Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழ்நாட்டில் பாஜக போடும் ஆட்டம்.. முதல் காரணமே எடப்பாடி பழனிசாமிதான்.. திருமாவளவன் அட்டாக்!

Subscribe to Oneindia Tamil

திருச்சி: தமிழ்நாட்டில் பாஜக இவ்வளவு தூரம் ஆட்டம் போடுவதற்கு அதிமுகவே முதன்மை காரணம் என்று விசிக தலைவர் திருமாவளவன் விமர்சித்துள்ளார். பாஜகவை அதிமுக தோளில் தூக்கி சுமந்து வருவதாக கூறிய திருமாவளவன், விஜய் மற்றும் சீமான் ஆகியோர் ஆர்எஸ்எஸ் முகமூடி அணிந்து தமிழ்நாட்டில் செயல்பட்டு வருவதே நிதர்சனமான உண்மை என்றும் கூறியுள்ளார்.

சட்டசபைத் தேர்தல் நெருங்கிவிட்ட சூழலில், திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிக இம்முறை இரட்டை இலக்கத்தில் போட்டியிட தீவிரமாக இருந்து வருகிறது. அதற்கேற்ப விசிகவுக்கு சாதகமான தொகுதிகளில் திருமாவளவன் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளார். கடந்த முறை 6 தொகுதிகளில் போட்டியிட்ட விசிக, இம்முறை 10 தொகுதிகளில் போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Thirumavalavan vs Vijay

ஆனால் விஜய்யின் வருகை விசிகவுக்கு பின்னடைவை உருவாக்கி இருக்கிறது. தலித் வாக்கு வங்கி மட்டுமல்லாமல் வட மாவட்டங்களில் விஜய் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், எதிர்க்கட்சிகள் ஒரு கூட்டணியாக உருவாக முடியாத அளவிற்கு சிதறி இருக்கின்றனர்.

அவர்களிடையே ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. ஒருங்கிணையவே முடியாத சூழலில், திமுக கூட்டணியை வீழ்த்துவோம் என்று கூறிவது நகைப்புக்குரியதாக இருக்கிறது என்றார். தொடர்ந்து, வடமாநிலங்களில் கிறிஸ்தவ மக்கள் மீது வலதுசாரிகள் தாக்குதல்; நடத்தி இருக்கின்றனர். இதற்காகதான் தமிழ்நாட்டில் பாஜக வளரக் கூடாது என்று சொல்கிறோம்.

மதவாத சக்திகள் எவ்வளவு மோசமானவர்கள் என்பதற்கு இதுவும் ஒரு சான்று. ஆர்எஸ்எஸ், பஜ்ரங் தள், ஹனுமன் சேனா, விஷ்வ இந்து பரிஷத் உள்ளிட்ட அமைப்புகள் கிறிஸ்தவ மக்களை தாக்குகின்றனர். இப்படி நடக்கிறது என்று பிரதமர் மோடிக்கு தெரியும். அதனால்தான் அவர் கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்றுள்ளார். தமிழ்நாட்டில் பாஜக வளர்வதற்கு அதிமுக உள்ளிட்ட கட்சிகள் காரணமாக இருக்கின்றன.

அவர்களுக்கு சில அமைப்புகளும் துணையாக போகின்றன. இவர்கள் அனைவரும் சேர்ந்து மதவெறியர்களை தமிழ்நாட்டில் காலூன்ற வைக்கப் போகிறார்கள். தமிழ்நாட்டில் இந்த அவலம் அரங்கேறும் நாள் வெகு தொலைவில் இல்லை. அதேபோல் சனாதன சக்திகளுக்கு துணைப் போகும் வழியில் சீமான், விஜய் செயல்படுகின்றனர். அதில் எந்த சந்தேகமும் இல்லை.

அவர்களின் செயல்திட்டம், அரசியல் போக்கு அனைத்து பாஜக, ஆர்எஸ்எஸ்க்கு துணை போகும் வகையில் இருக்கிறது. அதுவே யதார்த்தமான உண்மை. விஜய் தனித்து இயங்குகிறோம், திராவிட அரசியலை பேசுகிறோம் என்று சொல்கிறார்கள். ஆனால் இதுவரை பாஜக, ஆர்எஸ்எஸ் பற்றி விஜய் வாய் திறந்திருக்கிறாரா? கொள்கை எதிரி என்று சொல்லும் விஜய், கிறிஸ்தவ மக்கள் மீதான தாக்குதல் பற்றி பேசி இருக்கிறார்?

ஆனால் விஜய்யால் கண்டிக்க முடியாது. பிராமண கடப்பாரையை கொண்டு பெரியார் இருப்பை தகர்ப்பேன் என்று சீமான் பேசுகிறார். இதனை வேடிக்கை பார்க்க முடியாது. இதுதான் ஆர்எஸ்எஸ்-ன் அரசியல். இவ்வளவு நாம் சீமான் தமிழ் தேசியம் பேசுகிறார் என்று நினைத்தோம். ஆனால் சீமான் பேசுவது சனாதன தேசியம். இதனை அவரே ஒப்புக் கொள்கிறார். இது திமுக என்ற கட்சிக்கு எதிரான கருத்து அல்ல..

இது நாங்கள் பேசும் அரசியலுக்கே எதிரானது. சீமான் பெறுவது திமுக எதிர்ப்பு வாக்குகள் தான். அதனை எம்ஜிஆர், ஜெயலலிதா, வைகோ, ராமதாஸ், விஜயகாந்த் உள்ளிட்டோரும் பெற்றுள்ளனர். ஆனால் ஆர்எஸ்எஸ் முகமூடியுடன் சீமான், விஜய் வந்துள்ளனர். தமிழ்நாட்டில் பாஜக ஆட்டம் போடுவதற்கு காரணமே அதிமுக தான். அந்தக் கட்சியை அதிமுக தோளில் சுமந்து வருகிறது என்று தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+