இளைஞர்களுக்கு ‘ஜாக்பாட்’: திருச்சியில் விரைவில் வரப்போகுது டைடல் பார்க்.. டெண்டர் கோரியது தமிழக அரசு
திருச்சி: திருச்சியில் ரூ. 600 கோடி மதிப்பில் டைடல் பூங்கா அமைக்க தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியுள்ளது. திருச்சி- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ஒருங்கிணைந்த புதிய பேருந்து நிலையம் அமைய உள்ள இடத்தில் புதிய டைடல் பூங்கா அமைய உள்ளது. இதற்கான டெண்டரை தற்போது தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரின்போது, தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை தொடர்பான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தின்போது தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி, ரூ.600 கோடியில் திருச்சியில் டைடல் பூங்கா அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

தமிழ்நாடு எலக்ட்ரானிக் கார்ப்பரேஷன் (எல்காட்) மற்றும் தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் (டிட்கோ) ஆகியவற்றுக்கு இடையேயான அரசுக்கு சொந்தமான இடங்களை டைடல் பார்க் லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்குவதற்காக பஞ்சப்பூரில் உள்ள 8.9 ஏக்கர் நிலத்தை திருச்சி மாநகராட்சி இறுதி செய்துள்ளது.
கடந்த ஏப்ரல் மாத இறுதியிலேயே Tidel Park Limited நிர்வாகம் திருச்சி மாநகராட்சிக்கு கடிதம் அனுப்பியது. திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி, பஞ்சப்பூரில் 10 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த விருப்பம் தெரிவித்தது. சாத்தியமான இடங்களை பலமுறை ஆய்வு செய்த நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு, பஞ்சப்பூர் வருவாய் கிராமத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான 8.9 ஏக்கர் நிலம் முன்மொழியப்பட்ட திட்டத்திற்கு ஏற்றது என முடிவு செய்தது. நில பரிமாற்றத்திற்கு திருச்சி மாநகராட்சி ஒப்புதல் அளித்தது.

இந்நிலையில் திருச்சியில் ரூபாய் 600 கோடி மதிப்பில் டைடல் பூங்கா அமைக்க டெண்டர் கோரியுள்ளது தமிழ்நாடு அரசு. அக்டோபர் 26ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 10,000 பேர் பணியாற்றும் வகையில் அலுவலகம், கூட்ட அரங்கு உள்ளிட்டவை அமைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. திருச்சி- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ஒருங்கிணைந்த புதிய பேருந்து நிலையம் அமைய உள்ள இடத்தில் புதிய டைடல் பூங்கா அமைய உள்ளது.
திருச்சியில் டைடல் பார்க் அமையும்போது, திருச்சியை சுற்றியுள்ள பல மாவட்டங்களைச் சேர்ந்த கிராமப்புற இளைஞர்கள் ஐ.டி துறையில் வேலைவாய்ப்பைப் பெற முடியும். 10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் ஐடி தொழில் பூங்காவால் திருச்சியில் ஐடி வளம் பெருகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications