திருச்சி தனியார் மதுக்கடைகளில் டாஸ்மாக் 10 ரூபாய் ஸ்டிக்கர்? துணை சபாநாயகர் ஆய்வில் ட்விஸ்ட்
திருச்சி: திருச்சி மாவட்டம் துறையூரில் தனியார் மதுபான விற்பனை மனமகிழ் மன்றத்தை சட்டமன்ற துணை சபாநாயகர் ரவிசங்கர் திடீர் ஆய்வு நடத்தினார். அந்த ஆய்வில் அரசு மதுபான ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட அது பாட்டில்கள் விற்பனை, மற்றும் விதிமுறைகள் மீறி செயல்படுவதாக குற்றச்சாட்டினார். விதிகளை மீறி மதுபானம் அதிக விலைக்கு விற்பனை செய்வதாகவும், சில பாட்டில்களில் பத்து ரூபாய் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட பாட்டில்களையும் விற்பனை செய்ததாகவும், பாட்டில்களை திரும்ப பெறுவதில்லை என்றும் குற்றம்சாட்டினார்.
திருச்சி மாவட்டம், திருச்சி மாவட்டத்தில் அனைத்து அரசு மதுபான கடைகளின் ஊழியர்கள் இன்று கடை திறக்காமல் போராட்டம் நடந்தது. இதனால் துறையூர் பகுதியில் இயங்கி வரும் தனியார் மதுபான மனமகிழ் மன்றம் கடையில் மது பாட்டில்கள் அதிக விலைக்கு விற்பதாகவும், தமிழ்நாடு அரசு 10 ரூபாய் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட மதுபான பாட்டில்கள் விற்பதாகவும், விதிமுறைகளை மீறி இன்று விற்பனை நடைபெறுவதாக எழுந்த குற்றச்சாட்டு எழுந்தது. இதையத்து சட்டமன்ற துணை சபாநாயகர் ரவிசங்கர் மதுபானகடை மனமகிழ் மன்றத்தை திடீர் ஆய்வு நடத்தினார்.

அந்த ஆய்வில் விதிகளை மீறி மதுபானம் அதிக விலைக்கு விற்பனை செய்வதாகவும், சில பாட்டில்களில் பத்து ரூபாய் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட பாட்டில்களையும் விற்பனை செய்ததாகவும், பாட்டில்களை திரும்ப பெறுவதில்லை என்றும், முறையாக உறுப்பினர்களை சேர்க்காமல் மது விற்பனை செய்வதாகவும், அரசு மதுபான கடைகளில் வாங்கப்பட்ட மதுக்களுக்கு உரிய ஆவணங்கள் இல்லை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை துணை சபாநாயகர் ரவிசங்கர் தெரிவித்தார், தொடர்ந்து கடை ஆய்வின் நடவடிக்கை குறித்து கேட்டதற்கு அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சட்டமன்ற துணை சபாநாயகர் ரவிசங்கர் கூறினார்.
வேலைநிறுத்த போராட்டம்
தமிழக அரசின் உத்தரவுப்படி 500க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இந்த நிலையில் தமிழ்நாட்டில் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் காலி மதுபாட்டில்களை திரும்பப்பெறும் திட்டம் அமல்படுத்தப்பட்டிருககிறது. இதன்படி எந்த கடையில் மதுவை வாங்குகிறார்களோ அதே கடையில் காலி மதுபாட்டில்களை திருப்பி கொடுத்தால் கூடுதலாக கொடுத்த ரூ.10-யை கடை ஊழியர்கள் திருப்பி கொடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. இதன் காரணமாக கூடுதல் வேலைப்பளு ஏற்படுவதாகவும், எனவே இந்த திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் ஊழியர்கள் கோரிக்கை வைத்து வந்தனர்
இவர்களுடைய கோரிக்கை நிராகரிக்கப்பட்டதால், தமிழகம் முழுவதும் கடந்த 25-ந்தேதி முதல் டாஸ்மாக் ஊழியர்கள் ஆங்ககே கடையை திறக்காமல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் நேற்று 3-வது நாளாக நீடித்தது. அவர்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் உடன்பாடு ஏற்படவில்லை. அதாவது, கோர்ட்டு உத்தரவின்படி கண்டிப்பாக காலி மதுபாட்டில்களை வாங்க வேண்டும் என்று டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் டாஸ்மாக் ஊழியர்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது மாநிலம் முழுவதும் நடந்தது
இதுகுறித்து ஈரோடு டாஸ்மாக் ஊழியர்கள் கூறும்போது, 'அரசு உத்தரவுபடி கணிசமான டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டன. இதனால் மற்ற கடைகளில் கூட்டம் அதிகமாக உள்ளது. இதன் காரணமாக காலி மது பாட்டில்களை வாங்குவதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே இந்த திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். எங்களுடைய கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும்' என்றார்கள். கடந்த 3 நாட்களாக டாஸ்மாக் கடைகள் பல இடங்களில் மூடப்பட்டதால். மதுவாங்க முடியாமல் மதுப்பிரியர்கள் திண்டாட்டம் அடைந்துள்ளனர். பலர் மனமகிழ் மன்றங்களில் மதுவாங்க குவிந்தனர். அப்படி மதுவாங்க சென்றவர்கள் அளித்த புகாரின் பேரில் தான் துணை சபாநாயகர் ரவிசங்கர் நடத்தினார்.
-
இது லிஸ்ட்லயே நம்ம இல்லையே! மொத்தமாய் மாற்றும் விஜய்.. தனியார் கைக்கு போகும் டாஸ்மாக்! எப்போது? -
திருச்சிக்கு ஓடி வந்த தென் கொரிய நிறுவனம்.. ஒரே திட்டம் 13000 பேருக்கு வேலை.. அடிசக்க! -
“வெறும் காகிதத்தில் மட்டுமே 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதா?”.. முதல்வர் விஜய்க்கு பாஜக கேள்வி! -
தாமிரபரணி ஆற்றில் ஜாலியோ ஜாலி.. ட்ரோன் கேமராவில் சிக்கிய நவத்திருப்பதி யானைகள் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு!












Click it and Unblock the Notifications