சர்ப்ரைஸ் தந்த ஸ்டாலின்... காவலர் பதவியை துறந்த செல்வராணி வீட்டிற்கு நேரில் விசிட்
இடமாற்றம் செய்யப்பட்ட காவலர் செல்வராணி, தனது பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில், அவரது குடும்பத்தினரை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று சந்தித்தார்.
Recommended Video

திருச்சி: திமுக முன்னாள் தலைவர் கருணாநிதிக்கு இரங்கற்பா எழுதியதால் இடமாற்றம் செய்யப்பட்ட காவலர் செல்வராணி, தனது பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில், அவரது குடும்பத்தினரை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று சந்தித்தார்.
திருச்சி மாவட்ட நுண்ணறிவு காவல் பிரிவில் பணியாற்றி வந்த பெண் காவலர் செல்வராணி ராமச்சந்திரன், அடிப்படையில் இலக்கிய ஆர்வம் கொண்டவர். பல்வேறு பட்டிமன்றங்களிலும் பங்கேற்று வருகிறார்.

அந்த வகையில் திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் இலக்கியங்கள் மீது பற்றுகொண்ட அவர், கருணாநிதியின் மறைவுக்கு இரங்கற்பா எழுதி வீடியோவாக பதிவு செய்து அண்மையில் வெளியிட்டார். அது சமூகவலைதளங்களில் வைரலானது.
இதனையறிந்த திருச்சி மாவட்ட காவல்துறை செல்வராணியை நுண்ணறிவு பிரிவில் இருந்து மத்திய மண்டல காவல்துறைக்கு மாற்றியது.
இதற்கு பதிலளித்த செல்வராணி, ஜெயலலிதா காலமான போதும் கவிதை வாசித்தேனே அப்போது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. கருணாநிதிக்கு இரங்கற்பா இயற்றிய ஒரே காரணத்திற்காக பணியிட மாற்றம் செய்யப்பட்டதை ஏற்றுக்கொள்ள முடியாது என கூறி, அவரது பணியை ராஜினாமா செய்தார்.
இந்தநிலையில், திருச்சி ஆர்ப்பாட்டத்தை முடித்துக் கொண்டு, திருவாரூர் மாவட்டத்தில் புயல் பாதிப்புகளை ஆய்வுசெய்த திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், காவலர் செல்வராணி குறித்த தகவல் அறிந்து இரவு 10 மணிக்கு அவரது வீட்டிற்கே நேரில் சென்று சந்தித்து அவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தினார்
-
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
திருச்சி மேடையில் அதை பேசியிருக்கனும்.. முதல்வர் விஜய்யின் உரை ஏமாற்றம்! ஆதங்கப்பட்ட அன்புமணி -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications