யூனியன் வங்கியில் மெகா வேலைவாய்ப்பு.. 1,865 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்.. செம சான்ஸ்
சென்னை: யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவில் (Union Bank of India) மெகா வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 1,865 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. டிகிரி படித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். உள்ளூர் மொழி தெரிந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இது குறித்த விவரங்களை இங்கு காணலாம்.
நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்று யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா (Union Bank of India). கடந்த 1919 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த வங்கி நாடு முழுவதும் பல்வேறு கிளைகளுடன் இயங்கி வருகிறது. தற்போது இந்த வங்கியில் 1,865 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணியிடங்கள் விவரம்:
நாடு முழுக்க மொத்தம் 1865 பயிற்சிப் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. தமிழகத்தில் மட்டும் 95 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. மாநில வாரியாக, ஆந்திரப் பிரதேசம் - 303, உத்திரப் பிரதேசம் - 335, மகாராஷ்டிரா - 196, தெலுங்கானா - 164, கர்நாடகா - 131, மத்தியப் பிரதேசம் - 116, ஒடிசா - 58, குஜராத் - 58, மேற்கு வங்கம் - 56, டெல்லி - 48, கேரளா - 39, ஜார்க்கண்ட் - 34, ராஜஸ்தான் - 32, அஸ்ஸாம் - 29, சத்தீஸ்கர் - 25, பஞ்சாப் - 21, பீகார் - 60, ஹரியானா - 30, உத்தரகண்ட் - 10, சண்டிகர் - 6, கோவா - 5, சிக்கிம் மற்றும் ஜம்மு காஷ்மீரில் தலா 2 பணியிடங்கள் உள்ளன.
இது போக அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், டாமன் மற்றும் டையூ, தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி, இமாச்சலப் பிரதேசம், இலட்சத்தீவுகள், லடாக், மேகாலயா, நாகாலாந்து, புதுச்சேரி, திரிபுரா ஆகிய மாநிலங்களுக்கு தலா 1 காலியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித் தகுதி
கல்வித் தகுதியினை பொறுத்தவரை, அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பு முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். பட்டம் பெற்ற தேதி ஏப்ரல் 01, 2022-க்கு முந்தையதாக இருக்கக்கூடாது.
வயது வரம்பு
விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு ஏப்ரல் 01, 2026 நிலவரப்படி கணக்கிடப்படும். குறைந்தபட்சம் 20 ஆண்டுகள் மற்றும் அதிகபட்சம் 28 வயது நிரம்பியவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
பட்டியல் சாதியினர்/பழங்குடியினர் (ST/SC) பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (OBC-NCL) 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும். மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர்களுக்கு, பொதுப் பிரிவினருக்கு 10 ஆண்டுகள், OBC-NCL பிரிவினருக்கு 13 ஆண்டுகள், மற்றும் ST/SC பிரிவினருக்கு 15 ஆண்டுகள் வரை வயது வரம்பில் கூடுதல் தளர்வுகள் உண்டு.
சம்பளம் எவ்வளவு?
தேர்ந்தெடுக்கப்படும் பயிற்சிப் பணியாளர்களுக்கு, பணிபுரியும் இடத்தின் அடிப்படையில் மாத சம்பளம் வழங்கப்படுகிறது. அதாவது கிராமப்புறம் ரூ.15,000, நகர்ப்புறங்களுக்கு ரூ.18,000, பெருநகரங்களுக்கு ரூ.20,000 வழங்கப்படும்.
தேர்வு முறை எப்படி
தேர்வு முறை இரண்டு கட்டங்களாக நடைபெறும். முதலில் ஆன்லைன் தேர்வு நடத்தப்படும். அதைத் தொடர்ந்து, விண்ணப்பதாரரின் உள்ளூர் மொழித்திறனை சோதிக்கும் திறன் தேர்வு நடைபெறும்.
விண்ணப்ப கட்டணம்
விண்ணப்பக் கட்டணத்தை பொறுத்தவரை பொதுப்பிரிவினர் ரூ.944 செலுத்த வேண்டும். பொது/OBC பெண்களுக்கு ரூ.708. மற்ற பிரிவினர்களான மாற்றுத்திறனாளிகள் (PWBD) மற்றும் திருநங்கைகள் உள்ளிட்டவர்களுக்கு 236 ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் வாயிலாக மட்டுமே விண்ணப்ப கட்டணம் செலுத்தப்பட வேண்டும்.
தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள், வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.unionbankofindia.bank.in/ வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைன் விண்ணப்பப் பதிவு ஏப்ரல் 29, 2026 அன்று தொடங்கி, மே 19, 2026 அன்று நிறைவடையும்.
தேர்வு அறிவிப்பினை படிக்க: https://www.unionbankofindia.bank.in/pdf/notification-final-1865-april26.pdf
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல்












Click it and Unblock the Notifications