எடப்பாடி போஸ்.. “ஐயோ.. நீயும் எம்ஜிஆரும் ஒன்னா? அவர் கால் தூசிக்கு..” தலையில் கை வைத்து சொன்ன ஓபிஎஸ்
திருச்சி: எம்ஜிஆர் என்றால் அவருக்கு அழகான தொப்பியும் கருப்புக் கண்ணாடியும் அடையாளமாக இருந்த நிலையில் அதை போட்டுக்கொண்டு எடப்பாடி பழனிசாமி போஸ் கொடுத்தது கேலிக்கூத்து என்று ஓ பன்னீர்செல்வம் விமர்சித்து உள்ளார்.
எம்ஜிஆர் பிறந்தநாள், ஜெயலலிதா பிறந்தநாள், அதிமுகவின் 51 ஆம் ஆண்டு விழாவுடன் முப்பெரும் விழாவின் மாநாட்டை ஓபிஎஸ் தரப்பு இன்று திருச்சியில் நடத்தியது. இதில் ஏராளமான ஆதரவாளர்கள் பெரும் திரளாக கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் பேசிய ஓ பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக சாடினார்.
அவர் பேசுகையில், "பன்னீர்செல்வத்தை தொண்டனாக பெற்றது நான் செய்த பெரும் பாக்கியம் என்று ஜெயலலிதா சொன்னார். ஜெயலலிதா கொடுத்த அந்த பட்டம்தான் எனக்கு பெரியது. அவர் என்னை முதலமைச்சராக்கினார். நிதியமைச்சர் ஆக்கினார். எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்தை கொடுத்தார். 13 ஆண்டு காலம் பொருளாளர் பதவியையும் கொடுத்து உள்ளார்.

நான் பொருளாளர் ஆகும்போது 2 கோடி ரூபாய் பற்றாக்குறையில் அதிமுக கட்சி நிதி இருந்தது. அதை 256 கோடி ரூபாயாக உயர்த்தினோம். எனக்கு இருக்கும் பயமே இன்று நயவஞ்சகத்தால் சட்டத்தை கையில் வைத்துக்கொண்டு ஆடாத ஆட்டமெல்லாம் ஆடிக்கொண்டு இருக்கிறார்கள். உங்களுக்கு மனசாட்சி இருந்தால் அதிமுக நிதியில் ஒரு நயா பைசாவை கூட செலவழிக்கக்கூடாது. அந்த நீதியை நீங்கள் எப்படி கையாள்கிறீர்கள் என்பது குறித்து உறுதியாக விசாரணை நடத்தப்பட்ட தண்டனை வழங்கப்படும்.
எனக்கு தந்த பதவியை நான் திருப்பிக் கொடுத்துவிட்டேன். ஐயா பழனிசாமி அவர்களே! உங்களுக்கு யார் பதவியை கொடுத்தது? சசிகலா உங்களுக்கு முதலமைச்சர் என்ற பதவியை கொடுத்தார். அவரை பார்த்து நாய் குலைக்கிறது என்று சொன்னால் எவ்வளவு பெரிய நம்பிக்கை துரோகி. வரலாறு உன்னை மன்னிக்குமா?
இப்படிப்பட்ட ஒரு ஆள் அதிமுகவின் பொதுச்செயலாளராக தானே முடிசூட்டிக்கொண்டார். ஐயோ கேலிக்கூத்து.. எம்ஜிஆர் என்றால் அவருக்கு ஒரு அடையாளம் இருக்கிறது. ஒரு அழகான தொப்பி, கருப்புக் கண்ணாடி. அந்த தொப்பிக்கும் கருப்புக் கண்ணாடிக்கும் அழகு சேர்த்தவரே எம்ஜிஆர்தான். அதை போட்டுக்கொண்டு போஸ் கொடுக்குறியே எவ்வளவு பெரிய அநியாயம். எவ்வளவு பெரிய அக்கிரமம்.
நீயும் எம்ஜிஆரும் ஒன்றா? அவருடைய கால் தூசிக்கு நீ ஈடாக மாட்டாய். அவர் ஒரு கருணை கடல். அன்பு தெய்வம். கொடை வள்ளல். இந்த இயக்கத்தை தனக்கு பின்னால் யார் வழிநடத்தி செல்ல வேண்டும் என்று தீர்க்க தரிசனமாக ஜெயலலிதாவை தந்த தலைவர். உனக்கும் அவருக்கும் என்ன இருக்கிறது? 2011 சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி ஜெயலலிதா என்னை அழைத்து தமிழ்நாட்டில் முக்கிய கூட்டங்கள் நடத்தப்படும் என்று சொன்னார்.

அதன் அடிப்படையில் முதலில் கோவையிலும் அடுத்து திருச்சியில் கூட்டம் நடத்தப்பட்டது. இந்த திருச்சிதான் மிகப்பெரிய அரசியல் மாற்றத்தை, அடுத்த முதலமைச்சர் ஜெயலலிதாதான் என்று தீர்மானித்த நகரம். இந்த நகரத்தில் பொன்னி நதிக்கரையில் நின்றுகொண்டு கேட்கிறேன். அதிமுகவின் தொண்டன் உச்ச பதவிக்கு வரவேண்டும் என்று எம்ஜிஆர் சொன்ன சட்ட விதியை மாற்றி, 10 மாவட்ட செயலாளர்கள் முன்மொழிய வேண்டுமாம்.
10 மாவட்ட செயலாளர்கள் வழிமொழிய வேண்டுமாம். 5 ஆண்டுகள் தலைமை கழக பதவியை வகிக்க வேண்டுமாம். என்ன திமிர் உனக்கு? கோடிக்கணக்கான பணத்தை குவித்து வைத்துகொண்டு அதை வைத்து நிர்வாகிகளை விலைக்கு வாங்கிக்கொண்டு சட்ட விதிகளை மாற்றி உள்ளார். இது எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு செய்த துரோகம். இப்படிப்பட்ட பச்சை துரோகம் செய்த நம்பிக்கை துரோகியை நமது இயக்கத்தில் இருக்க விடலாமா என்பதை தொண்டர்கள்தான் முடிவு செய்ய வேண்டும்." என்றார்.
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர்












Click it and Unblock the Notifications