அசிங்கம் அசிங்கம்.. மானமே போச்சு.. அதுவும் அதிகாரிகளே "கண்ணால" பார்த்துட்டாங்க.. சிக்கிய பெண் அதிகாரி
லஞ்சம் வாங்கிய பெண் இன்ஸ்பெக்டர் கையும் களவுமாக சிக்கினார்
திருச்சி: போலீசார் கையும் களவுமாக அந்த பெண் இன்ஸ்பெக்டரை சுற்றி வளைத்து பிடித்துவிட்டார்கள்.. இதை கேள்விப்பட்டு திருச்சியே அதிர்ச்சிக்குள்ளாகி வருகிறது.
சமீபகாலமாகவே, பெண் அதிகாரிகள் லஞ்சம் வாங்கியதாக கைதாகி வருகிறார்கள்.. ஆனால், பெண் அதிகாரிகள் சிலரும் லஞ்சம் வாங்குவதும், அந்த லஞ்ச பணம் தராமல் போவதற்காக சம்பந்தப்பட்டவர்களை மிரட்டுவதும் தொடர்கதையாகி வருகிறது.
திருச்சியில் 2 மாதத்துக்கு முன்ப ஒரு சம்பவம் நடந்தது.. இங்கு புகழ்பெற்ற வைணவ திருத்தலங்கள் ஒன்றுதான் குணசீலம் பிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோயில்.

ஸ்பெஷல் மருந்து
இங்கு என்ன ஸ்பெஷல் என்றால், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு கோயிலில் இருந்து எடுத்துவரப்பட்ட தீர்த்தம் காலை, மாலை 2 வேளையிலும் மருந்தாக இங்கு தரப்படும்.. சுவாமிக்கு அபிஷேகம் செய்த தீர்த்தத்தை, பாதிக்கப்பட்டவர்களின் முகத்தில் தெளித்து வைத்தியம் வழங்கப்பட்டு வருகிறது.. இது பக்தர்களின் பெருத்த நம்பிக்கையாகவும் உள்ளது.. அதனால், ஏராளமானோர், மிகுந்த நம்பிக்கையுடன் இந்த கோயிலுக்கு வந்து செல்வது வழக்கம். அந்த அளவுக்கு பொதுநலனுடன் செயல்பட்டு வரும் இந்த கோயிலில் திருப்பணிகளை நிறைவேற்றுவதற்காகவே ஒரு பெண் அதிகாரியை நியமித்துள்ளனர்..

தர்மகாரியம்
ஆனால், இந்த அதிகாரிதான், லஞ்சத்தை வாங்கியிருக்கிறார்.. அவர் பெயர் மூர்த்தீஸ்வரி.. கோயில் திருப்பணி விஷயத்தில் லஞ்சம் கேட்டுள்ளார்.. அதுவும் 10 லட்ச ரூபாய் கேட்டுள்ளார்.. அந்த லஞ்ச பணத்தை, இரவு நேரம் திருச்சி பஸ் ஸ்டாண்ட்டில் வந்து தர சொல்லி உள்ளார்.. ஒரு தர்ம காரியத்துக்காக கோயிலில் கமிட்டியில் இவரை நியமித்தால், இப்படியா செய்வது??? கடைசியில் இவர் கையும் களவுமாக சிக்கி கைதானார். இதோ இதே திருச்சியில் இன்னொரு பெண் அதிகாரி, லஞ்சம் வாங்கி இப்போது கைதாகி உள்ளார்..

மாலதி
லால்குடி அருகேயுள்ள வாளாடியை சேர்ந்தவர் யுவராஜா... இவரது குடும்பத்தாருக்கும், அவரது வீட்டுக்கு அருகில் வசித்து வரும் ஜெகதீசன் என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வந்துள்ளது.. இது சண்டையாகவும் வெடித்து வந்திருக்கிறது.. அதனால் போலீஸ்வரை விஷயம் சென்றுள்ளது. லால்குடி மகளிர் போலீஸ் நிலையத்தில் யுவராஜ், ஜெகதீசன் மீது புகார் மனு அளித்திருந்தார். அதன் பேரில் கடந்த 2.11.2022 அன்று போக்சோ சட்டத்தின் கீழ் லால்குடி மகளிர் இன்ஸ்பெக்டர் மாலதி என்பவர் ஜெகதீசன் மீது வழக்கு பதிவு செய்திருந்தார்.

ஸ்ட்ரைட்டா ஸ்டேஷன்
இந்த வழக்கு விசாரணையில் இருந்து வரும் நிலையில், அதில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்றால் ரூ.5 ஆயிரம் லஞ்சமாக தரவேண்டும் என்று இன்ஸ்பெக்டர் மாலதி யுவராஜாவிடம் கேட்டுள்ளார். மேலும் அந்த லஞ்ச பணத்தை 13.12.2022 காலை, ஸ்டேஷனுக்கு வந்து தன்னிடம் தரவேண்டுமாறும் சொல்லி உள்ளார்.. ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத யுவராஜ், ஸ்ட்ரைட்டாக, திருச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையினரிடம் புகார் அளித்தார்.

மாறுவேஷம்
டிஎஸ்பி மணிகண்டன் தலைமையிலான போலீசாரின் ஆலோசனைப்படி ரசாயன பொடி தடவிய ரூபாய் நோட்டுகள் அளிக்கப்பட்டது... இன்று காலை இன்ஸ்பெக்டர் மாலதியிடம் ஸ்டேஷனில் வைத்து யுவராஜ் ரூ.5 ஆயிரத்தை கொடுத்தார். அப்போது அங்கு மாறுவேடத்தில் இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்ஸ்பெக்டர் மாலதியை ரூ.5 ஆயிரம் லஞ்ச பணத்துடன் கையும், களவுமாக பிடித்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது..

அசிங்கம் அசிங்கம்
அன்றைய தினங்களில், சில ஆண்கள்தான் லஞ்சம் வாங்கி சிக்குவார்கள்.. ஆனால், இப்போதெல்லாம் சில பெண் அதிகாரிகளே லஞ்சம் கேட்டு, மிரட்டலும் விடுத்து அதிர வைத்துவிடுகிறார்கள், அத்துடன் அசிங்கப்பட்டும் போகிறார்கள் !! ஆனால், லஞ்சம் வாங்கியதாக அரசு அலுவலர்கள், அதிகாரிகளை மட்டும் கைது செய்யும் போலீசார், லஞ்சம் கொடுத்து எப்படியாவது காரியத்தை சாதித்து கொள்ள வேண்டும் என்று, "வலிய" சென்று லஞ்சத்தை தருபவர்களை ஏன் எதுவுமே ஒன்றுமே செய்வதில்லை???












Click it and Unblock the Notifications