திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"பேரரசர் போல மு.க.ஸ்டாலின்.. சிற்றரசர் போல உதயநிதி" திருச்சியில் வரவேற்ற அமைச்சர் கே.என்.நேரு!

Google Oneindia Tamil News

திருச்சி: பேரரசர் போல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், சிற்றரசர் போல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் திருச்சிக்கு வந்திருப்பதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். நீண்ட நாட்களுக்கு பின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சிக்கு வந்திருப்பதால், அவருக்கு திமுக தொண்டர்கள் பிரம்மாண்ட வரவேற்பை அளித்தனர். அதேபோல் திருச்சியில் திமுகவால் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களையும் அமைச்சர் கே.என்.நேரு பட்டியலிட்டு பேசியது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

தமிழகம் முழுவதும் மீண்டும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சுற்றுப்பயணம் செல்ல தொடங்கியிருக்கிறார். அண்மையில் தென்காசி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு பயணம் செய்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த நிலையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சிக்கு வந்தார்.

திருச்சி விமான நிலையம் வந்த அவருக்கு, நிகழ்ச்சி நடைபெறும் அண்ணா விளையாட்டு அரங்கம் வரை பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 9.45 மணியளவில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடனுதவிகள், மணிமேகலை விருதுகள், மாநில அளவிலான வங்கியாளர் விருதுகளை வழங்கினார்.

மு.க.ஸ்டாலினும், டி.ஆர்.பாலுவும் சொன்னது உண்மையா? இல்லையா? - எ.வ.வேலுவுக்கு பாஜக நாராயணன் கேள்வி! மு.க.ஸ்டாலினும், டி.ஆர்.பாலுவும் சொன்னது உண்மையா? இல்லையா? - எ.வ.வேலுவுக்கு பாஜக நாராயணன் கேள்வி!

திருச்சி வந்த மு.க.ஸ்டாலின்

திருச்சி வந்த மு.க.ஸ்டாலின்

தொடர்ந்து புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில், இளைஞரணி செயலாளராக, உள்ளாட்சித்துறை அமைச்சராக, துணை முதல்வராக என ஏராளமான முறை திருச்சிக்கு வந்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்துள்ளார்.

மகளிர் சுயஉதவிக் குழு

மகளிர் சுயஉதவிக் குழு

மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு நிதி வழங்கிய நிகழ்ச்சி திருச்சி மாவட்டத்தில் தான் முதல்முறையாக நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் அனைத்து மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கும் தன் கையால் நிதி உதவியை வழங்கியவர் முதல்வர் மு.க.ஸ்டாலின். சுமார் 4 மணி நேரத்திற்கும் அதிகமாக நின்று கொண்டு மக்களுக்கு உதவியை வழங்கியவர் என்று தெரிவித்தார்.

பேரரசர் ஸ்டாலின், சிற்றரசர் உதயநிதி

பேரரசர் ஸ்டாலின், சிற்றரசர் உதயநிதி

தொடர்ந்து, இன்றைக்கு அமைச்சராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலின், மகளிர் சுயஉதவிக் குழுக்களை திருச்சியில் தொடங்கியது எங்களுக்கு எண்ணற்ற மகிழ்ச்சி. திருச்சியில் ஆரம்பித்த எதுவும் வீண் போனதல்ல. நீங்கள் சிறப்பான இடத்திற்கு வருவீர்கள் என்று வாழ்த்துகிறேன். பேரரசர் போல் தளபதி, சிற்றரசர் போல் உதயநிதி இங்கு வந்துருக்கிறீர்கள்.

திருச்சியின் திட்டங்கள்

திருச்சியின் திட்டங்கள்

இந்த ஒன்றரை ஆண்டு காலத்தில், திருச்சிக்கென புதிய பேருந்து நிலையம், அறநிலையத்துறை மூலம் கோயில்கள் செய்யப்பட்டு வரும் பணிகள், ஈரடுக்கு மேம்பால சாலை, புதிய பாலங்கள், முசிறியில் குடிநீர் திட்டங்கள், புதுக்கோட்டையில் குடிநீர் திட்டங்கள், அரசு அலுவலகங்கள் என எண்ணற்ற பணிகள் நடைபெற்று வருகிறது.

திருச்சியில் வனவிலங்கு காட்சி சாலை

திருச்சியில் வனவிலங்கு காட்சி சாலை

அதுமட்டுமல்லாமல் திருச்சியில் பொழுகுபோக்கு இல்லாத காரணத்தால், வனத்துறை மூலம் வனவிலங்கு காட்சி சாலை அமைப்பதற்கான முயற்சியும் செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் புதிய மருத்துவமனைகள் அமைக்கப்பட்டு வருகிறது. மிகமுக்கிய நகரமான திருச்சியில், அனைத்து திட்டங்களும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.

English summary
Minister KN Nehru has said that Chief Minister M.K.Stalin and Minister Udayanidhi Stalin have come to Trichy like an emperor. After a long time, Chief Minister M.K.Stalin had come to Trichy, DMK workers gave him a grand welcome. Similarly, Minister KN Nehru listed the projects being implemented by DMK in Trichy.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X