அடிப்படை 'டேஷ்’ இல்லாமல் பேசும் சீமான்..எந்த பிரயோஜனமும் இல்லை! வருண்குமார் ஐபிஎஸ்-ன் வக்கீல் அதிரடி
திருச்சி: நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வருண்குமார் ஐபிஎஸ் இடையே கருத்து மோதல் வலுத்து வரும் நிலையில் இது தொடர்பாக தொடரப்பட்டுள்ள வழக்கில் இரண்டாவது முறையாக வருண் குமார் ஐபிஎஸ் ஆஜராகி நீதிபதி முன் விளக்கம் அளித்தார். இந்த நிலையில் சீமான் அடிப்படை ’டேஷ்’ இல்லாமல் பேசுவதாக டிஐஜி அருண்குமார் ஐபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் விமர்சித்துள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு நாம் தமிழர் கட்சியின் முக்கிய பிரமுகரான சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட் போது அவரது செல்போனில் பதிவு செய்யப்பட்டிருந்த சில ஆடியோக்கள் ’லீக்’ ஆனது. துரைமுருகனுடன் பேசிய சீமான், மூத்த முக்கிய நிர்வாகிகள் குறித்து அவதூறாக பேசியதாக சில ஆடியோக்கள் வெளியானது.

அதனை சீமானும் மறுக்கவில்லை. அதே நேரத்தில் திருச்சி எஸ்பி வருண்குமார் ஐபிஎஸ், சாட்டை துரைமுருகனின் செல்போன்களில் இருந்த ஆடியோக்களை எடுத்து கசிய விட்டதாக சீமான் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.
வருண்குமார் ஐபிஎஸ்:
திருச்சி எஸ்பியாக இருந்த வருண்குமார், நாம் தமிழர் கட்சி பிரமுகரான சாட்டை துரைமுருகனை கைது செய்து சிறையில் அடைத்து திட்டமிட்டு பழிவாங்குவதாகவும், சீமான் புகார் கூறியிருந்தார். மேலும் குறிப்பிட்ட சில சாதியினரை சாதி வன்மத்துடன் எஸ்பி வருண்குமார் அணுகி வருவதாக சீமான் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து திருச்சி மாவட்ட எஸ்பி வருண்குமார், புதுக்கோட்டை எஸ்பியும் வருண்குமாரின் மனைவியுமான வந்திதா பாண்டே ஆகியோரை சில எக்ஸ் கணக்குகளில் இருந்து ஆபாசமாகவும் தரக்குறைவாகவும் விமர்சித்து சமூக வலைதளங்களில் பதிவுகள் வெளியிடப்பட்டன.
நாம் தமிழர் சீமான்:
தொடர்ந்து வருண்குமார் ஐபிஎஸ் தரப்பு சீமானுக்கு நோட்டீஸ் அனுப்பிய நிலையில் அது தொடர்பாக 15 விளக்கத்தை சீமான் அளித்திருந்தார். ஆனால் தங்கள் கேள்விகள் எதற்கும் பதில் அளிக்கவில்லை எனக் கூறி வருண்குமார் திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் சீமான் மீது வழக்கு தொடர்ந்தார். மேலும், புகார் தொடர்பாக கடந்த 30ஆம் தேதி திருச்சி நீதிமன்றத்தில் வருண்குமார் நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.
பதவி உயர்வு:
இதற்கிடையே வருண்குமார் ஐபிஎஸ் மற்றும் அவரது மனைவி வந்திதா பாண்டே ஆகியோரை டிஐஜியாக பதவி உயர்வு செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் இரண்டாவது முறையாக வருண்குமார் ஆஜராகி தனது வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளார்.
வழக்கறிஞர் பேட்டி:
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த வருண்குமார் ஐபிஎஸ்-ன் வழக்கறிஞரான முரளி கிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,” நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும்போது சீமான் மீண்டும் மீண்டும் டிஐஜி வருண்குமார் குறித்து கீழ்த்தரமான முறையில் பேசி வருகிறார். ஐபிஎஸ் என்பது நாட்டின் மிக உயர்ந்த பதவிகளில் ஒன்று. அதை சாதாரண பதவி போல சீமான் விமர்சிக்கிறார். ஐபிஎஸ் படிப்பை பற்றி விமர்சிக்க சீமானுக்கு என்ன கல்வி தகுதி இருக்கிறது. மனநலம் பாதிக்கப்பட்ட நபர் போல சீமான் பேச்சுக்கள் உள்ளது. அடிப்படை ’டேஷ்’ அறிவு இல்லாமல் பேசும் சீமானுக்கு எவ்வளவு பதில் சொன்னாலும் பிரயோஜனமில்லை” என்றார்.
வார்த்தைப் போர்:
கடந்த முறை வழக்கு விசாரணைக்கு ஆஜரான போது தன்னிடம் தொழில் அதிபர் ஒருவர் மூலம் மன்னிப்பு கேட்பதாக சீமான் கேட்டதாக வருண்குமார் ஐபிஎஸ் கூறியிருந்தார். அதற்கு வருண்குமார் அரசியல் கட்சித் தலைவர் மாதிரி பேட்டி கொடுக்கிறார், மாவட்ட செயலாளர் பதவி வாங்கி கட்சியில் சேர்ந்து விட வேண்டியது தானே” என சீமான் விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.
-
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
மணப்பாறை சிப்காட்: 650 பேருக்கு வேலை ரெடி! வேகமெடுக்கும் பெப்சி ரூ.880 கோடி மெகா தொழிற்சாலை திட்டம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications