விரால் மீன் பாம்பு தலை போல இருக்க காரணம் என்ன? வேகமாக காயம் ஆற்றும் சக்தி கொண்ட மருத்துவ உண்மை
சென்னை: விரால் மீன் மட்டும் ஆற்று நீரில் ராஜா என்று பெயர் பெற்றது.. சுவைக்காக மட்டுமின்றி அதன் மருத்துவ குணங்களுக்காகவும் காலம் காலமாக நம் உணவில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. மற்ற மீன்களைக் காட்டிலும் விரால் மீனுக்கு இருக்கும் தனிச்சிறப்பு அதன் தசைப்பற்று மற்றும் தனித்துவமான ருசி. கிராமப்புறங்களில் "வகை மீன்" என்று தேடிப் பிடித்து வாங்குவதற்கு முக்கிய காரணமே இதன் அபாரமான சத்துக்கள்தான்.
விரால் மீனின் தலை பாம்பைப் போன்ற தோற்றத்தைக் கொண்டிருப்பதற்குப் பின்னால் ஒரு ஆச்சரியமான இயற்கை ரகசியம் ஒளிந்துள்ளது.

மற்ற மீன்களைப் போலன்றி, இதன் தலைப்பகுதியில் காற்றில் உள்ள ஆக்சிஜனை நேரடியாகச் சுவாசிப்பதற்கான பிரத்யேக உறுப்புகள் அமைந்துள்ளன.. ந்த அசாத்தியமான உயிராற்றல் காரணமாகவே, தண்ணீருக்கு வெளியேயும் இந்த மீன் நீண்ட நேரம் உயிர் வாழ்கிறது.
பாம்பு போல தலை ஏன்
இத்தகைய அபாரமான உயிர்ச்சக்தி கொண்ட திசுக்களில் 'அல்புமின்' மற்றும் 'அராச்சிடோனிக் அமிலம்' செறிந்து காணப்படுவதால், அறுவை சிகிச்சை செய்தவர்களுக்குக் காயங்களை விரைவாக ஆற்றவும், சேதமடைந்த செல்களைப் புதுப்பிக்கவும் இது ஒரு இயற்கை மருந்தாகச் செயல்படுகிறது.
விரால் மீன் ஒரு புரதக் களஞ்சியம். இதில் உள்ள உயர்தரப் புரதம் தசை வளர்ச்சிக்கும், உடல் வலிமைக்கும் பேருதவி புரிகிறது. குறிப்பாக, இதில் மிகக் குறைந்த அளவே கொழுப்பு இருப்பதால், உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்களுக்கும், இதய ஆரோக்கியத்தைப் பேண விரும்புபவர்களுக்கும் இது ஒரு வரப்பிரசாதம்.
விரால் மீன் நன்மைகள்
இதில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் இதய நாளங்களில் அடைப்பு ஏற்படாமல் தடுத்து, ரத்த ஓட்டத்தைச் சீராக்குகின்றன. இது தவிர, வைட்டமின் ஏ, பி மற்றும் இரும்புச்சத்து, கால்சியம் போன்ற தாதுக்கள் இதில் செறிந்து காணப்படுகின்றன.
இதன் தசைப்பகுதியிலுள்ள அல்புமின் என்ற புரதச்சத்து. பொதுவாக அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்களுக்கு அல்லது பெரிய காயங்கள் ஏற்பட்டவர்களுக்கு விரால் மீன் குழம்பை மருத்துவர்களே பரிந்துரைப்பார்கள். இதிலுள்ள அராச்சிடோனிக் அமிலம் (Arachidonic Acid) உடலில் உள்ள திசுக்களை மிக விரைவாகப் புதுப்பித்து, புண்களை ஆற்றும் வல்லமை கொண்டது.
மற்ற மீன்களை விட இதில் உள்ள புரதம் எளிதில் செரிமானம் ஆவதோடு, உடலில் நோய் எதிர்ப்பு சக்தியைப் பன்மடங்கு அதிகரிக்கிறது.
நரம்புகளுக்கு வலு, புத்துணர்ச்சி
இன்னொரு சுவாரசியமான விஷயம் என்ன தெரியுமா? இதன் சமையல் மற்றும் சேமிப்பு முறையாகும்.. அதாவது நன்னீர் மீன்களிலேயே விரால் மீன் குழம்புதான் அடுத்த நாள் வைத்துச் சாப்பிடும்போது சுவை கூடும் தன்மை கொண்டது.
மண்பாண்டத்தில் வைத்துச் சமைக்கும்போது இதன் சதைப்பகுதி குழம்பின் சாற்றை முழுமையாக உறிஞ்சி, தனித்துவமான மணத்தைத் தரும். குறிப்பாக, கிராமப்புறங்களில் உடல் மெலிந்த குழந்தைகளுக்கு "உடல் தேற" விரால் மீன் சூப் வைத்துக் கொடுக்கும் வழக்கம் இன்றும் உள்ளது. இது நரம்புகளுக்கு வலுவூட்டி, உடல் பலவீனத்தை நீக்கி புத்துணர்ச்சியைத் தரும் ஒரு இயற்கை டானிக்காகச் செயல்படுகிறது.
காயங்களை ஆற்றக்கூடியது
விரால் மீனின் மிக முக்கியமான மருத்துவப் பயன் என்னவென்றால், இது காயங்களை விரைவாக ஆற்றும் தன்மையைக் கொண்டது. அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் அல்லது விபத்தில் காயமடைந்தவர்கள் விரால் மீனை உணவில் சேர்த்துக் கொள்ளும்போது, திசுக்கள் மிக வேகமாக வளர்ச்சியடைந்து புண்கள் குணமாகும். இதற்குக் காரணம் இதில் உள்ள அராச்சிடோனிக் அமிலம் எனப்படும் ஒரு வகை அமிலமாகும். இது உடலில் சேதமடைந்த செல்களைப் புதுப்பிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
பலவீனமான உடலமைப்பைக் கொண்டவர்கள் வாரம் ஒருமுறை விரால் மீன் சாப்பிட்டு வந்தால், ரத்த சோகை நீங்கி உடல் தேறுவதை உணர முடியும்.
ஏகப்பட்ட கால்சியம் சத்துக்கள்
பொதுவாக முதியவர்களுக்கும், வளரும் குழந்தைகளுக்கும் மூட்டு மற்றும் எலும்பு தொடர்பான பிரச்சனைகள் வருவதுண்டு. விரால் மீனில் உள்ள கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் எலும்புகளை உறுதிப்படுத்துவதோடு, மூட்டு வலி வராமல் தடுக்கிறது. குழந்தைகளுக்குக் கொடுக்கும்போது அவர்களின் மூளை வளர்ச்சிக்கும், கண்பார்வைக்கும் இது நல்ல ஊக்கத்தை அளிக்கிறது.
அதேபோல மீன் என்றாலே சளி பிடிக்கும் என்ற பயம் சிலருக்கு இருக்கும், ஆனால் விரால் மீன் உடலுக்குச் சூடு தரும் தன்மை கொண்டதால், இது உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரித்து சீதோஷ்ண மாற்றங்களால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து நம்மைக் காக்கிறது.
விரால் மீன் ஆரோக்கியம்
சமையலில் விரால் மீன் குழம்புக்கென ஒரு தனி வாசனை உண்டு. மண்சட்டியில் வைத்து மறுநாள் சாப்பிடும்போது அதன் ருசி இன்னும் கூடும். வறுத்துச் சாப்பிடுவதை விட குழம்பாகவோ அல்லது ஆவியில் வேக வைத்தோ சாப்பிடும்போது அதில் உள்ள முழுமையான சத்துக்கள் சிதையாமல் நமக்குக் கிடைக்கும்.
ஆரோக்கியமான வாழ்விற்குத் தேவையான அத்தியாவசியச் சத்துக்கள் அனைத்தையும் இயற்கையான முறையில் பெற விரும்புபவர்கள், தாராளமாக விரால் மீனைத் தங்கள் உணவில் ஒரு அங்கமாக்கிக் கொள்ளலாம்....!!














Click it and Unblock the Notifications