இறந்த ஆட்டை இறைச்சிக்கு வாங்கியதால் விபரீதம்.. இறந்ததை உண்ணக் கூடாதுனு அண்ணன் அட்வைஸ்.. தம்பி கொலை
திருச்சி: திருச்சி அருகே இறந்து போன ஆட்டை விலைக்கு வாங்கி வந்த தம்பியை தாக்கி கொலை செய்த இரு அண்ணன்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.
Recommended Video
திருச்சி மாவட்டம், முசிறி அருகே அமராவதி சாலை கிராமத்தில் வசிப்பவர் செல்லையா. இவருக்கு மூன்று மகன்கள். இளைய மகன் ரவிக்குமார் (32 ).
லாரி டிரைவராக நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி என்ற ஊரில் மனைவி நந்தினியுடன் வசித்து வந்தார். திருமணமாகாத நிலையில் இருந்த செல்லையாவின் இரண்டாவது மகன் சிவகுமார் தந்தையுடன் அமராவதி சாலை கிராமத்திலேயே வசித்து வந்துள்ளார்.

இளையவர்
மூத்த மகன் ராஜசேகரன் என்பவரும் அதே ஊரில் வசித்து வந்த நிலையில் தந்தை செல்லையாவிற்கு கடந்த சில தினங்களாக உடல் நிலை சரியில்லை என்பதால் அவரை பார்ப்பதற்காக நாமக்கல்லில் இருந்து தனது சொந்த ஊரான அமராவதி சாலைக்கு ரவிக்குமார் வந்துள்ளார்.

இறந்த ஆடு
இந்நிலையில் அதே கிராமத்தில் வசிக்கும் சந்திரா என்பவருக்கு சொந்தமான ஆடு இறந்துள்ளது. இறந்த ஆட்டை சமைத்து சாப்பிடுவதற்காக சிவகுமார் விலைக்கு வாங்கி வந்துள்ளார். இதனைப் பார்த்த ரவிக்குமார் இறந்த ஆட்டை சாப்பிட வேண்டாம் என கூறி அண்ணனை கண்டித்துள்ளார்.

கத்திக் குத்தி
இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு ஏற்பட்டது. மூத்த மகன் ராஜசேகரன் சம்பவ இடத்திற்கு வந்து ரவிக்குமாரை தாக்கியுள்ளார். அப்போது ஆத்திரமடைந்த சிவகுமார் வீட்டிலிருந்த கத்தியை எடுத்து வந்து தம்பி ரவிக்குமாரை குத்தியுள்ளார்.

பிரேத பரிசோதனை
இதில் படுகாயமடைந்த ரவிக்குமாரை அருகில் இருந்தவர்கள் கார் மூலம் நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே இறந்தார். இதுகுறித்து தகவலறிந்த முசிறி போலீஸ் டிஎஸ்பி பிரம்மானந்தம் மற்றும் தா.பேட்டை போலீசார் ரவிக்குமார் உடலை கைப்பற்றி நாமக்கல் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்வதற்காக அனுப்பி வைத்தனர்.

பரபரப்பு
மேலும் இது குறித்து வழக்கு பதிந்து ரவிக்குமாரை குத்திக் கொன்ற சிவகுமாரையும் தாக்குதலில் ஈடுபட்ட மற்றொரு ராஜசேகரனையும் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இறந்த ஆட்டை ஏன் வாங்கி வந்தாய் என கேட்டு தம்பியை அண்ணன் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
திருச்சி மேடையில் அதை பேசியிருக்கனும்.. முதல்வர் விஜய்யின் உரை ஏமாற்றம்! ஆதங்கப்பட்ட அன்புமணி -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு












Click it and Unblock the Notifications