அதிமுகவை யாரும் மிரட்ட முடியாது... ஒன்றரைக் கோடி தொண்டர்களின் வாயை மூட முடியாது - ஜெயக்குமார்

அதிமுகவை யாரும் மிரட்ட முடியாது, மிரட்டலுக்கும் அஞ்சமாட்டோம் ஒன்றரை கோடி தொண்டர்களின் வாயை மூட முடியாது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

திருச்சி: என் வாயை மூடமுடியாது ஒன்றரை கோடி தொண்டர்களின் வாயை மூட முடியாது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். இந்தியாவின் சிறந்த முதல்வர் ஸ்டாலின் என குறிப்பிடுகிறார்களே என்பதற்கு இந்த நூற்றாண்டின் சிறந்த ஜோக் என குறிப்பிட்ட ஜெயக்குமார், திமுகவை கெளரவர்கள் ஆட்சி என்றும் அதிமுக பாண்டவர்கள் ஆட்சி என்றும் கூறியுள்ளார்.

கடந்த மாதம் 19ம் தேதி நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சென்னையில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் திமுகவை சேர்ந்த ஒரு நபர் கள்ள ஓட்டு போடுவதாக கூறி அந்த நபரை அடித்து சட்டையை கழட்டி இழுத்துச் சென்றனர். இது தொடர்பான புகாரில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவரது வீட்டில் கைது செய்யப்பட்டு
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறை அடைக்கப்பட்டார்.

இதனை தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தார். அந்த வழக்கில் அவருக்கு ஜாமீன் கிடைத்தாலும் தொடர்ந்து அவர் மீது நில அபகரிப்பு வழக்கு உட்பட மூன்று வழக்குகள் போடப்பட்டதால் அவர் ஜாமீனில் வெளியே வர முடியவில்லை.

தொடர்ந்து மூன்று வழக்குகளிலும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு சில தினங்களுக்கு முன்பு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. மேலும், திருச்சியில் 2 வாரங்கள் தங்கியிருந்து
கன்டோன்மென்ட் காவல் நிலையத்தில் வாரத்தில் திங்கள், புதன், வெள்ளி என மூன்று நாள் கையெழுத்திட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

திருச்சி காவல்நிலையத்தில் கையெழுத்து

திருச்சி காவல்நிலையத்தில் கையெழுத்து

இதைத் தொடர்ந்து புழல் சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவந்த அவர் கடந்த திங்களன்று திருச்சி கண்டோன்மெண்ட் காவல் நிலையத்தில் காலை பத்து முப்பது மணி அளவில் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த புத்தகத்தில் கையெழுத்துப்போட்டுவிட்டு புறப்பட்டார். தொடர்ந்து இன்று காலை 2ம் முறையாக கண்டோன்மெண்ட் காவல் நிலையத்தில் கையெழுத்திட்டார். தொடர்ந்து நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை மூன்றாவது முறையாக கையெழுத்திட உள்ளார்.

 அதிமுகவினர் மீது பொய் வழக்கு

அதிமுகவினர் மீது பொய் வழக்கு

காவல்நிலையத்தில் கையெழுத்திட்ட பின்னர் செய்தியாளருக்கு பேட்டி அளித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
திமுக தொடர்ந்து அதிமுக அமைச்சர்கள் மீதும் கழக முன்னோடிகள் மீதும் வழக்குகள் தொடர்ந்து மிரட்டி பார்க்கிறார்கள். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றாமல் தொடர்ந்து அதிமுக அமைச்சர்கள் மீது வழக்குகளை போட்டு பணம் நகை ஏதும் சல்லி காசு கூட கைப்பற்றாமல் அதை கைப்பற்றியதாக குறிப்பிடுவது பொய் என குற்றம்சாட்டினார்.

காவல்நிலையத்தில் கையெழுத்து

காவல்நிலையத்தில் கையெழுத்து

திமுக ஆர். எஸ். பாரதி ஜாமினில் வெளி வந்த ஜெயக்குமார் தொடர்ந்து பேட்டிகளை கொடுத்து வருவதாக கூறியது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர், அதற்கு பதிலளித்த ஜெயக்குமார், நீதிமன்ற உத்தரவுபடி திருச்சியில் தங்கி இருந்து காவல் நிலையத்தில் கையெழுத்திடுகிறேன் என்றார். செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுக்கக் கூடாது என்று நீதிமன்றம் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை என்றும் ஜெயக்குமார் கூறினார்.

 வாயை மூட முடியாது

வாயை மூட முடியாது

என் வாயை மூடமுடியாது ஒன்றரை கோடி தொண்டர்களின் வாயை மூடமுடியாது இந்தியாவின் சிறந்த முதல்வர் ஸ்டாலின் என குறிப்பிடுகிறார்களே என்பதற்கு இந்த நூற்றாண்டின் சிறந்த ஜோக் என குறிப்பிட்டார். திமுகவை கெளரவர்கள் ஆட்சி என்றும் அதிமுக பாண்டவர்கள் ஆட்சி என்று கூறினார். வரவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலிலும்ம் சட்டமன்ற தேர்தலிலும் அதிமுக மீண்டும் வெற்றி பெற்று விரைவில் ஆட்சிக்கு வரும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+