திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

உரிக்காமலேயே கண்ணீர் வரும் போலயே! துண்டு விழும் பட்ஜெட்..சதம் அடித்த சின்ன வெங்காயத்தின் பெரிய விலை!

Google Oneindia Tamil News

திருச்சி : தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் வரத்து குறைவு மற்றும் தேவை அதிகரிப்பு காரணமாக திருச்சி உள்ளிட்ட சில மாவட்டங்களில் வெங்காயத்தின் விலை 100 ரூபாய் தொட்டுள்ளதால் இல்லத்தரசிகள் கவலை அடைந்துள்ளனர்.

மழைக்காலம் வந்து விட்டாலே போதும் இல்லத்தரசிகளுக்கு எந்த கவலை வருகிறதோ இல்லையோ.. தக்காளி வெங்காயம் உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலை உயர்வு அவர்களை பெரும் கவலையில் ஆழ்த்தி விடும்.

மழை காரணமாக வரத்து குறைவு தேவை அதிகரிப்பு இடைத்தரகர்கள் தலையீடு உள்ளிட்ட காரணங்களால் அக்டோபர் முதல் ஜனவரி மாதம் வரையிலான காலகட்டத்தில் வெங்காயத்தின் விலை உச்சம் தொடும் கடந்த ஆண்டுகளில் தங்கத்தைப் போல வெங்காயத்தின் விலையும் கிடுகிடுவென உயர்ந்தது.

வெங்காயத்தில் பெரிய வெங்காயம் சாம்பார் வெங்காயம் எனப்படும் சின்ன வெங்காயம் இல்லாமல் பெரும்பாலான உணவுப் பொருட்களை சமைக்க முடியாது. சாம்பார், புளி குழம்பு, மாமிசம், ஏன் சட்னி வகைகளுக்கு கூட வெங்காயத்துடன் சேர்ந்து சமைத்தே மக்கள் பழகி விட்டனர்.

இந்து பெண்களை இழிவுபடுத்தும் மனு? வார்த்தையை விட்ட நாராயணன்! மாட்டிகிட்டீங்களே.. திருமா பக்கா மூவ்! இந்து பெண்களை இழிவுபடுத்தும் மனு? வார்த்தையை விட்ட நாராயணன்! மாட்டிகிட்டீங்களே.. திருமா பக்கா மூவ்!

சின்ன வெங்காயம்

சின்ன வெங்காயம்

மகாராஷ்டிரா உள்ளிட்ட சில பல மாநிலங்களிலும் தமிழ்நாடு ஆந்திரா கர்நாடகா உள்ளிட்ட தென் மாநிலங்களில் சின்ன வெங்காயம் அதிக அளவு சாகுபடி செய்யப்படுகிறது. தமிழகத்தை பொறுத்தவரை திண்டுக்கல், தேனி, கோவை, நாமக்கல், கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஒரு லட்சம் ஏக்கருக்கு மேல் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது. ஆண்டுக்கு சராசரியாக 4 லட்சம் டன் சின்ன வெங்காயம் உற்பத்தி செய்யப்படும் நிலையில் சிங்கப்பூர் இலங்கை மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கும் ஏற்றுமதி ஆகிறது.

விலை அதிகரிப்பு

விலை அதிகரிப்பு

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் விலை 100 ரூபாய் கடந்த நிலையில் வெளிநாடுகளில் இருந்து பெரிய வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டது. இந்நிலையில் தற்போது மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் வரத்து குறைவு மற்றும் தேவை அதிகரிப்பு காரணமாக சின்ன வெங்காயத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது. மதுரை திண்டுக்கல் திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் மிகப்பெரிய வெங்காய மார்க்கெட் இருக்கும் நிலையில் தரத்தை பொறுத்து 75 ரூபாய் முதல் 90 ரூபாய் வரை வெங்காயம் விற்பனையானது, மேலும் தொடர்ந்து வரத்து குறைந்து வந்ததால் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக வியாபாரிகள் கூறினர்.

விலை சதம்

விலை சதம்

இந்நிலையில் எதிர்பார்த்தது போலவே சின்ன வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ளது. தற்போது திருச்சி மாவட்டத்தில் வெங்காயத்தின் விலை 100 ரூபாயை தொட்டுள்ளது. அங்குள்ள வெங்காய மார்க்கெட்டில் தரத்தை பொறுத்து வெங்காயம் விலை 80 ரூபாய் முதல் 100 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சுமார் 500 டன்கள் வெங்காயம் வர வேண்டி நிலையில் 200 முதல் 250 டன் வரை மட்டுமே வெங்காயம் வரத்து இருப்பதாகவும் இதனால் வெங்காயம் 13 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளதாக கூறுகின்றனர்.

கோரிக்கை

கோரிக்கை

அதே நேரத்தில் விவசாயிகளிடம் மிகக் குறைந்த விலையிலேயே வெங்காயம் கொள்முதல் செய்யப்படுவதாகவும் இடைத்தரகர்களின் கமிஷன் சட்டவிரோத பதுக்கல் காரணமாக வெங்காயம் விலை அதிகரித்துள்ளதாக கூறுகின்றனர். மேலும் வரும் நாட்களில் வெங்காயத்தின் விலை இன்னும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படும் நிலையில் இல்லத்தரசிகள் கவலை அடைந்துள்ளனர். எனவே விலையை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கோரிக்கை எழுந்துள்ளது.

English summary
Housewives are worried as the price of onion has touched 100 rupees in some districts including Trichy due to lack of supply and increase in demand due to continuous rains in Tamil Nadu for the past few days.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X