”நல்லா பைபிள் படித்துவிட்டு பதில் சொல்லுங்க” திருச்சி நிகழ்ச்சியில் சீமானிடம் வாக்குவாதம் செய்த நபர்
திருச்சி: திருச்சியில் உலக தமிழ் கிறிஸ்தவர் இயக்கம் சார்பில் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்று பேசினார். அப்போது அவரிடம் கிறிஸ்தவர்கள் பல்வேறு கேள்விகள் எழுப்பினர். அதற்கு அவர் பதில் கூறினார். திடீரென ஒருவர் 'பைபிளை படித்துவிட்டு பேசுங்கள்' என்று கூறினார். இதனால் நிகழ்ச்சியில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. இதையடுத்து கூட்டத்தில் இருந்தவர்கள் அந்த நபரை சமாதானப்படுத்தி அமர வைத்தனர்.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், திருச்சியில் உள்ள ஒரு தனியார் விடுதியில், உலக தமிழ் கிறிஸ்தவர் இயக்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது பேசிய சீமான், சிறுபாண்மை மக்களை ஏமாற்றுகிறார்கள். திமுகவே பெரிய மதவாத கட்சி என்று பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.

திமுக பெரிய மதவாத கட்சி
சீமான் பேசியதாவது:- எந்த கட்சியும் தொடங்கும்போதே பெரிய கட்சி கிடையாது. இப்போது இருக்கின்ற திமுகவோ, அல்லது அதிமுகவோ தொடங்கும் போது பெரிய கட்சி எல்லாம் கிடையாது. நான் அரசியலுக்கு வரும் போது எந்த பின்புலமும் இல்லாமல் வந்தேன். பொருளாதார வலிமையும் கிடையாது. எளிய பின்னணியில் வந்து இப்போது ஒரு பெரும் படையை திரட்டியிருக்கிறேன்.
என் போன்ற இளைஞர்களை ஒன்று திரட்டி வாக்குக்கு காசு கொடுக்காமல் போராடி போராடி தோல்வியை பாதையாக மாற்றி 36 லட்சத்து 50 ஆயிரம் வாக்குகளை பெற்று 3-வது பெரிய கட்சியாக வந்துள்ளோம். மதவாத எதிர்ப்பு என்பதை பலரும் தவறாக புரிந்து இருக்கிறார்கள். திமுகவே பெரிய மதவாத கட்சி. ஆனால் அதை அறியாமல் பேசிக் கொண்டிருக்கின்றீர்கள். மதங்களை விடு மரங்களை நடு என நான் மாநாடு நடத்துகிறேன்.
பெரியார் நிதி கொடுத்தாரா?
முதல்வர் ஸ்டாலின் உங்களை எந்த காரணத்தின் அடிப்படையில் சிறுபான்மை மக்கள் என சொல்லிக்கொண்டிருக்கிறார்? இதை நீங்கள் எப்போதாவது கேட்டதுண்டா? இந்து என்ற பெரும்பான்மை எண்ணத்தில் தானே உங்களை சிறுபான்மை என்று சொல்கிறார்கள். திராவிடம், சமூக நீதி பேசுகிறார்கள். அப்போது அவர்கள் நாங்கள் சாதி மத கோட்பாடுகளுக்கு அப்பாற்பட்டவர்கள், மானுடம் போற்றுபவர்கள் என்று தானே கூற வேண்டும்.
என்னை எனது தாய் தந்தை தான் படிக்க வைத்தனர். படிக்காத என் தாத்தான் காமராஜர் தான் படிக்கை வைத்தார். பெரியார் எங்காவது ஒரு கல்வி நிறுவனத்தை கட்டியிருக்கிறாரா? காட்டுங்கள் பார்க்கலாம். பள்ளிக்கூடங்களை திறப்பதற்கு என் தாத்தன் காமராஜர் கையேந்தி நின்றாரே, அப்போதாவது ஒரு சிறு நன்கொடையாவது பெரியார் கொடுத்து இருப்பாரா? அநீதிக்கு எதிரான தீயை பற்ற வைக்கவே இந்த உலகத்தில் வந்தவர் இறைமகன் இயேசு.
பைபிள் படித்துவிட்டு பதில் சொல்லுங்க
அவர் பற்ற வைத்த தீயை அணைத்தது திமுக. அந்தத் தீயை அணைய விடாமல் தொடர்ந்து தூக்கிப்பிடித்துக் கொண்டு ஓடுகிறவர்கள் தான் நாங்கள். என்று சீமான் பேசினார். சீமான் பேசிக்கொண்டிருக்கும்போதே கூட்டத்தில் இருந்த ஒருவர் பைபிளை படித்து விட்டு பேசுங்கள் என்று கூறினார். இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. சீமானும் அதற்கு பதில் அளித்து பேசினார்.
பவுலடியார் கிறிஸ்து இயேசுவுக்கு முன்பாக பிறந்ததாக ஒரு வீடியோவில் நீங்கள் பேசினீர்கள். இது வாட்ஸ் அப்பில் பரவலாக பரவியது. ஏனென்றால், கிறிஸ்துவுக்கு அப்புறம் தான் பவுலடியார் பிறந்தார் என்று.. இதனால் உங்களை எதிராக பேசுகிறார்கள். எனவே, தயவு செய்து இன்னும் கொஞ்சம் நல்லா பைபிள் படித்துவிட்டு பதில் சொல்லுங்க.. அப்போது தான் கிறிஸ்வர்கள் மத்தியில் ஒரு தெளிவு இருக்கும் என்று பேசினார்.
ஏன் கோபமாக பேசுகிறீர்கள்
அப்போது சீமான் இதற்கு பதில் அளித்து பேசினார். அன்பு தான் பிரதானம் என்றால், கோவில் வாசலில் வியாபாரம் பண்ணும்போது இயேசு ஏன் சாட்டையால் அடித்தார் என்று சீமான் கேள்வி எழுப்பினார். அப்போது அங்கிருந்த ஒருவர் பதிலுக்கு ஆவேசமாக பேசினார். அவர் ஏன் கோபமாக பேசுகிறீர்கள் என்று கேட்கிறார்.. இதற்கு பதில் அளித்த சீமான் நீங்க தான் கோபமாக பேசுகிறீர்கள் என்று பேசினார். இதனால் அந்த நிகழ்ச்சியில் சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டு சலசலப்பு உண்டானது ஏற்பட்டது. எனினும் அங்கிருந்தவர்கள் அவரை சமாதானப்படுத்தி அமர வைத்தனர். பின்னர் வழக்கம்போல் மற்றவர்களின் கேள்விகளுக்கு சீமான் பதில் அளித்து பேசினார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications