‘வேங்கையின் மைந்தன்’ அல்ல இனி 'உழவர் மகன்'! ஸ்டாலின் கொடுத்த பூஸ்ட் அப்! பூரித்துப் போன அமைச்சர்!
திருச்சி: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தை 'வேங்கையின் மைந்தன்' என்று தாம் அரசியல் மேடைகளில் சொல்வதுண்டு என்றும் ஆனால் அவர் உழவர் மகனாக மாறிவிட்டார் எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் பூஸ்ட் அப் கொடுத்தார்.
இதனால் பூரித்துப் போன அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஒரு பக்கம் மேடையில் சிரித்துக் கொண்டு அமர்ந்திருந்தாலும் மற்றொரு பக்கம் தனது சொந்த மாவட்டமான கடலூரில் என்.எல்.சி. நிலம் கையகப்படுத்துதல் பிரச்சனையை எப்படி சமாளிப்பது என்ற சிந்தனையிலேயே அமர்ந்துகொண்டிருந்தார்.

இதனிடையே இது தொடர்பாக வேளாண் சங்கமம் 2023 நிகழ்வில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது;
''மிக மிக பசுமையான நிகழ்ச்சியில் கலந்து கொள்ளக்கூடிய ஒரு வாய்ப்பு எனக்கு ஏற்படுத்தப்பட்டு இருப்பதை எண்ணி நான் மகிழ்ச்சி அடைகிறேன். காரணம் இப்போது மனமும் பசுமையாகி விடுகிறது.
பழங்கள் - காய்கனிகள் - ஆகியவற்றை மொத்தமாக ஒரே இடத்தில் பார்ப்பது என்பது கண்கொள்ளாக் காட்சியாக அமைந்தது. அந்த உணர்வை எனக்கு ஏற்படுத்தித் தந்திருக்கக்கூடிய, அந்த பெரும் வாய்ப்பை எனக்கு உருவாக்கி தந்திருக்கக்கூடிய வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்துக்கு என்னுடைய நன்றியை காணிக்கையாக விரும்புகிறேன்.
நம்முடைய எம்.ஆர்.கே. பன்னீர் செல்வத்தை பொறுத்தவரைக்கும், அவரை 'வேங்கையின் மைந்தன்' என்று நாங்கள் அரசியல் மேடைகளில் சொல்வதுண்டு. ஆனால் வேளாண் துறை அமைச்சராக அவர் பொறுப்பேற்றதற்கு பிறகு அவர் ஆற்றி வரக்கூடிய பணிகளைப் பார்க்கும் போது, அவர் உழவர் மகனாகவே இப்போது மாறியிருக்கிறார்.
வேளாண் துறையையே தலைசிறந்த துறைகளில் ஒன்றாக அவர் மாற்றியிருக்கிறார். கழக ஆட்சி அமைந்ததற்குப் பிறகு அனைத்துத் துறைகளும் ஒருசேர வளர வேண்டும் என்று நாங்கள் உழைத்து வருவதை நீங்கள் எல்லாம் நன்கு அறிவீர்கள். அதில் மிகச் சிறப்பான வளர்ச்சியை வேளாண் துறையும் பெற்றுள்ளது. மற்ற துறைகளைப் போல வேளாண் துறையை நினைத்த உடனே வளர்த்துவிட முடியாது.
மற்ற துறைகளை வளர்க்க நிதி வளம் இருந்தால் போதும். ஆனால், வேளாண் துறையை வளர்க்க, நிதித்துறை மட்டுமல்ல, நீர்வளமும் வேண்டும். தேவையான இடுபொருட்கள் காலத்தில் கிடைக்க வேண்டும். கழக ஆட்சி அமைந்ததும் நீர் வளமும் கைகொடுத்தது. பருவ மழையும்முறையாகப் பெய்து உழவர்களுக்கு உதவியாக இருந்தது.''
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications