70 வயது பெரியவரை பளார் என கன்னத்தில் அறைந்த இன்ஸ்பெக்டர்.. சுருண்டு விழுந்ததால் பெரும் பரபரப்பு

திருச்சி அமமுக பிரச்சாரத்தில் முதியவர் ஒருவரை இன்ஸ்பெக்டர் சரமாரியாக தாக்கினார்.

Subscribe to Oneindia Tamil

திருச்சி: திமுக பிரமுகர் என்றும் பார்க்கவில்லை.. 70 வயசு பெரியவர் என்றும் பார்க்கவில்லை.. பளார் பளார் என்று கன்னத்தில் இன்ஸ்பெக்டர் அறையவும்.. அந்த வயதானவர் அலறி சுருண்டு கீழே விழுந்தார்!

புதுக்கோட்டையில் அமமுக வேட்பாளர் சாருபாலா தொண்டைமான் போட்டியிடுகிறார். தீவிர பிரச்சாரத்தில் உள்ள அவர், நேற்று கறம்பக்குடியில் வாக்கு சேகரித்துக் கொண்டிருந்தார். அப்போது போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Police Inspector attacks an Old Man in Trichy

பிரச்சாரத்தை ஒரு பெரியவர் நின்று வேடிக்கை பார்த்து கொண்டிருந்தார். இவர் திமுக மாஜி நகர துணைச் செயலாளர் ஆவார். பெயர் சுப்பையா. வயது 70 ஆகிறது.

பக்கத்திலிருந்தவர்களிடம், நேத்துகூட இங்க பிரச்சாரத்துக்கு திருநாவுக்கரசு வந்து போனார், ஒரு போலீசுகூட அப்போ வரல. இன்னைக்கு இந்த அம்மா பிரச்சாரத்துக்கு இவ்ளோ போலீசா?என்று கேட்டுகொண்டிருந்தார். இது அங்கு நின்றிருந்த இன்ஸ்பெக்டர் காளியப்பன் காதில் விழுந்ததும், சுப்பையாவை சரமாரியாக அடித்து தாக்கினார்.

வலி தாங்க முடியாமல் சுப்பையா அங்கேயே விழுந்துவிட்டார். இதை பார்த்த பொதுமக்கள் போலீசாரை கண்டித்து மறியலில் ஈடுபட்டனர். விஷயம் பரவி திமுகவினரும் இதில் ஈடுபட்டதால் பரபரப்பானது. ஆனால் 3 மணி நேரம் மறியல் நடக்கவும் மாவட்ட எஸ்பியே நேரில் வந்துவிட்டார். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியது தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+