Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அழுகிய பழங்களில் ஜூஸ்! நாள்பட்ட 266 கிலோ இறைச்சிகள் பறிமுதல்! திருச்சியில் 9 கடைகளுக்கு நோட்டீஸ்!

Subscribe to Oneindia Tamil

திருச்சி: நாமக்கல்லில் ஷவர்மா சாப்பிட்ட 9ஆம் வகுப்பு மாணவி உயிரிழந்த நிலையில், திருச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் உள்ள உணவகங்களில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி ரெய்டு நடத்தி வருகின்றனர்.

இதில் ஒரு கடையில் அழுகிய பழங்களை கொண்டு மனசாட்சியே இல்லாமல் வாடிக்கையாளர்களுக்கு ஜூஸ் கொடுக்கப்பட்டதை கண்டறிந்த அதிகாரிகள், 50 கிலோ பழங்களை அந்தக் கடையிலிருந்து பறிமுதல் செய்து அழித்தனர். அதேபோல் தில்லை நகர், சாஸ்திரி ரோடு, மணப்பாறை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பிரபல ஹோட்டல்களிலும் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

officials of the food safety department have conducted an active raid on the restaurants in Trichy

திருச்சி மற்றும் மணப்பாறை பகுதிகளில் பல்வேறு ஹோட்டல்களில் நடத்தப்பட்ட சோதனை மூலம் கடந்த 3 நாட்களில் நாள்பட்ட 266 கிலோ இறைச்சிகளை உணவு பாதுகாப்புத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். 9 கடைகளுக்கு உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டத்தின் கீழ் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. 6 கடைகளுக்கு தலா ரூ.3,000 வீதாம் ரூ.18,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதில் குறிப்பிட வேண்டிய விவகாரம் என்னவென்றால் மணப்பாறையில் இயங்கி வந்த பிரபல சைவ ஹோட்டலுக்கு சீல் வைக்கப்பட்டது தான். சமையலறை அசுத்தமாக இருந்ததோடு அழுகிய காய்கறிகள் ரெய்டில் சிக்கியது தான் இதற்கு காரணமாம்.

officials of the food safety department have conducted an active raid on the restaurants in Trichy

இதனிடையே இந்தச் சோதனை குறித்து கூறிய திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி ரமேஷ் பாபு, ''ஷவர்மா உள்ளிட்ட கோழிக்கறி உணவுகளை மீதமாகிறதே என்பதற்காக உணவகம் நடத்துவோர் குளிர்சாதனப் பெட்டிகளில் வைக்கக் கூடாது. அளவாக அன்றைய வியாபாரத்துக்கு தகுந்தாற் போல் தயாரிக்க வேண்டும். ''

''சமைக்கப்பட்ட ஷவர்மா உள்ளிட்ட கோழி இறைச்சிகள் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்பட்டிருப்பது சோதனையில் தெரியவந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்களும் தங்கள் பகுதியில் கெட்டுப்போன உணவு பொருள் விற்பனை பற்றி உணவு பாதுகாப்புத்துறைக்கு தகவல் அளிக்கலாம்'' எனக் கூறியுள்ளார்.

officials of the food safety department have conducted an active raid on the restaurants in Trichy

இதனிடையே சேலம் மாவட்டம் எடப்பாடியில் 50 கிலோ கெட்டுப்போன மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் சோதனைகள் தொடர்வதால் இன்னும் டன் கணக்கில் இறைச்சிகள் பறிமுதல் செய்யப்படலாம் எனத் தெரிகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+