பாஜக முழு பைத்தியம்.. அவங்களை கூட நம்பலாம்.. திமுக அரை மெண்டல் - சீமான் கடும் தாக்கு!
திருச்சி: பாஜக, ஆர்.எஸ்.எஸ் முழு பைத்தியம், முழு பைத்தியத்தை நம்பலாம், திமுக அரை மெண்டல் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார்.
திருச்சி மாவட்டம் புத்தூரில் நாம் தமிழர் கட்சி சார்பில் "வென்றாக வேண்டும்" தமிழ் என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திருச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர். அப்போது உரையாற்றிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், "அதிமுக, திமுக, பாஜக, காங்கிரஸ் என நான்கு கட்சிகளும் தனக்கு சம அளவு எதிரிதான்" என்று பேசினார்.

மேலும் பேசிய சீமான், "மக்களுக்காக போராடும் நாம் தமிழர் கட்சி எப்போதும் தனித்துதான் நிற்கும். மக்களை முழுமையாக நேசிப்பவன் நான், மக்களை கூட்டணியாக வைத்திருக்கிறேன். அதனால் தனித்துத்தான் நிற்பேன். நீட் தேர்வுக்கு விதை போட்டு தண்ணீர் ஊற்றி வளர்த்தது காங்கிரஸ் கட்சிதான். காங்கிரஸ் கட்சி விதைத்ததை மோடி வளர்த்து வருகிறார்.
மேகதாது விவகாரத்தில் காங்கிரஸ், பாஜக இரண்டு கட்சிகளும் அரசியல் செய்வார்களே ஒழிய தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் தர மாட்டார்கள். காவிரி பங்கிட்டுக் கொடுத்தால்தான் தேர்தலில் பங்கீடு கிடைக்கும் என காங்கிரஸ் கட்சிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அழுத்தம் கொடுத்திருக்க வேண்டும்.
திடீரென மருத்துவர்கள், மீனவர்கள், மாணவர்கள் மீது பாசம் வருகிறது. ஏனென்றால் திடீரென்று தேர்தல் வருகிறது. கட்டாயம் இந்தி படித்தால் தேசப்பற்று, கட்டாயம் தமிழ் படித்தால் தேச துரோகம். பாஜக, அதிமுக, திமுக, காங்கிரஸ் நான்கு பேரும் எனக்கு சம அளவு எதிரி தான்.
பாஜக, ஆர்.எஸ்.எஸ் முழு பைத்தியம், முழு பைத்தியத்தை நம்பலாம், அவர்கள் பைத்தியம் என்று எல்லோருக்கும் தெரியும். அரை மெண்டல் தான் ஆபத்தானவன். திடீரென கல்லை விட்டு எறிவான், கத்தியை எடுத்துக் குத்திவிடுவான். திமுக அரை மெண்டல்." என கடுமையாக விமர்சித்துப் பேசினார்.












Click it and Unblock the Notifications