ராமதாஸ் நேரத்திற்கு ஒன்னு பேசுறாரு.. அவர் கருத்தில் நிலையா இருக்கணும்.. தொல் திருமாவளவன் அட்டாக்!
திருச்சி: 25 ஜாதிகளின் பெயர்களை ஒன்றிய அரசின் பட்டியலில் சேர்க்கக் கோரும் விவகாரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் நேரத்திற்கு ஒன்றை பேசுகிறார். அவரது கருத்தில் நிலையாக இருந்தால் சரி என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அவர் கூறுகையில் திமுக தலைமையிலான அரசு சமூக நீதிக்கான அரசு. பெரியார் கண்ட கனவை, அனைத்து சாதியினரும் அர்ச்சகர்கள் ஆகலாம் என்கிற திட்டத்தை நிறைவேற்றி உள்ளது. இந்திய வரலாற்றில் இது மாபெரும் சமூக புரட்சி. இந்தியாவிற்கே இது வழிகாட்டும் நிகழ்வு.

21 கட்சிகள்
இதை பலர் எதிர்க்கின்றார்கள் - இந்துக்களை தான் நியமிக்கின்றனர். ஆனால் இதற்கு பலர் கூக்குரல் இடுகிறார்கள். நீதிமன்றம் செல்வோம் என அச்சுறுத்துகிறார்கள். ஆனால் தி.மு.க தலைவர் இதற்கெல்லாம் அஞ்ச மாட்டோம். நேற்று 21 கட்சிகளை சேர்ந்தவர்கள் சோனியா காந்தி அவர்கள் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டோம்.

பெகாசஸ் பிரச்சினை
விடுதலை சிறுத்தைகள் சார்பில் பெகாசாஸ் பிரச்சினை குறித்து முன் வைத்தோம். தற்போதைய சூழலில் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய முற்றுமை தான் முக்கியமே தவிர அடுத்த பிரதமர் யார் என்பதை முடிவு செய்ய கட்டாயம் இல்லை. சிஏஏ, உபா குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராடியவர்கள் மீது போடப்பட்ட தேச துரோக வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது. விடுதலை சிறுத்தைகள் சார்பில் பெகாசாஸ் பிரச்சினை குறித்து முன் வைத்தோம். தற்போதைய சூழலில் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய முற்றுமை தான் முக்கியமே தவிர அடுத்த பிரதமர் யார் என்பதை முடிவு செய்ய கட்டாயம் இல்லை. சிஏஏ, உபா குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராடியவர்கள் மீது போடப்பட்ட தேச துரோக வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது.

வன்கொடுமை தடுப்பு கண்காணிப்பு கூட்டம்
தமிழகத்தில் நீண்ட நாட்களுக்கு பின்னர் வன்கொடுமைகள் தடுப்பு கண்காணிப்புக் கூட்டம் நடைபெற்றது. ஆண்டுக்கு 2 முறை கூட்ட வேண்டிய கூட்டம் கூட்டப்படாமல் தற்போது கூட்டப்பட்டு உள்ளது. சமூக நீதி சமூகங்களை ஒன்றிணைக்க விடாமல் மோடி அரசு தடுக்கிறது. schedule caste என்கிற அடிப்படையில் அணி திரள கூடாது என பாஜக திட்டமிட்டு காய் நகர்த்துகிறது.

25 சாதிகளின் பெயர்கள்
மக்கள் சமூக நீதி பேரவை என்கிற அமைப்பு திருச்சியில் அனைவரையும் ஒருங்கிணைத்து வருகிறது. இன்று அவர்கள் எனக்கு விருது வழங்க உள்ளனர். 25 சாதிகளின் பெயர்கள் ஒன்றிய அரசின் பட்டியலில் இடம் பெறவில்லை. இதை நாங்கள் சேர்க்க வலியுறுத்தி உள்ளோம். இது குறித்து முதல்வரிடமும் முன் வைத்துள்ளோம். ராமதாஸ் நேரத்திற்கு ஒன்றை பேசுகிறார். அவரது கருத்தில் அவர் நிலையாக நின்றால் சரி என்றார்.

புளியந்தோப்பு குடிசை மாற்று வாரியம்
சென்னை புளியந்தோப்பு குடிசை மாற்று வாரிய கட்டிடங்கள் குறித்த கேள்விக்கு, அவர் கூறுகையில் இது குறித்து முதல்வரிடத்தில் மனு அளித்துள்ளோம். ஐ.ஐ.டி வல்லுனர்கள் அடங்கிய குழு ஆய்வு செய்து வருகிறது. அவர்களின் அறிக்கைக்கு பின்னர் எல்லாவற்றையும் சரி செய்து தான் அங்கு மக்களை அமர்த்துவார்கள்.

கட்டடம் அலட்சியம்
ஒப்பந்ததாரர்கள் இது போன்று கட்டடத்தை அலட்சியத்துடன் கட்டி உள்ளனர். அடித்தட்டு மக்கள் என்பதாலே இவர்கள் இவ்வளவு மோசமாக கட்டி உள்ளனர். இனி அந்த ஒப்பந்ததாரர்கள் எங்குமே பணி செய்ய கூடாது. அதே போல் அவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவோம். பெண்களும் அர்ச்சகர் ஆகலாம் என்கிற திட்டத்தை கொண்டு வரவேண்டும் என வலியுறுத்துகிறோம்.

முன்னாள் முதல்வர், துணை முதல்வர்
கொடநாடு விவகாரம் தொடர்பாக முன்னாள் முதல்வரும், முன்னாள் துணை முதல்வரும் ஏன் பதற வேண்டும். அவர்களுக்கு தொடர்பு இல்லை என்றால் அச்சப்பட தேவை இல்லை. இந்த வழக்கு தொடர்பாக ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் அவர்களிடம் விசாரணை செய்ய வேண்டும் என்று தமிழக அரசு நினைத்தால் அதற்கு முழுமையான ஒத்துழைப்பு தருவது ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆகியோரின் கடமை என்றார் திருமாவளவன்.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர்
ஜீயர் எதிர்ப்பு: இந்த நிலையில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற தமிழக அரசின் உத்தரவிற்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூரில் உலக பிரசித்தி பெற்ற ஸ்ரீ ஆண்டாள் கோவில் உள்ள மணவாள மாமுனிகள் மடத்தின் ஸ்ரீ ஸ்ரீ ஶ்ரீ சடகோப ராமானுஜ ஜீயர் தமிழக அரசை வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்தார். இந்துக் கோவில்களில் ஆகம விதிப்படி பூஜைகள் நடைபெற வேண்டும். நடைமுறைகளை மாற்ற கூடாது என உச்சநீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆணையை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும் என தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications