‛ஸ்டன்’ ஆன ஸ்டாலின்.. விண்ணை தொட்ட ‛மோடி.. மோடி’ கோஷம்.. பிரதமர் காட்டிய சைகையால் ட்விஸ்ட்
திருச்சி: திருச்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி இன்று பங்கேற்று பேசினார். இந்த வேளையில் முதல்வர் ஸ்டாலின் பேசியபோது ‛‛மோடி.. மோடி..'' என பாஜகவினர் கோஷமிட்ட நிலையில் மேடையில் இருந்து பிரதமர் மோடி காட்டிய சைகையால் அடுத்த சில நொடிகளில் அங்குள்ள நிலைமை மாறிப்போன சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
பிரதமர் நரேந்திர மோடி இன்று ஒருநாள் பயணமாக தமிழ்நாட்டின் திருச்சிக்கு வந்தார். காலை 10.15 மணிக்கு திருச்சி விமான நிலையத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி வந்திறங்கினார். ஆளுநர் ஆர்என் ரவி, முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் அவரை வரவேற்றார்.

அதன்பிறகு பிரதமர் நரேந்திர மோடி திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 38-வது பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவ-மாணவிகளுக்கு பட்டம் வழங்கினார். இதையடுத்து ரூ1,100 கோடியிலான திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். மேலும் ரூ20,140 கோடி மதிப்பிலான 20 திட்டங்களையும் பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
திருச்சி புதிய விமான முனையம் திறப்பு நிகழ்ச்சி திருச்சி விமான நிலையத்தில் நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடியுடன், மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, மத்திய இணையமைச்சர் எல் முருகன், ஆளுநர் ஆர்என் ரவி, முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் நேரு, எவ வேலு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்பட ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.
இந்த விழாவில் மத்திய இணையமைச்சர் எல் முருகன் வரவேற்புரை நிகழ்த்தினார். அதன்பிறகு மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா திருச்சி புதிய விமான முனையம் பற்றி எடுத்துரைத்தார். இதையடுத்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின் பேச அழைக்கப்பட்டார். அவர் மேடையில் தான் அமர்ந்திருந்த இருக்கையில் இருந்து எழுந்து மைக் அருகே வந்து நின்றார்.
முதல்வர் ஸ்டாலின் பேச எழுந்ததுமே நிகழ்ச்சியில் பங்கேற்ற பாஜகவினர், ‛‛மோடி.. மோடி..'' என இடைவிடாது கோஷமிட்டனர். இந்த கோஷம் அரங்கத்தை அதிர வைத்தது. இதனால் முதல்வர் ஸ்டாலின் சில வினாடிகள் அப்படியே மைக் முன்பு பேசாமல் நின்றார். அதன்பிறகு ஸ்டாலின் பேச தொடங்கினார். அப்போதும் ’மோடி.. மோடி..’ என்ற கோஷம் தொடர்ந்து ஒலித்தது. இதனால் ஸ்டாலின் பேசுவது சரியாக கேட்காத நிலை ஏற்பட்டது.
இதனை கவனித்த பிரதமர் மோடி மேடையில் தான் அமர்ந்திருந்த இருக்கையில் இருந்தபடியே கோஷத்தை நிறுத்தும்படி தனது கையை அசைத்து சைகை செய்தார். இதையடுத்து படிப்படியாக ‛‛மோடி.. மோடி'' கோஷம் நின்றது. அதன்பிறகு ஸ்டாலின் பேச்சு தெளிவாக கேட்டது.
அதன்பிறகு தமிழகத்தின் பெருமை பற்றி முதல்வர் ஸ்டாலின் பேசும்போது நிகழ்ச்சியில் பங்கேற்ற திமுகவினர் ‛‛ஸ்டாலின்.. ஸ்டாலின்..'' என கோஷமிட்டனர். இதையடுத்து மீண்டும் பாஜகவினர் ‛மோடி.. மோடி'' என கோஷமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications