வீட்டு வாசலில் படுத்து உறங்கிய முதியவர்.. பணத்திற்காக கொடூரமாக அடித்து கொலை..பரபர சிசிடிவி காட்சிகள்

Subscribe to Oneindia Tamil

திருச்சி: திருச்சி மல்லிகைபுரம் பகுதியில் வீட்டின் அருகே படுத்திருந்த 65 வயதான முதியவரைக் கொடூரமாகத் தாக்கும் கொள்ளையர்கள் அவரிடம் இருந்து பணத்தை கொள்ளையடித்துச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. இச்சம்பவத்தில் படுகாயமடைந்த அந்த முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Recommended Video

    வீட்டு வாசலில் படுத்து உறங்கிய முதியவர்.. பணத்திற்காக கொடூரமாக அடித்து கொலை..பரபர சிசிடிவி காட்சிகள்

    சென்னை தேசிய நெடுஞ்சாலை நடுக்கொண்டையம்பேட்டை மல்லிகைபுரம் பகுதியில் வசிப்பவர் ரவீந்திரன். இவர் அப்பகுதியில் லாரி தொழில் செய்து வருகிறார். இவரது சகோதரர் மனோகரன்.

    65 வயதாகும் மனோகரன், நேற்று தனது சகோதரர் ரவிந்திரனின் வீட்டு வாசலில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது நள்ளிரவு நேரத்தில் அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த 2 கொள்ளையர்கள் மனோகரனை அடித்து பணத்தைப் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர். இதில் காயமடைந்த மனோகரன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்,

    சிசிடிவி காட்சிகள்

    சிசிடிவி காட்சிகள்

    இந்த கொள்ளை சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. ரவிந்திரனின் வீட்டிலிருந்த சிசிடிவி-இல் கொள்ளையர்கள் என்ன செய்தனர் என்பது தெளிவாகப் பதிவாகியுள்ளது. அங்கு வரும் கொள்ளையர்கள் முதலில் லாரியில் ஏறி, எதாவது பணம் அல்லது பொருள் இருக்கிறதா எனப் பார்க்கிறார்கள். அதன் பிறகு அங்கு மனோகரன் படுத்திருப்பதைப் பார்க்கும் கொள்ளையர்களில் ஒருவர், அவரிடம் வருகிறார்.

    முதியவர் மீது தாக்குதல்

    முதியவர் மீது தாக்குதல்

    அவரது பர்ஸ்சை அந்த திருடன் எடுக்கிறன். தனது பர்ஸ்சை யாரோ எடுப்பதை உணர்ந்த மனோகரன் விழித்துக் கொண்டு பணத்தைக் கொடுக்க மறுக்கிறார். இதனால் ஆத்திரமடையும் அந்தத் திருடன் முதியவர் என்று கூட பார்க்காமல் அவரை தாக்குகிறார். இத்தாக்குதலில் மனோகரன் காயமடைய, அவரிடமிருந்து பணத்தைத் திருடன் எடுத்துச் செல்கிறான். மேலும், அங்கு வேறு எதாவது பொருட்கள் கிடைக்குமா என அக்கம்பக்கத்தில் தேடுகின்றனர். அப்போது தட்டுத்தடுமாறி மனோகரன் எழுய முயல்கிறார்.

    முதியவர் உயிரிழப்பு

    முதியவர் உயிரிழப்பு

    அப்போது திடீரென நிலை தடுமாறி விழுந்ததில், அவரது தலை பைக்கில் மோதி காயமடைந்துள்ளது. இதைத்தாண்டியும் மனோகரன் எழுந்து திருடர்களைப் பிடிக்க முயல்கிறார். தலையில் ஏற்பட்ட காயத்தால் அப்படியே தடுமாறி லாரியின் மீது மோதி விழுந்ததில் தலையில் ஏற்பட்டிருந்த காயம் மோசமானது. காலையில் மனோகரன் இருந்த நிலையைக் கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினரை அவரை திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இருப்பினும், சிகிச்சை பலனின்றி இன்று காலை மனோகரன் உயிரிழந்தார்.

    போலீசார் வழக்குப்பதிவு

    போலீசார் வழக்குப்பதிவு

    இதுகுறித்து ஸ்ரீரங்கம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். முதற்கட்டமாகச் சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றிய போலீசார், அதைக் கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே இப்பகுதிகளில் நிறுத்தப்பட்டிருந்த லாரிகளில் இருந்த டயர்களை மர்ம நபர்கள் திருடிச் செல்லும் நிகழ்வு அதிகம் நடந்தது. இதையடுத்து அப்பகுதியில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+