்பது எம்ஜிஆரின் கனவுத் திட்டம்.. அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பேட்டி
திருச்சி: திருச்சியை தமிழகத்தின் இரண்டாவது தலைநகராக்க வேண்டுமென்பது மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் கனவுத் திட்டம் எனவே இதுபற்றி கோரிக்கை எழுந்தால் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வோம் என சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பேட்டி அளித்துள்ளார்.
திருச்சி மாவட்ட கூட்டுறவு துறை சார்பில் விலையில்லா முகக்கவசம் வழங்கும் விழா சிங்காரப்தோப்பு பகுதியில் உள்ள திருச்சி அமராவதி கூட்டுறவு சங்கத்தில் மாவட்ட ஆட்சியர் சிவராசு தலைமையில் நடைபெற்றது.

அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் கலந்துகொண்டு முகக் கவசம் வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்தனர்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் திருச்சி மாவட்டத்தில் உள்ள 1,224 நியாய விலைக் கடைகள் மூலம் 8 லட்சத்து
14ஆயிரம் குடும்ப அட்டைகள் மூலம் 25லட்சத்து 82ஆயிரம் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் தலா இரண்டு வீதம் 50 லட்சம் எண்ணிக்கையிலான முகக்கவசங்கள் தமிழக அரசால் விலை இன்றி வழங்கப்பட உள்ளது.ஒரு வார காலத்திற்குள் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் முகக்கவசம் வழங்கப்பட்டுவிடும் என கூறினார்.
மேலும் திருச்சியை தமிழகத்தின் இரண்டாவது தலைநகரமாக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளதே என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்.
திருச்சியை தமிழகத்தின் இரண்டாவது தலைநகராக்க வேண்டுமென்பது மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் கனவுத் திட்டம். அத்திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தால் அக்கோரிக்கையை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வோம் என கூறினார்.
முன்னதாக மதுரையை தலைநகராக அறிவிக்க வேண்டும் என்று அமைச்சர் ஆர்பி உதயகுமார், செல்லூர் ராஜூ கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் திருச்சியைச் சேர்ந்த அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், திருச்சி தலைநகராக அறிவிக்க கோரிக்கை எழுந்தால் முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்வோம் என்று கூறியுள்ளார்.
-
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications