Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தனி வாக்குச்சாவடி.. சூப்பரா ஓட்டு போட்டோம்.. அரசுக்கு கோடி நன்றி.. பார்வையற்றவர்கள் நெகிழ்ச்சி!

Subscribe to Oneindia Tamil

திருச்சி: தனி வாக்குச்சாவடி அமைத்து ஓட்டு போடுவதற்கு வசதி செய்து கொடுத்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவிப்பதாக பார்வையற்றவர்கள் கூறினார்கள்.

தமிழகம் முழுவதும் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்புடன் நேற்று நடந்து முடிந்தது. கொரோனா தொற்று பரவி வருவதால் இது தொடர்பான நடவடிக்கைகள் வாக்குச்சாவடியில் எடுக்கப்பட்டு இருந்தன.

இதேபோல் பார்வையற்றவர்கள் ஓட்டுப்போடுவதற்கு வசதியாக சிறப்பு வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டு இருந்தன.

பார்வையற்றவர்களுக்கு சிறப்பு வாக்குச்சாவடி

பார்வையற்றவர்களுக்கு சிறப்பு வாக்குச்சாவடி

திருச்சி மாவட்டத்தில் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நாகமங்கலம் கிராமத்தில் சுமார் 250-க்கும் மேற்பட்ட பார்வையற்ற குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் வாக்களிப்பதற்காக நாகமங்கலத்தில் காந்திநகர் என்ற இடத்தில் சிறப்பு தனி வாக்குச்சாவடி அமைக்கப்பட்டு இருந்தது. இந்த வாக்குச்சாவடியில் உள்ள மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 115. இவர்களில் ஆண் வாக்காளர்கள் 65, பெண் வாக்காளர்கள் 50. இவர்கள் அனைவருமே பார்வையற்றவர்கள்.

 பிரெய்லி முறையில் படிவங்கள்

பிரெய்லி முறையில் படிவங்கள்

இந்த வாக்கு சாவடியில் பார்வையற்றவர்கள் யாருடைய உதவியும் இன்றி பிரெய்லி முறையில் அவர்களாகவே வேட்பாளரின் பெயர் மற்றும் சின்னங்களை தெரிந்துகொண்டு வாக்கு அளிப்பதற்கு வசதியாக படிவங்களும் வைக்கப்பட்டிருந்தன. இதனால் பார்வையற்றவர்கள் ஆர்வத்துடன் வந்து தங்களது ஜனநாயக கடமையை செய்தனர். இது தொடர்பாக வாக்களித்த பார்வையற்றவர்கள் சிலர் கூறியதாவது:- எல்லா தேர்தல்களிலும் வாக்களித்து நாங்கள் ஜனநாயக கடமையை ஆற்றி வருகிறோம்.

சிரமம் அடைந்தோம்

சிரமம் அடைந்தோம்

நாங்கள் வாக்குச்சாவடிக்கு செல்லும்போது ''கண் தெரியாதவர் வருகிறார் ஒதுங்கிக்கொள்ளுங்கள்'' என்று யாராவது எங்கள் மீது பரிதாபப்பட்டு வழி விடுவார்கள். சிலர் ''வரிசையில் நின்று ஓட்டு போடுங்கள் எங்களுக்கும் வேலை இருக்கிறது'' எனக்கூறுவார்கள். அந்த வகையில் முண்டியடித்துக்கொண்டு சென்று தான் நாங்கள் வாக்களிக்க வேண்டிய நிலைமை இருந்தது.

தமிழக அரசுக்கு நன்றி

தமிழக அரசுக்கு நன்றி

கடந்த நாடளுமன்ற தேர்தலில் எங்களுக்கு தனி வாக்கு சாவடி அமைத்து கொடுத்து இருப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. தற்போது முதன் முறையாக சட்டமன்ற தேர்தலில் நாங்கள் தனி வாக்கு சாவடியில் வாக்களித்துவிட்டு வந்திருக்கிறோம் . எங்களுக்கு தனி வாக்கு சாவடி அமைத்து கொடுத்த அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்று அவர்கள் கூறினார்கள்.

 வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு

வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு

திருச்சி மாவட்டத்தில் நேற்று வாக்குபதிவின் போது பல்வேறு இடங்களில் வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டது. மருங்காபுரி ஒன்றியப்பகுதியில் உள்ள கோட்டைப்பளுவஞ்சியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வாக்குப்பதிவு எந்திரம் பழுது அடைந்ததால் சுமார் 2 மணி நேர தாமதத்திற்கு பின்னர் 9 மணி அளவில் வாக்குப்பதிவு தொடங்கியது.

 வாக்காளர்கள் இடையே சலசலப்பு

வாக்காளர்கள் இடையே சலசலப்பு

துறையூரில் ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி, தா.பேட்டை அருகே ஆண்டிப்பட்டி அரசுபள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குசாவடி, திருச்சி பீமநகர் ஹீபர்ரோட்டில் செவன்த்டே பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு எந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. இதனால் இந்த இடங்களில் வாக்காளர்கள் இடையே சிறு சலசலப்பு ஏற்பட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+